பணம் ஒன்றே தேவை என்று துரத்தும் உறவுகளை இனம் கண்டு விலகுவது சுலபமே என்றாலும் தன் இரத்த சம்மந்தப்பட்ட உறவுகளிடமிருந்து இவ்வகையான செய்கைகள் மனதை துவளச் செய்துவிடுகின்றது.
அனைத்திற்கும் மூத்த மகன் மகேஷின் பணத்தை நாடும் பெற்றவர்களுக்குக் கேட்கும் போதெல்லாம் கொடுத்து பழக்கப்படுத்தியவன் தங்கையின் கல்யாணத்திற்கு வாங்கிய கடன் கைமீறி போகும் போது தன் குடும்பத்தை விட்டு வெளிநாட்டிற்குச் சென்று சம்பாதிப்பவனின் உழைப்பையும் பணமாக வாங்கிக்கொண்டது மட்டுமில்லாமல் அவனின் மனைவியையும் தரக்குறைவாக விமர்சனம் செய்கின்றனர் அவனின் பெற்றோர்.
கணவனுக்காகக் குடும்பத் தேவைக்காக மீண்டும் வேலைக்குச் சென்று கணவனைப் பிரிந்து இருப்பவளை துக்கப்படுத்தவே என்று வரும் மாமியாரிடம் காட்டிய சிறு எரிச்சலினால் அவளின் வாழ்வை அறுத்துவிடப் போராடுபவர்களிடமிருந்து தன் வாழ்க்கையை மீட்க முயலும் சாந்தியிடமே வந்து சேர்கிறான் அவளின் கணவன் மகேஷ்.
இரண்டு வருடம் வெளிநாட்டில் வேலைச் செய்து கடனை அடைத்தவனுக்குப் பெற்றவர்களின் வேஷம் பிடிபட இனி அவர்களின் நாடகங்களைப் பார்க்க விரும்பவில்லை என்பதை வெளிப்படையாக அறிவித்தவன் சாந்தியின் மனம் ஆசைப்பட்ட படி இந்தியாவிற்கே வந்து சேர்கிறான் மகேஷ்.
முடிவை நோக்கி நகரும் காட்சிகள் அழகிய எதார்த்த வடிவமைப்பு.