தான் செய்த தவறுக்கு அடுத்தவர்களைப் பலியாடாக்கி தப்பிப்பது சுலபமில்லை.
356 நம்பர் உள்ள இருவீட்டில் கொலைகள் நடந்தேறுகிறது, மூன்றாவதாக ஹோட்டலில் 356 ரூம் நம்பரில் இருக்கும் ஒரு பெண்ணைக் கொலை செய்ய முயலும் போது தப்பித்துப் போகிறாள்.
தனக்குக் கடன் கொடுத்த வைர வியாபாரி அதைத் திருப்பிக் கேட்பதனால் டாக்டர் மைத்ரேயன் அவரைக் கொலை செய்ய முடிவு செய்கிறார். போலீஸ் குழம்ப வேண்டும் என்பதற்காக வேறு ஒரு தெருவில் அதே நம்பர் உள்ள வீட்டில் இருக்கும் கள்ளகாதல் ஜோடியையும் கொன்றுவிடுகிறார்.
காதலன் ராதாகிருஷ்ணனை திருமணம் செய்ய வீட்டைவிட்டு போன வைஷாலி ப்ளூ பிளிம் எடுக்கும் ஆட்களிடம் மாட்டிக்கொள்ள அவர்களை அடித்துவிட்டு தப்பிக்கும் போது ராதாகிருஷ்ணனின் தலையில் அடிப்பட்டு மூளை பாதிக்கப்படுகிறது.
ராதாகிருஷ்ணன் மருத்துவமனையில் கொஞ்சம் கொஞ்சமாகக் குணமாகுவது தெரியாமல் டாக்டர் மைத்ரேயன் தான் செய்த கொலைகளை அவனின் மேல் போட்டு தப்பிக்க முயலும் போது ராதாகிருஷ்ணனின் தெளிவான வாக்குமூலத்தால் மாட்டிக்கொள்கிறார்.