கதைகள், கவிதைகள், சமூக ஊடகப் பதிவுகள், பத்திரிகைக் கட்டுரைகள் என பல வடிவங்களில் எழுதப்பட்டிருக்கும் கிரீஷின் இந்த எழுத்துகள் தொகுப்பாக தமக்கென ஒரு கதையாடலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. காதல், அரசியல், சமூக ஊடகங்கள், சினிமா என பல்வேறு தளங்களில் பல ஒருபாலீர்ப்பாளர்களின் திருநர்களின் பங்களிப்புகள், சித்தரிப்புகள் அதன் அரசியல் குறித்த ஒடுக்கப்பட்ட ஒரு குரலின் வெளிப்பாடாகவும், சாட்சியமாகவும் இப்பதிவுகள் திகழ்கின்றன. கூடவே, முகமூடிகள், ஒடுக்கப்பட்டிருக்கும் ஒரு சமூகத்திற்குள் செயல்படும் சாதிப் படிநிலைகள், முந்திரி மணம் வீசும் காதல் பற்றிய எழுத்துகளையும் இப்புத்தகம் கொண்டிருக்கின்றது. “யட்சிகளுக்கு மட்டுமே தெரியும், குப்பிகளில் அடைபட&#
நான் சோர்வாக உணர்கிறேன்… ஒரு ஒடுக்கப்பட்டவளின் உடலுக்குள் ஆதிக்க சாதி ஆண்குறி திணிக்கப்படும்போது… ஒரு திருநங்கையின் பிறப்புறுப்பில் அதிகார வர்க்க லத்தி புகுத்தப்படும்போது… ஒரு இஸ்லாமியனின் கழுத்தில் மதவாத தூக்குக்கயிறு இறுக்கப்படும்போது… ஒரு தாழ்த்தப்பட்டவனின் தலை உயர்சாதி ரயிலால் நசுக்கப்படும்போது… நான் சோர்வாக உணர்கிறேன்… ஏனெனில், என்னால் எளிதாக செய்ய முடிவது சோர்வாக உணர்வதை மட்டுமே…
பொழுதுபோகாத அவள் நவம்பர் ஒன்பதாம் தேதி அதிகாலையில் தனது டூவீலரையும், செல்போனையும் காவலர்களுக்கு இனாமாகக் கொடுத்துவிட்டாள்... கல்லால் கழுத்தை அறுத்து சாகப்பார்த்தவள் அதுமுடியாமல் பெட்ரோலை ஊற்றிக் கொளுத்திக்கொண்டாள்... தன்மீது மண்ணை வாரிப்போட்டுக்கொண்டே செத்தும் போனாள்.. புதிய பிங்க் கலர் இரண்டாயிரம் ரூபாயில் சிப் எதுவும் இல்லையாம்... ட்ரம்ப் அமெரிக்க அதிபரானார்...
மழை பெய்யும் ஒரு மாலையில் மண்வாசனையை முகர்ந்தபடி கையில் பெக்கார்டி கோப்பையுடன் நீங்கள் மழையை ரசிக்கக்கூடாது சாலைகளில் வாழ்பவர்களைப்பற்றி துயருற்றிருக்க வேண்டும்.. மன அழுத்ததில் கதறியழும் நண்பனை அணைத்தபடி “எல்லாம் சரியாயிடும்” என தோள்களில் சாய்க்கக்கூடாது அவனுக்கு வாழ்க்கையின் கூறுகளை விளக்கவேண்டும்.. அவர்கள் ஆதிக்கசாதி திமிரை உங்களிடம் காட்டும்போது “போடா மயிரு” எனக்கூறி எழுந்துவரக்கூடாது ஒடுக்கப்படுபவனின் வலிகளை புரியும்படி எடுத்துரைக்க வேண்டும்.. அவர்கள் உங்களைப்பார்த்து “பொட்டை” எனச்சொல்லும்போது அவர்களைப் பார்த்து கோபப்பட்டு “…………..” எனச்சொல்லக்கூடாது புன்னகைத்தவாறே உங்களைப் பற்றி விளக்கத் தெரிந்திருக்க வேண்டும்.. துக்கமான ஒரு மழைக்கால இரவில் யாரையேனும் கட்டிக்கொண்டு உறங்கவேண்டும் எனத் தோன்றினால் அதைச் செய்யவே கூடாது இரவு விளக்கின் வெளிச்சத்தில் எதையாவது எழுத வேண்டும்.. ஏனெனில் நீங்கள் போராளிகள்…