Jump to ratings and reviews
Rate this book

சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்

Rate this book
சிந்துவெளி நகரங்களின் 'மேல்-மேற்கு:கீழ்-கிழக்கு'என்ற இருமைப் பாகுபாடான அமைப்புமுறை திராவிடப் பண்பாட்டுப் புவியியலில் தாக்கத்தால் உருவான ஒரு நெடுவீச்சுச் சிந்தனையின் நேர்விளைவு.சிந்துவெளி விட்ட இடத்திற்கும் சங்க இலக்கியம் தொட்ட இடத்திற்கும் இடையே உள்ளது ஒரு வேர்நிலைத் தொடர்பு. இவை,இந்த ஆய்வு நூல் அடிக்கோடிடும் புதுவெளிச்சங்கள்.

206 pages, Paperback

Published February 1, 2018

6 people are currently reading
135 people want to read

About the author

Balakrishnan R

3 books1 follower

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
12 (50%)
4 stars
8 (33%)
3 stars
2 (8%)
2 stars
1 (4%)
1 star
1 (4%)
Displaying 1 - 8 of 8 reviews
Profile Image for Vivek KuRa.
281 reviews53 followers
February 14, 2024
வரலாற்றை உணர்ச்சிகளுக்கும் இடம்கொடுக்காமல் , அறிவியல் பூர்வமாக அணுகுதல் மிக அவசியம். அப்படி அறிவியல் மற்றும் தர்க்கம் சார்ந்த முறையை ஆர் .பாலகிருஷ்ணன் அவர்கள் இந்த உணர்திறன் மிக்க ஆராய்ச்சியை செய்ய தேர்நதெடுத்திருக்கிறார். 4000 வருடத்துக்கு முன்னால் மங்கிப்போன சிந்து சமவெளி நாகரீகத்துக்கும் , திராவிடர்களுக்குமான தொடர்பை கட்டமைக்க பெயராய்வியலாயும் (போனோமஸ்டிக்ஸ்) , மேல் மேற்கு -கீழ் கிழக்கு என்ற நகர இருமை பாடுபாகையும் , கொற்கை-வஞ்சி-தொண்டி வளாகத்தின் வாயிலாகவும், தொடர் மரபுகளாகிய கோழிச்சண்டை போன்றவற்றின் துணையோடு தனது கருதுகோளை ஆதாரத்துடன் முன் வைக்கிறார். கீழடியின் தொல்லியல் படிமங்களின் கண்டுபிடிப்பு சிந்துவெளி நாகரீகத்துக்கும் வைகை நதி நாகரீகத்துக்குமான விடுபட்ட இணைப்பை இன்னும் அருகில் கொண்டு வர உறுதுணையாய் இருக்கிறது என்பதாயும் விளக்குகிறார் .

இப்பொழுது கையில் இருக்கும் தரவுகளை வைத்து சிந்துவெளி பண்பாட்டுக்கு திராவிடம் அடித்தளமாக இருப்பதை மட்டுமே நிறுவ முடியும் , தமிழ் அடித்தளத்தை நிறுவ போதுமான சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை என்பதை அவர் என்னுரையில் விளக்கியிருக்கிறார்.

இன்றைக்கும் , பாகிஸ்தான் ,ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தமிழ் நாட்டில் வழங்கப்படும் ஊர் பெயர்கள் புழக்கத்தில் இருபது ஆச்சரியம் . மேலும் சேவல் சண்டையின் முக்கியத்துவம் தமிழகம் போலவே சிந்துவெளி நாகரீகத்திலும் இருந்திருப்பது பேராச்சர்யம் .

இது ஒரு முக்கியமான மற்றும் சுவாரசியமான வாசிக்கப்பட வேண்டிய தொல்லியல் ஆராய்ச்சி நூல் .
Profile Image for Kesavaraj Ranganathan.
48 reviews7 followers
November 6, 2022
சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் – ஆர்.பாலகிருஷ்ணன்

இடப்பெயர் ஆய்வுத் துறையில் கணினி மூலம் ஆய்வுகளை நடத்தி
உலகப் புகழ் பெற்றவர் திரு.ஆர்.பாலகிருஷ்ணன் IAS அவர்களின் இந்த நூல் சிந்து வெளிப் பண்பாடில் வேரூன்றிள்ள திராவிடக் கூறுகளை இடப்பெயர்கள், சொற்க்கள், மேல் – மேற்கு, கீழ் – கிழக்கு ஆகிய கருதுகோள்களின் அடிப்படையில் நிறுவி உள்ளார்.

மண்ணை விட மனிதர்கள் முக்கியம். ஏனெனில், மனிதர்களை ஊடகமாகக் கொண்டே மொழியும் பண்பாடும் உயிர்ப்புடன் வளர்கின்றன. மனிதர்கள் அன்றாடம் பேசாத மொழி வாழும் மொழியல்ல. அது கும்பிடப்படாத தெய்வம் போல 'காலமானது'.
அதைப்போலவே, பாதையை விட, பயணத்தின் திசையைவிட முக்கியமானது பயணம். அதைவிட முக்கியமானவன் பயணப்பட்டவன். வரலாறு என்பது வரல் ஆறு. அதாவது வந்த வழி. ஏனெனில் ஆறு என்பது வழி.

மக்களை மையத்தில் வைக்காத வரலாறு மன்னர்கள் பிறந்த கதை, வளர்ந்த கதை, இறந்த கதை பேசும்; அரண்மனைகளையும், அந்தப்புரங்களையும் மட்டுமே துருவி துருவி ஆராய்ந்து களிப்படையும் அல்லது களைப்படையும். நாம் மீட்டெடுக்க வேண்டியது மன்னர்களின் கதையை அல்ல. இன்னும் சொல்லப்போனால் வெறும் மண்ணின் கதையை கூட அல்ல. அதைவிட முக்கியமாய், மொழியை மூச்சில் ஏந்தி முன் நடந்து, பண்பாட்டுத் தொடர்ச்சியை காலத்தை வென்று நிற்கும் நடைமுறையாக்கிய மனிதர்களின் கதையை...

இந்தத் தெளிவே தமிழ் மொழியை ஒரு மாவட்ட மொழியாய் ஒரு மாநில மொழியாய் சுருங்கிவிடாமல் ஓர் உயர் நாகரிகத்தின் மொழியாய் உயர்த்திப் பிடிக்கும் பக்குவத்தை அளிக்கும் எனக் குறிப்பிடுகிறார்.

சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கொற்கை, வஞ்சி, தொண்டி போன்ற நகரங்களின் பெயர்களும், சிந்து சமவெளியிலும் அதற்கும் அப்பால் ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளிலும் இன்றும் நிலைத்துள்ளன என்பது ஆச்சரியமான தகவல்!

பல்வேறு தரவுகளின் அடிப்படையில் சிந்துவெளி மக்களின் மொழிக்கும், திராவிட மொழிக்கும் இருக்கும் ஒற்றுமையை விளக்கியுள்ளார்.

சிந்துவெளி நகரங்களின் ‘மேல்-மேற்கு:கீழ்-கிழக்கு’என்ற இருமைப் பாகுபாடான அமைப்புமுறை திராவிடப் பண்பாட்டுப் புவியியலில் தாக்கத்தால் உருவான ஒரு நெடுவீச்சுச் சிந்தனையின் நேர்விளைவு.சிந்துவெளி விட்ட இடத்திற்கும் சங்க இலக்கியம் தொட்ட இடத்திற்கும் இடையே உள்ளது ஒரு வேர்நிலைத் தொடர்பு. இவை,இந்த ஆய்வு நூல் அடிக்கோடிடும் புதுவெளிச்சங்கள்.

புத்தகம் – சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்
ஆசிரியர் – ஆர்.பாலகிருஷ்ணன்
பதிப்பகம் – பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் - 206
விலை - ₹200
Profile Image for Subhashini Sivasubramanian.
Author 5 books189 followers
March 12, 2020
சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் - ஆய்வுகள்- ஓர் முன்னோட்டம் https://youtu.be/oXNcswGiA8I

சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் - நூல் உள்ளடக்கம் https://youtu.be/ZiXqyvLL9_s
5 reviews
January 13, 2021
compilation of research papers edited and published for layman understanding. skipped reading the intracacies and and understood the crux those papers meant to point out.
Profile Image for Sanjay Rajan.
21 reviews
November 3, 2016
This is a research article book about the relationship between Indus Valley Civilisation and Dravidian culture. The author explains the relationship in two main divisions. One, Through the resemblance of the place names that exists still in the erstwhile Indus valley civilisation areas with that of the place names in Tamil Nadu and Two, Through the importance of the High-west Low-East approach
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Senthil Kumar  Thiru.
16 reviews2 followers
February 15, 2017
This books gives interesting insight on the connection between Indus valley civilization and Tamils. Author did good research is appreciable particularly on the similarity of old tamil towns which are still existing in now pakistan,Afganistan.
Profile Image for Pandiaraj J.
34 reviews12 followers
March 25, 2020
தமிழரின் தொன்மம் பற்றிய ஆய்வுகளில் ஓர் மைல் கல் என இந்த புத்தகத்தைச் சொல்லலாம், இன்னும் செல்லவேண்டிய தூரமுள்ளது என்பதை குறிப்பிட்டே இந்நூல் தன் வாதத்தை முன்வைக்கிறது!
Displaying 1 - 8 of 8 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.