ஒரு காலத்தில் பௌத்தமதம் தமிழ் நாட்டில் சிறப்புற்றிருந்தது. பௌத்தர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டினை மட்டும் ஆராய்வதே எமது முதல் நோக்கமாயிருந்தது. பின்னர், இந்த ஆராய்ச்சி, பௌத்தம் தமிழ் நாட்டில் வந்ததும், வளர்ந்ததும், மறைந்ததுமான வரலாறுகளையும் சுருக்கமாக எழுதும்படி செய்துவிட்டது. பௌத்தரால் தமிழருக்குண்டான நன்மையை ஆராய்வதே இந்நூலின் முதல் நோக்கமாகையாலும், இது தமிழ் மொழி வரலாற்றின் ஒரு பகுதியாகையாலும், இந்நூலுக்குப் பௌத்தமும் தமிழும் என்னும் பெயர் சூட்டப்பட்டது.
மயிலை சீனி. வேங்கடசாமி (பிறப்பு: டிசம்பர் 16, 1900 - இறப்பு: ஜூலை 8, 1980) வரலாற்று ஆய்வாளர். தமிழறிஞர். எழுத்தாளர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ் இலக்கண, இலக்கியங்களை, வரலாற்றை ஆராய்ந்து பல நூல்களை எழுதினார். தமிழுக்கு பௌத்த, சமண சமயங்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றி எழுதிய ஆய்வுகள் முக்கியமானவை.
மயிலை சீனி. வேங்கடசாமி வரலாற்றாய்வு, இலக்கிய வரலாற்று ஆய்வு என்னும் இரு தளங்களில் செயல்பட்டவர். தமிழ், வடமொழி. ஆங்கிலம், திராவிட மொழிகளில் நன்கு தேர்ச்சி பெற்றவர். ஊர்தோறும் சென்று கல்வெட்டு ஆய்வினை மேற்கொண்டார். சுயமாகப் பயின்று கல்வெட்டுகளைப் படிக்கும் திறன் பெற்றார். கோலெழுத்து, கிரந்த எழுத்து, பல்லவர் எழுத்து, பிராமி எழுத்து எனப் பல்வகையான எழுத்து முறைகளை அறிந்தார்.பழைய ஏட்டுச் சுவடிகளை முறையாகப் படிக்கக் கற்றார். தொன்மையான சாசனங்களைச் சேகரித்தார்.
விருதுகள்: 1961-ல், தனது மணி விழாவில் ‘ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்ற பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். 1961-ல், தமிழ் எழுத்தாளர் சங்கம் கேடயம் வழங்கிச் சிறப்பித்தது. 1980-ல், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ பட்டம் வழங்கிப் பாராட்டியது.
சமணமும் தமிழும் போல தகவல் நிரம்பிய விரிவான நூல் இது இல்லை என்பது சற்றே ஏமாற்றம் . பௌத்த வரலாற்று ஆதாரங்கள் தமிழ்நாட்டில் அவ்வளவாக இல்லாதது தான் காரணம் என்று நினைக்கிறன் . கி.மு 300ல் தமிழகத்துக்கு வந்த பௌத்தம் கி.பி 500 வரை வாழ்ந்தாலும் , மெதுவாக வீழ்ச்சியை கி.பி 1400 வரை சந்தித்திருக்கிறது .அசோகரின் மகன் மகிந்தனும் மாமனார் அரிட்டரும் தமிழகத்தில் பௌத்தத்தை பரப்பி இர்ருக்கலாம் என்று ஊகம் சேருகிறார் ஆசிரியர். சங்க இலக்கியங்களும் , வெளிநாட்டவரின் பயண சான்றுரையுமே நமக்கு துணைநிற்கிறது . யுவாங் சுவாங் மதுரையில் பௌத்த விகாரையை கண்டதாக எழுதுகிறார் . ஐரோப்பியர்கள் நாகப்பட்டினத்தில் பௌத்த விகாரங்களை கண்டதாக சொல்கிறார்கள் . சமணமதம் போலவே இந்துமதம் பல விஷயங்களை பௌத்தத்திடம் வாங்கியுள்ளது . 1.வைணவர்கள் புத்தரை விஷ்ணுவின் அவதாரம் என்றனர் 2.சைவசித்தாங்கிகள் அவரை ஒரு தேவர் என்றும், முருகன் என்றும், தர்மராஜா என்றும் சொன்னார்கள் 3.உயிர் கொலை நீக்குதல் 4.அரசமரத்தை தொழுதல் 5.மடங்கள் அமைத்தல் 6.சங்கராச்சாரியாரின் அட்வைதம் புத்தரின் போதனைகளின் தழுவல் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்
இதை எல்லாம் விட தமிழ் மங்கைக்கு ஆபரணங்களை அணிவித்து அழகுபார்த்த இரண்டு மதங்களில் ஒன்று பௌத்தம் . 1.மணிமேகலை 2.வளையாபதி 3.குண்டலகேசி இவை மூன்றையும் இயற்றியவர்கள் பௌத்தர்கள் .அதே போல சமணம் தன பங்குக்கு அதையே செய்தது . கீழ்கண்டவைகளை இயற்றியவர்கள் சமணர்கள் . 4.சிலப்பதிகாரம் (சிலம்பு) 5.சீவகசிந்தாமணி
அறியாமையின் சுவாரசியமான விசயமே அனைத்தையும் அறிந்துவிட்டதாக நம்பிக்கொண்டிருப்பதுதான். அதை பொய்யாக்குவது வாசிப்பே. அதிலும் அபுனைவுகள், குறிப்பாக ஆய்வு நூல்கள். பௌத்தம் குறித்து ஓரளவு தெரியும் என்று நம்பிக்கொண்டிருக்கையில் இந்நூல் படித்த பின்பு அது எவ்வளவு பொய் என்பது புரிந்தது. கட்டுரைத் தலைப்புகளை முதலில் பகிர்கிறேன். 1. பௌத்த மதம் தமிழ்நாடு வந்த வரலாறு 2. பௌத்தம் தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்ற வரலாறு 3. பௌத்த மதம் மறைந்த வரலாறு 4. பௌத்த திருப்பதிகம் 5. பௌத்தமும் தமிழும் 6. தமிழ்நாட்டு பௌத்த பெரியார் 7. பௌத்தர் இயற்றிய தமிழ் நூல்கள் 8. தமிழில் பாளி மொழி சொற்கள் அபுனைவாளர்கள் பெரும்பாலும் அருகிலிருந்து பார்த்தது போலவே எழுதுவார்கள். அதுவே புனைவுத்தன்மையை கொடுத்து விடும். ஆனால் மயிலையார் ஒவ்வொன்றையும் விளக்குகையில் இங்கே இப்படி இருப்பதால் இப்படியாகத்தான் இருக்கும் என ஆய்வாளராகவே அனைத்தையும் சொல்வது பிடித்திருந்த்து. இந்த சிறு புத்தகத்திற்காக அவர் வாசித்த நூல் பட்டியலை பார்த்தாலே மிரட்சியாக இருக்கிறது. அத்தனை சங்கப்பாடல்கள், காப்பியங்கள். ஆங்கிலத்திலிருக்கும் பௌத்தம் சார்ந்த நூல்கள் என அவருக்கு கிட்டிய அத்தனையையும் பயன்படுத்தியிருக்கிறார். நூறாண்டுகளுக்கு முன்பு என்ன வசதி கிடைத்திருக்கும்? இப்போது இணைய யுகத்தில், தேடினால் அனைத்தும் கிட்டும் வசதி அவருக்கு வாய்த்திருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பார் என யோசிக்கிறேன். மேற்சொன்ன கட்டுரைகள் இல்லாமல் துணைக் கட்டுரைகள் பின்னிணைப்பாக கொடுத்திருக்கிறார். அவை இன்னும் சுவாரசியமானவை. எங்கள் ஊரில் ஒரு திரௌபதியம்மன் கோவில் இருக்கிறது. பஞ்ச பாண்டவர்கள் வழிபாடும் இருக்கிறது. எனக்கு அது நம் பண்பாட்டிற்கு துளியும் பொருந்தவில்லையே என்ற எண்ணம் உள்ளுற உண்டு. ஆனால் அது குறித்து தேடவில்லை. இப்புத்தகத்தில் அதற்கு பதில் கிட்டியது. பௌத்தத்தை வைதிகம் செரிக்கும் தருணத்தில் எப்படி பௌத்த பெண் தெய்வங்கள் திரௌபதியாக மாற்றப்பட்டன என்றும் போதி தர்மரை, பாண்டவ தர்மராக மாற்றினார்கள் என்றும் விளக்கியுள்ளார். அதானே பார்த்தேன்? ஒரு சூதாடிக்கு இவ்வளவு மரியாதை இங்கே கொடுக்க மாட்டாங்களே? என்று நினைத்துக் கொண்டேன். சிலப்பதிகாரம் குழு வாசிப்பு சென்றுக் கொண்டிருக்கும் சமயம் மயிலையாரை வாசிப்பதும் அதிலிருந்து அவர் விளக்கங்கள் கொடுப்பதும் பொருந்தி போகிறது. தொ.ப வுக்கு பிறகு இவரை வாசிக்கையில் இவரின் தொடர்ச்சிதான் அவர் என்பதும் விளங்குகிறது. இந்நூலினை அனைவருக்கும் கிடைக்கும்படி செய்த தமிழ் இணையக் கல்விக் கழகத்கிற்கு நன்றி. அறிவைத்தேடி திரிவோருக்கு மயிலையார் நிழல் ஆசுவாசமளிக்கும்.
It's a great work by the scholar மயிலை சீனி வேங்கடசாமி.. A genesis of Buddhism.. A strong document on Buddhism. Every one who wish to start reading an introduction about Buddhism has to read this..really a treasure of Buddhism..