தன் தந்தையுடன் மாமா வீட்டில் வளரும் அருணாவிற்கு அதை சொந்தவீடாக நினைக்க முடியாமல் அவர்கள் கட்டுப்பாட்டில் வளர்வதாக நினைத்து அவர்கள் மீது பாசம் இல்லாமல் தன் தந்தை ஏன் இவர்களிடம் அடிமைப்பட்டுக் கொண்டு இருக்கிறார் என்ற எண்ணமே எழுகிறது.
அருணா காதலிக்கும் சிவாவை பெரியவர்கள் ஆசிப்படி திருமணத்திற்குப் பேசும் போது அருணாவின் அம்மாவை பற்றிய பேச்சு எழுகிறது.வீம்பாக மாமா அத்தையுடன் சண்டை போட்டு ஒருவழியாகத் தாய் இருக்கும் இடத்தைத் தேடி சென்றவளுக்குப் பாசமான வரவேற்பு கிடைக்காமல் போக குழப்பமே மிஞ்சுகிறது யார் மீது தவறு என்று.
காதலித்து மணந்த பிறகு கணவன் படிக்க வைக்க அதற்குத் தொந்தரவாக இருந்த குழந்தைகளைக் கணவனின் அக்காவிடம் கொடுத்து வளர்த்து வேலைகிடைத்து டெல்லிக்கு சென்றவள் கூடவே தன் கணவனை மட்டும் அழைத்ததால் குழந்தைகள் இல்லாமல் வர மாட்டேன் என்பவனையும் விட்டு சென்றவள் தான் தன் தாய் என்பதைக் கேட்டு அறிந்தவள் இவ்வளவு நாட்கள் தவறாக நினைத்து பேசியவற்றை எல்லாம் மன்னிக்கக் கேட்கிறாள் பெரியவர்களிடம்.மாமாவின் மகளாகவே திருமண ஏற்பாட்டிற்குச் சம்மதிக்கிறாள் அருணா.