காதல் கொண்ட மனம் வேறு எதையும் நினைப்பதில்லை. அப்படித்தான் ஆர்த்தியும் தன் காதலன் வினோதின் நினைவில் கல்யாணமே வேண்டாம் என இருக்கிறாள். கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கி வருகிறேன் எனச் சென்றவன் ஆண்டுகள் நான்காகியும் வரவில்லை. ஆனால் அவன் நினைவோ ஆர்த்தியின் மனதிலிருந்து போகவே இல்லை. ஒரு மாறுபட்ட சூழலில் வினோதும் ஆர்த்தியும் சந்திக்கிறார்கள். தனக்குத் திருமணமான விவரத்தை சொல்கிறான் வினோத். ஆர்த்தியின் நிலை இனி என்ன? அவளை நாடி வரும் சிவாவுக்கு அவள் என்ன பதில் சொல்லப்போகிறாள்? சிவா மலர்விழி காதல் என்ன ஆகும்? தெரிந்து கொள்ளப் படியுங்கள் "என்னை என்ன செய்து விட்டாய் காதலே?" . எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த நாவல் இது.