சமுதாயத்தைச் சுத்தப்படுத்துவோம் என்று இறங்கும் செயலில் எதிர்பாரா இடையூறுகள் வந்து கொண்டே தான் இருக்கும்.
ஆன்மீகத்தில் குருவாக இருந்து பலருக்கு நல்வழிகாட்டும் சிவசக்தியம்மா வாழும் சமுதாயத்திற்கும் நல்லதை செய்ய வேண்டும் என்ற நினைப்பில் தவறான காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு உயிர் பயத்தைக் காட்டி நேர்வழியில் செல்ல தூண்டுதலை கொடுக்கும் வேலையில் ஈடுபடுகிறார்.
பெண்களைப் பாலியல் ரீதியாக மட்டும் உபயோகிக்கும் தருண்குமாரை திருத்த நேத்ராவை அவனிடம் வேலை பார்க்க அனுப்பி வைக்கிறார் சிவசக்தியம்மா.
தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்ட நேத்ராவின் தைரியம் பிடித்துப் போய் இருக்கிறது என்று பெண்கேட்டு அவளின் அண்ணனிடமே வலைவீசி தான் நல்லவன் என்ற விதையை விதைக்கிறான்.
தருண்குமார் செய்த தவறுகளை எல்லாம் பட்டியல் போட்டு பயப்படுத்தும் வேலையைப் பவன் செய்து கொண்டிருக்கும் அதேவேளையில் இவன் நேத்ராவை கடத்தி தன் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று ஆளில்லா வீட்டில் அடைத்து வைக்கிறான்.
தருண்குமாரின் நண்பன் மூலம் போலீஸுக்கு சில சந்தேகங்கள் எழுந்து அதுவே அவனின் குற்றத்தை நிரூபிக்க ஏதுவாகிறது.
போலீஸ் உயரதிகாரிக்கு சிவசக்தியம்மா செய்யும் வேலைகள் தெரிந்தாலும் நல்லதுக்கே என்று அவரும் கண்டுகொள்ளாமல் போகிறார்.