நான் ஒரு எழுத்தாளன் என்பதைவிடவும் அடிப்படையில் ஒரு வாசகன். அந்த வாசிப்பின் பலத்தில் சொல்கிறேன். இந்தத் தொகுப்பில் உள்ள பல கதைகள் சர்வதேசத்தரம் வாய்ந்தவையாக உள்ளன. கார்ல் மார்க்ஸ் தன்னுடைய முதல் சிறுகதைத் தொகுதியிலேயே தமிழ் இலக்கிய உலகில் மிக வலுவான தடத்தைப் பதித்திருக்கிறார் என்று சொன்னால் அது சம்பிரதாய வார்த்தைகளாகப் போய் விடும்.
ஜி.கார்ல்மார்க்ஸ் (நவம்பர் 20, 1974) தமிழில் கதைகளும் அரசியல் கட்டுரைகளும் எழுதிவரும் எழுத்தாளர். தஞ்சை, கும்பகோணம் பகுதியின் களத்தில் கதைகளை உருவாக்குபவர். பகடியும் நுண்வாழ்க்கைச் சித்தரிப்பும் கொண்ட எழுத்துமுறை உடையவர்.
ஒரு சிறுகதை என்பது ஆழ்ந்த வாசிப்பையும் கவனத்தையும் பெற்றுக்கொண்டு மெல்லிய உணர்வுகளின் வழியே ஒரு புற உலகை விரித்துக்காட்டுவதில் இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே அந்தக்கலையை லாவகத்துடன் கையாண்டிருக்கிறார் கார்ல் மார்க்ஸ். விளிம்புநிலை சம்பவங்களை கோர்த்து, அதன் ஊடே மெல்லிய உணர்வுகளின் வழி மானிடத்தை வடித்திருக்கிறார். ஒரு சிறு பகுதி கூட அவசியமில்லாமல் சேர்க்காமல் கச்சிதமாக வடித்தெடுத்த ஒழுங்கு, படிக்கும் போது மைய நீரோட்டத்துடன் சரக்கென்று ஒட்டிக்கொள்ள வைப்பதுடன் இல்லாமல், கடைசி வரிகளில் அந்த உணர்வின் தாக்கத்தை படித்து முடித்த பின்பும் எதிரொளிக்கச் செய்கிறது. சமகால எழுத்துலகில் மர்க்ஸ்சின் இருப்பை அழுத்தமாக உறுதிப்படுத்தும் தொகுப்பு.
ஒரு சிறுகதை என்பது ஆழ்ந்த வாசிப்பையும் கவனத்தையும் பெற்றுக்கொண்டு மெல்லிய உணர்வுகளின் வழியே ஒரு புற உலகை விரித்துக்காட்டுவதில் இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே அந்தக்கலையை லாவகத்துடன் கையாண்டிருக்கிறார் கார்ல் மார்க்ஸ். விளிம்புநிலை சம்பவங்களை கோர்த்து, அதன் ஊடே மெல்லிய உணர்வுகளின் வழி மானிடத்தை வடித்திருக்கிறார். ஒரு சிறு பகுதி கூட அவசியமில்லாமல் சேர்க்காமல் கச்சிதமாக வடித்தெடுத்த ஒழுங்கு, படிக்கும் போது மைய நீரோட்டத்துடன் சரக்கென்று ஒட்டிக்கொள்ள வைப்பதுடன் இல்லாமல், கடைசி வரிகளில் அந்த உணர்வின் தாக்கத்தை படித்து முடித்த பின்பும் எதிரொளிக்கச் செய்கிறது. சமகால எழுத்துலகில் மார்க்ஸ்சின் இருப்பை அழுத்தமாக உறுதிப்படுத்தும் தொகுப்பு.
மனிதர்களின் வெவ்வேறு உணர்வுகளின் உச்சபட்சம் வெளிப்படும் தருணங்களை அதிர்வுகுறையாமல் படமாக்கிய Wild Tales படம் பிடிக்குமா?!
ஜே.பி.சாணக்யாவின் சிறுகதைகளின் முடிவுகள் தரும் மீளமுடியாத அதிர்ச்சி பிடிக்குமா?!
எனில் இப்புத்தகத்தை வாசித்துப்பார்க்கலாம். ("முன்னுரைகள் எப்போதும் சம்பிரதாயமானவை" என ஒதுக்கிவிடாமல், இப்புத்தகத்திற்கு சாரு எழுதிய முன்னுரையை அவசியம் படிக்கவும்)
காமம், அன்பு, நெகிழ்ச்சி, ஏமாற்றம் என இதன் கதைகள் உணர்வுபுரம்மாக உங்களை ஒரு குலுகுகு குலுக்கி விடும். சாதாரண மனிதர்களின் மனதின் தாண்டவம் இதன் கதைகள். "you cannot just dream yourself into a character, you must hammer and forge for oneself" என்று ஒரு சின்தனையாளன் கூறியது நினைவுக்கு வருகிறது.
பத்து சிறுகதைகளின் தொகுப்பு. ஒவ்வொரு கதையும் காதல் காமம், அன்பு, பரிதவிப்பு, ஏமாற்றம், வெறி, நட்பு, பாசம் என்று வெவ்வேறு உணர்ச்சிகளின் கலவை. படிக்கும் போது கொஞ்சமும் சலிப்பு தட்டாத எளிமையான அதே சமயத்தில் விறுவிறுப்பான எழுத்து நடை.
Set of short stories which potrays minute emotions
All the short stories speaks about minute human emotions and actions. Not all, but some stories of this book gives a unique feeling on human Actions and relationship. Best book for those who love reading stuff related to relationship.