காதல் என்பது மனதின் குரல். அதனைக் கேட்டார்கள் நிஷாவும் பரத்தும் அந்த குரலைக் கேட்டு காதலிக்கத்துவங்கும் நேரம் கனவுகள் கலைந்தன. நிஷாவின் குடும்பமே சிதறிப்போனது. அடிக்கு மேல் அடியாக விழ நிஷா திக்கற்று நிற்கிறாள். இவை அனைத்துக்கும் காரணம் பரத் என தெரிய வருகிறது. அது தெரிந்ததும் முற்றிலுமாக விலகுகிறாள் நிஷா. அவள் எங்கே போவாள்? அவள் தம்பி சச்சினின் கனவுகள் என்ன ஆகும்? அப்படி பரத் செய்த தவறு தான் என்ன? காலம் நிஷாவையும் பரத்தையும் ஒன்றாக சேர்க்குமா? இந்தக் கேள்விகளுக்கு விடை தெரிய படியுங்கள் பொன் அந்திச் சாரல் நீ.....