Jump to ratings and reviews
Rate this book

சமணமும் தமிழும்: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம்

Rate this book
முற்காலத்தில், ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே, தமிழ்நாட்டிலே தலைசிறந்திருந்த சமணசமயம் இப்போது மறக்கப்பட்டு விட்டது. சமணசமய வரலாறும், சரித்திரமும் மறக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் போயின. அது மட்டுமன்று, சமண சமயத்தின்மேல் வெறுப்பு உணர்ச்சியும் உண்டாக்கப்பட்டது. இவற்றையெல்லாம் கண்டபோது தமிழ் நாட்டின் வரலாற்றுப் பகுதியாகிய இதனை எழுதிமுடிக்க வேண்டும் என்னும் ஊக்கம் உண்டாயிற்று. இன்னொரு காரணமும் உண்டு. என்னவென்றால், தமிழ்நூல்களைப் படிக்கும் போதும் தமிழ் இலக்கிய வரலாற்றை ஆராயும்போதும் சமணசமயத்தவர், தமிழ் மொழிக்குச் செய்திருக்கும் சிறந்த தொண்டுகளைக் கண்டேன். சமண சமயத்தவர் செய்துள்ள தொண்டுபோல அவ்வளவு அதிகமான தொண்டுகளை வேறு சமயத்தவர

292 pages, Kindle Edition

First published January 1, 1954

13 people are currently reading
84 people want to read

About the author

மயிலை சீனி. வேங்கடசாமி (பிறப்பு: டிசம்பர் 16, 1900 - இறப்பு: ஜூலை 8, 1980) வரலாற்று ஆய்வாளர். தமிழறிஞர். எழுத்தாளர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ் இலக்கண, இலக்கியங்களை, வரலாற்றை ஆராய்ந்து பல நூல்களை எழுதினார். தமிழுக்கு பௌத்த, சமண சமயங்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றி எழுதிய ஆய்வுகள் முக்கியமானவை.

மயிலை சீனி. வேங்கடசாமி வரலாற்றாய்வு, இலக்கிய வரலாற்று ஆய்வு என்னும் இரு தளங்களில் செயல்பட்டவர். தமிழ், வடமொழி. ஆங்கிலம், திராவிட மொழிகளில் நன்கு தேர்ச்சி பெற்றவர். ஊர்தோறும் சென்று கல்வெட்டு ஆய்வினை மேற்கொண்டார். சுயமாகப் பயின்று கல்வெட்டுகளைப் படிக்கும் திறன் பெற்றார். கோலெழுத்து, கிரந்த எழுத்து, பல்லவர் எழுத்து, பிராமி எழுத்து எனப் பல்வகையான எழுத்து முறைகளை அறிந்தார்.பழைய ஏட்டுச் சுவடிகளை முறையாகப் படிக்கக் கற்றார். தொன்மையான சாசனங்களைச் சேகரித்தார்.

விருதுகள்:
1961-ல், தனது மணி விழாவில் ‘ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்ற பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.
1961-ல், தமிழ் எழுத்தாளர் சங்கம் கேடயம் வழங்கிச் சிறப்பித்தது.
1980-ல், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ பட்டம் வழங்கிப் பாராட்டியது.

நாட்டுடமையாக்கப்பட்ட படைப்புக்கள்

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
13 (54%)
4 stars
5 (20%)
3 stars
4 (16%)
2 stars
1 (4%)
1 star
1 (4%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Vivek KuRa.
280 reviews51 followers
February 1, 2021
நூல் விமர்சனத்துக்குள் போவதற்கு முன் ஒரு சுவாரசியமான தகவல் தொகுப்பு .

தமிழகத்தில் சமணமதத்தின் எச்சங்கள் முற்றிலும் மறந்து போன காலகட்டத்தில் பிறந்தவனாக நான் இருந்தாலும் , என் சிறுவயதில் நான் ஒவ்வொரு முழுப்பரிட்சை விடுமுறையிலும் ஆவலோடு எதிர்பார்க்கின்ற ,இந்த நூலின் தலைப்பை ஒட்டிய, ஒரு சுவாரசியமான வரலாற்று நிகழ்வை நினைவூட்டுகிற ஒரு நிகழ்வு . என் தாய்வழி தாத்தா பாட்டியின் ஊர் மதுரைக்கு அருகில் உள்ள திருமங்கலம் . அங்கு உள்ள பாத்திரகாளிஅம்மா கோவிலின் திருவிழாவில் நடக்கின்ற ஒரு சடங்குக்கு பெயர் "காக்கா வேஷம்". கரிய உடையுடன் , முகத்தில் கரியை பூசிக்கொண்டு , காக்கை போல் கரிய மூக்கை வைத்துக்கொண்டு வேஷந்தரித்த கூட்டத்தினர் "திருஞானசம்பந்தார் புகழ் " பாடி இராவில் வீடு வீடாக வருவார்கள். எங்கள் வீட்டுக்கும் வருவார்கள் . வந்தவர்கள் நிறைய சைவ நெறி பாடல்கள் பாடி , சிற்றுண்டி உண்டு , பின்னர் வீடு குழந்தைகளுக்கெல்லாம் தன்னிடம் உள்ள மயில் தோகை கட்டினால் அவர்கள் முகத்தை வருடி ஆசிர்வதித்து செல்வார்கள். பின்னர் இரவெல்லாம் பல வீடுகளில் பாடிவிட்டு கோவிலின் முன் பொய் கழு ஏறுவார்கள் . (சவுக்கு கட்டைகள் மேல் சேர் கட்டப்பட்டிருக்கும்) .அதில் போய் அமர்ந்து விடி காலையில் சடங்கை முடிப்பார்கள். நீண்ட நாட்களாக இதன் வரலாற்று முக்கியம் தெரியாமல் இருந்தேன். ஆனால் இந்த நூலை படித்தபிறகு அது மதத்தின் பெயரால் செய்யப்பட்ட இனப்படுகொலையின் எச்சம் என அறிந்தேன் . இதை பற்றி மேலும் அறிய இந்த நூலையும் , "https://en.wikipedia.org/wiki/Impalem..." கண்டிப்பாக படிக்கவும். பேரா.அருணனின் "நிழல்தரா மரம்" -கழுமரத்தில் சமணர்கள் சிந்திய ரத்தத்தில் முகிழ்த்த புதினம் என்னுடைய படிக்கவேண்டிய பட்டியலில் உள்ளது.மேலும் மதுரையை ஒட்டிய சமண (அம்மண ) மலை , எங்கள் குலதெய்வம் இருக்கும் கழுகு மலையின் வேட்டுவன் கோவிலை நேரில் பார்த்தது போக சமணம் பற்றி வேறு ஒன்றும் நான் அறிந்திருக்கவில்லை

இப்பொழுது நாம் நூல் விமர்சனத்துக்குள் செல்வோம் .....
தமிழகத்தின் மறக்கப்பட்ட , மறக்கடிக்கப்பட்ட மற்றும் மறைக்கப்பட்ட புராதன வரலாற்றை உன்னிப்பாக தோண்டி எடுப்பதில் மயிலை சீனி.வேங்கடசாமி , தொ.பாவின் மூத்த முன்னோடி என்பதை இந்த நூலை படித்தப்பிறகே உணர்ந்தேன்.தொ.பாவின் தொகுப்புகள் படித்தவர்கள் இந்த நூலை கண்டிப்பாக படிக்கவேண்டும்.

சமண மதத்தின் தோற்றம் , அதில் ஏற்கனவே அவதரித்துவிட்ட 24 தீர்த்தங்கர்கள் , மற்றும் அவதரிக்கவிருக்கிற 24 தீர்த்தங்கர்கள் பற்றிய செய்திகளுடன் ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.
மகாவீரர் 24ம் தீர்த்தங்கர். புத்தருக்கும் , ஆசீவக மதத்தின்தோற்றுனர் மக்காளி கோசலா (இவர் சித்தன்னவாசலில் இறந்ததாக கருதுகிறார்கள்)are contemporaries.
மேலும் சமணமதத்தின்பிரிவுகள்
1.ஸ்வேதாம்பரர்-வெண்ணிறாடை அணிந்த துறவிகள்
2.திகம்பரர்- நான்கு திசைகளையும் ஆடையாக அணிந்த nude துறவிகள் (தமிழகத்துக்கு வந்தவர்கள் இந்த பிரிவை சேர்ந்தவர்கள் )
3. ஸ்தனகவாசி-உருவ வழிபாடு செய்யாதவர்கள்
தத்துவங்கள் , துறவற ஒழுக்கம் , இல்லற ஒழுக்கம் பற்றி மிக அழகாக விளக்கியுள்ளார் .கி .மு 300ல் பத்திரபாகு மற்றும் அவர் சீடர் விசாகமுனிவர் சோழ பாண்டிய நாட்டில் சமணத்தை பரப்புகிறார்கள் .தங்களின் மானுட கொள்கைகளால் மக்களின் மனதில் இடம்பிடிக்கிறார்கள் . வைதீக மதங்களைப்போல் சமணம் சாதி பார்க்கவில்லை . அனைவருக்கும் கல்வி மருந்து மற்றும் அடைக்கலம் கொடுத்தது . நம் தாய்மொழியிலேயே அவர்கள் நூல்கள் மொழியாக்கம் செய்யப்பட்டது . பள்ளி (பள்ளிக்கூடம்) என்கிற சொல்லே சமண படுக்கைகளினால் தான் வந்தது என்கிறார் . அங்கே தான் சிறுவர்களுக்கு பாடம் சொல்லித்தரப்பட்டது சாதி பேதம் பாராமல்.

வைதீக மதங்கள் மக்களுக்கு புரியாத மொழியிலே மதநூல்களை வைத்து சாமானியர்களுக்கு அனுமதி மறுத்தது . உயிர்பலி கொடுத்தது யாகங்களின் பெயரால் . மேலும் சமணத்தின் வளர்ச்சியின் மீது பொறாமையும் கோபமும் கொண்டு , பக்தி இயக்கம் என்கின்ற பெயரில் நாயன்மார்களும் , ஆழ்வார்களும் மததிருத்தல்வாதத்தினாலும் , பொய் மற்றும் சூழ்ச்சியினாலும் சமண மதத்தை கொஞ்சம் கொஞ்சமாக வரலாற்றின் பிரக்ஞையிலிருந்து மறக்கடிக்க செய்தார்கள் . முருகனின் இரண்டாவது மனைவியாக ஒரு வைதீக கதாபாத்திரத்தய் உருவாக்கினார்கள் . கொற்றவையை சிவனின் மனைவியாக்கினார்கள் என்கிறார் ஆசிரியர் . I think இது தான் இன்றும் திருமங்கலம் மற்றும் மதுரையில் சமணர்களை நிந்திக்கின்ற ஒரு கட்டுக்கதையாக பின்பற்றிவரப்படுகிறது.இதை Religious Hegemony எனலாம் .

பின்னர் மக்களுக்கு எளிதாக ஜீரணிக்கிற மாதிரி இந்து மதம் பொட்டலம் காட்டப்படுகிறது. சமணத்தில் இருந்து ஊண் உண்ணாமை , விரதங்கள் மற்றும் பல குறியீட்டுவாதங்கள் சேர்க்கப்படுகிறது . சமண ஆதிநாதரின் சடாமுடி மற்றும் அவர் காளை வாகனம் சிவனும் தற்செயல் பொருத்தங்களா? வள்ளுவர் கூட சமண துறவியாக இருந்து இருக்க வாய்ப்பு இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது .
நாம் இன்றும் கிராமப்புறங்களில் குலதெய்வமாக வண்ணாங்கும் ஐய்யனார் மற்றும் சாஸ்தாக்கள் சமண மற்றும் புத்த துறவிகள் என்கிறார் ஆசிரியர் . தொ.பாவும் இதை சொல்கிறார் . தீபாவளி மஹாவீரர் இறந்த நாள் என்றும் அது நரகாசுரனை வதைசெய்த நாள் என்று பின்னர் கதைக்கட்டப்பட்டது என்கிறார் . மறுக்க முடியாத ஆதாரங்களுடன் இந்த வாதங்களை முன் வைக்கிறார் .

தமிழகத்தில் சமணத்தின் வருகை மற்றும் மறைவையும் அதன் கலாச்சார மற்றும் மத பங்கை தெரிந்துகொள்ள வாசிக்க வேண்டிய மிக முக்கியமான ஒரு நூல் .
Profile Image for Srikumaran Ramu.
13 reviews
September 6, 2024
புத்தகம்: சமணமும் தமிழும்
ஆசிரியர்: மயிலை. சீனி.வேங்கடசாமி
தேதி: 06-09-2024


மயிலை.சீனி.வேங்கடசாமி அவர்கள் தமிழக ஆய்வில் ஒரு முன்களப் பணியாளர் ஆவார். தமிழகத்தில் வாழ்ந்திருந்த பல சமயங்களைக் குறித்தும் ஆய்வு செய்து 'பௌத்தமும் தமிழும்', கிறித்தவமும் தமிழும்' போன்ற பல ஆய்வு நூல்களை தமிழுக்கு அளித்துள்ளார். அந்த வரிசையில் சமண சமயத்தைப் பற்றி ஐயா ஆய்ந்தறிந்து வெளியிட்ட படைப்பே 'சமணமும் தமிழும்' ஆகும்.

இந்த நூலானது சமணத்திற்கும் தமிழுக்கும் இருந்த வரலாற்றைப் பேசுவதோடு நில்லாமல், சமண சமய நூல்களை ஆராய்ந்து சமண சமயத்தின் கொள்கைகள், ஒழுக்கங்கள் ஆகியவற்றை எடுத்துரைக்கிறது. சமண சமயம் தோன்றிய கதை, அது தமிழகத்தில் அறிமுகமான கதை, வளர்ந்த கதை, கொடிகட்டிப் பறந்த கதை என தெளிவான பார்வையோடு எடுத்து வைக்கிறார் ஆசிரியர். பண்டைத் தமிழகத்தில் வாழ்ந்த 'திகம்பர சமணர்கள்' மக்களுக்கு அருளிய கல்விக்கொடை, தமிழுக்கு அளித்த இலக்கியக் கொடை ஆகியவற்றை இந்நூல் எடுத்துரைக்கிறது.

சமண சமயம் கொடிகட்டிப் பறந்த காலத்தில் அதனை அழித்து தன் மதத்தை நிறுவ முயன்று அதில் வெற்றியும் பெற்றன வைதீக பார்ப்பன மதங்கள். ஆனால், அந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கும் இரத்தக் கறைகளை நாம் அறிந்திருக்க மாட்டோம். இன்று சைவக் குரவர்கள் நால்வர் என நாம் போற்றும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்றவர்கள் எவ்வாறு சமயவெறி கொண்டு சமண��்தை அழித்தனர் என்ற செய்தியை படிக்கும்பொழுது 'இந்து' என்ற மதமே வெறுத்துப்போகிறது!!

எடுத்துக்காட்டாக, மதுரையைச் சுற்றி இருந்த எண்பெருங் (8) குண்றங்களில் (யானைமலை, நாகமலை, பரங்குன்றம் போன்றவை) எண்ணாயிரம் (8000) சமண முனிவர்கள் வாழ்ந்திருந்ததாகவும், அவர்களை பாண்டிய மன்னன் காலத்தில் கழுவிலேற்றினார்கள் என்றும் பெரியபுராணம் கூறுவதாக ஆசிரியர் காட்டுகிறார்.

இன்று உண்ணாநோன்பு, ஆடை துறத்தல், தீபாவளி, உயிர் கொல்லாமை போன்ற சமண சமய கருத்துக்களை 'இந்து' மதம் திருடிக்கொண்டு நிற்கிறது. இறைவன் என்பவன் இல்லை என்றும், நம் கர்மவினைகளை நாமே முடிவு செய்ய வேண்டும் எனக்கூறிய சமண சமயத்தை, "கடவுள் அனைத்தையும் பார்த்துக்கொள்வார், நீங்கள் அவரை அடிதொழுதால் போதும் என்று கூறிய வைதீக மதங்கள் வென்றெடுத்தன. இன்றும் மக்களை சொகுசாக இருக்கச் சொல்லும் சித்தாந்தங்களே வெற்றி பெறுவது குறிப்பிடத்தக்கது.

இன்று தமிழகத்தில் எஞ்சி நிற்கும் சமண சிற்பங்களும், சிதைந்த நிலையில் உள்ள பள்ளிகளும், சமணர் இயற்றிய தமிழ் இலக்கியங்களும், சமணத்திற்கும் தமிழகத்திற்கும் இருந்த பல நூற்றாண்டின் உறவை பறைசாற்றி நிற்கின்றன!!
38 reviews
May 1, 2024
Eye-opening account of the cultural, spiritual, material richness in ancient Tamil society and the unparalleled contribution of Jains to Tamil civilization. Very profoundly influential
180 reviews3 followers
June 6, 2018
Book about the contributions of jains to Tamil literature and how Jainism was defeated by saivism
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.