சித்திரை மாதத்தில் தமிழ் வருடப்பிறப்பு சிறப்பான நாள். அன்று செய்ய வேண்டிய பூஜைகள், அறுசுவை உணவுகள், அவற்றை தயாரிக்கும் முறைகள் ஆகியவை விவரமாகக் கூறப்பட்டுள்ளது. அதோடு சித்திரை குப்தர் விரதம், சித்ரா பௌர்ணமியின் சிறப்புக்கள் ஆகியவையும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. சித்திரை மாதம் வரும் அட்சய திருதியை பற்றியும் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது. அட்சய திருதியை எப்படித் தோன்றியது? அதன் சிறப்புக்கள் என்னென்ன? அன்று என்னென்ன தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்? என்ன பொருட்கள் வாங்கலாம் என அனைத்து விவரங்களும் கூறப்பட்டுள்ளன இந்தப் புத்தகத்தில்.