ஆற்றங்கரைப் பிள்ளையார்….
கதையாசிரியர்: புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம்.
ஆற்றங்கரையோரமாக இக்கதை துடங்கும். கரையோரம் ஒரு பிள்ளையார் வீற்றிருப்பார்.
ஆற்றில் வெள்ளம் அடிக்கடி வருவதால் மணற்குன்றும் கற்பாறைகளும் பிள்ளையாரைத் துன்புறுத்திக் கொண்டிருந்தன.
அந்த சமயம் பார்த்து ஓர் கிழவர் அங்கு வந்து சேர்ந்தார். அவர் பிள்ளையார் படும்பாட்டை பார்த்து ஒருயோசனை தோன்றியது அவரது மனதில்.
அவர் பிள்ளையாருக்குச் சமுகம் என்ற மேடையை அமைத்து, பிள்ளையாருக்குப் பேய்ப் பிடிக்காமல் இருக்க சமயதர்மம் என்ற அரச மரத்தையும் மற்றும் ராஜ தர்மம் என்ற வேப்ப மரத்தையும் நட்டுவைத்தார்.
வெள்ளத்தின் காரணமாக ஆற்றில் தண்ணீர் எப்போதும் இருந்துவந்து. இதனால் அரச மரமும் வேப்ப மரமும் செம்மையாக வளர்த்தன.
பிள்ளையாருக்கு இன்பம் என்னவென்று தெரிந்தது, இதன் காரணமாக தனக்கு உதவிய பெரியவரின் நினைவில் தனக்கு மனிதன் என்று சூட்டிக் கொண்டார்.
தண்ணீர் மிகுதியாக மற்றும் வண்டல்களினாலும் இரண்டு மரமும் செழித்து வளர்த்தன. பிள்ளையாருக்குமரத்தின் வாயிலாக நிழல் கிடைத்தது மழைக் காலத்தில் எப்போதும் குளிர்ந்த காற்றும் பிளைளையாலின் மீது மரங்களிலிருந்து ஈரம் சொட்டிக்கொண்டே இருந்தன.
இரண்டு மரங்களும் செழித்து வளர்ந்தமையால் பறவைகள் மரத்தின் மேல் கூடுகள் கட்டி பிள்ளையார் மீது அசுத்தம் செய்துக் கொண்டியிருந்தன.
அந்த வழியாக இரு கிழவர்கள் வந்தனர். பிள்ளையாரின் கோலத்தைப் பார்த்தவுடன் இருவரும் ஆற்றங்கரைக்குப் போய் தண்ணீர் எடுத்துவந்து பிள்ளையாரைக் குளிப்பாட்டினார்கள்.
அவர்களுக்கு ஒரு யோசனை தோன்றியது ஏன் பிள்ளையார் இருளில் சூழ்ந்து காணப்படுகிறார் அவர் மீது சூரிய ஒழி பட்டால் என்ன என்று எண்ணி ஒருவர் மரக்கிளைகளை வெட்டினார் மற்றொருவர் பக்கத்தில் ஒருமேடையை அமைத்தார்.
இவர்கள் இருவரும் பிள்ளையாரைக் கொண்டுவந்து அந்த புதிதாக அமைக்கப்பட்ட மேடையில் வைத்தனர்.
சிறிது நேரம் பிள்ளையாருக்குச் சூரிய ஒழி இதமாக இருந்து. ஆனால் நேரம் செல்லச் செல்ல சூரிய ஒழியின்தாக்கம் அதிகமானதால் பிள்ளையாருக்கு உடம்பு முழுவதும் சூட்டுக் கொப்பளம் வந்தேவிட்டன. ஆகையால் அவர் பழைய இடத்துக்கே ஓடிச் சென்று அமர்ந்து கொண்டார்.
இதனால் அந்த மேடையை கட்டியவர் மனம் வருந்த அவர் கட்டிய மேடையில் அமர்ந்து உயிரை விட்டார் .
சில காலம் சென்றது அரச மரமும் வேப்ப மரமும் பிள்ளையாரைச் சுற்றிப் பின்னிப் பிணைந்து வளர்ந்து கொண்டு இருந்தன. பிள்ளையாரின் தலைப் பகுதி இரு மரக்கிளைகளுக்கிடையில் சிக்கிக்கொண்டன, மற்றும் வேப்ப மரத்தின் வேர்களோ பிள்ளையாரின் வயிற்றைச் சுற்றிக்கொண்டு அவருக்குத் துயரத்தைத்தந்தன.
பல காலம் உருண்டோடியது பல கிழவர்கள் ஆற்றங்கரைக்கு வந்தனர். வந்தவர்கள் பிள்ளையாரின் நிலைகண்டு பீதியடைந்து, பிள்ளையாரை எப்படியாவது இந்த இடத்தில் இருந்து எடுத்து வேறு இடத்துக்கு மாற்றத்திட்டம் தீட்டினர்.
பிள்ளையாரை அவர்கள் விடுவித்தனரா? இந்த தறுவாயில் பிள்ளையார் என்ன கனவு கண்டார்? பிள்ளையார் தான் கண்ட கனவு நினைவாகி தன்னை விடுவித்துக்கொள்வாரா? போன்ற பல கேள்விகளுக்கு ஆற்றங்கரைப் பிள்ளையார் என்ற கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்
-பாலமுருகன். லோ-
—————————————————————-
பொன்னகரம்..
திரு புதுமைப்பித்தனால் புனையப்பட்ட சிறுகதைத் தொகுப்பில் இதுவும் ஒன்று. இந்த கதை மணிக்கொடி இதழில் 06.05.1934 வெளிவந்துள்ளது..
இந்த கதையைப் பார்க்கப் போனால் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை எப்படி நகர்த்துகிறார்கள் எப்பத்தை எதார்த்தமாக அவரது கதையில் கூறியிருப்பார் திரு புதுமைப்பித்தன்அவர்கள்.
கதை ரயில்வே தண்டவாளத்தின் பக்கத்தில் சாராயக் கடை இருக்கும் சந்தில் இருந்து ஆரம்பிக்கும்.
அந்த குறுகலான சந்தினை அப்படியே படம்பிடித்து எடுத்துக் காட்டியிருப்பார் எழுத்தாளர் திரு புதுமைப்பித்தன்.
மழை பெய்தால் அந்த சந்தின் நிலைமை என்வாயிருக்கும் என்பதை அழகாக நமக்குப் புரியும்படி சொல்லியிருப்பார்.
அங்கு வளரும் சிறு பிள்ளைகள் தண்டவாளத்தின் பக்கம் நின்றுகொண்டு எப்படி தன் கையை உயர்த்தி குட்மார்னிங் சொல்கிறார்கள் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு மேலும் பிள்ளைகள் எப்படிச் சந்தோசப்படுவார்கள் அந்த தண்டவாளத்தின் பக்கத்தில் நின்று விளையாடும்போது போன்ற பல விஷயங்களை அழகாக எடுத்துரைத்திருப்பார்.
கதையின் நாயகி அம்மாளு; அம்மாளுவின் புருஷன் முருகேசன். முருகேசன் குதிரை வண்டி வைத்துப் பிழைப்பு நடத்துபவன். அவனுடன், அவன் தம்பி, தாய், மனைவி(அம்மாளு) மற்றும் குதிரை.
அம்மாளு மில் கூலி வேலைப் செய்கிறாள். இவர்கள் இருவரின் சம்பளத்தைவைத்துத் தான் அவர்களது வாழ்க்கை நகர்கிறது.
ஒரு நாள் சந்தோஷத்தின் மிகுதியால் முருகேசன் சாராயம் அருந்திவிட்டு கீழே விழுந்து, எழுந்து வீட்டிற்கு. அவனுக்கு மருந்து போடக் கூட காசு இல்லை அவளிடம்.
எப்படி அவள் கணவனுக்கு மருந்து வாங்குகிறாள். என்ன செய்தாள் மருந்து வாங்குவதற்கு. இதைத்தெரிந்து கொள்ளப் பொன்னகரம் என்ற கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
-பாலமுருகன்.லோ-
——————————————————————
உணர்ச்சியின் அடிமைகள்..
இந்தக் கதையும் புதுமைப்பித்தனின் கதைகளில் ஒன்று.
எழுத்தாளர் கதையின் வாயிலாகக் கணவன், மனைவிக்கு இடையில் இருக்கும் ஆசாப் பாசங்கள், ஒருவர் மற்றொருவரின் பெயரில் எவ்வளவு
அன்பு வைத்தரிக்கிறார்கள் போன்றதை அழகாகத் தனக்கே உரித்தான பாணியில் சொல்லவிருப்பார்.
ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் நிகழ்வைத் தான் இவர் தன் கற்பனையைக் கலந்து அவரது எழுத்துக்களின் முழமாகத் தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியிருப்பார்.
ஒன்றரை வருடம் கழித்து இவர்களுக்குக் குழந்தைப் பிறக்கிறது. அவர்கள் அந்தக் குழந்தையை எப்படிக் கவனித்தார்கள் என்று சொல்லியிருப்பார் எழுத்தாளர்.
கணவன்-மனைவிக்கு இடையே நடக்கும் உரையாடலை, நேர்த்தியாகக் கையாண்டிருப்பார். படிப்பவர் மனம் கோணாதவாறு அவரது எழுத்துக்கள் இருக்கும்.
காலம் செல்லச் செல்ல அவர்கள் இருவரும் எப்படித் தங்களது முதுமையைக் கையாண்டார்கள் என்பதை அழகாகக் கூறியிருப்பார்.
அவர்கள் இருவரும் எப்படிப் பேரப்பிள்ளையுடன் விளையாடுகிறார்கள் போன்ற அனைத்தையும் பக்குவமாக எடுத்துரைத்தரிப்பார்.
உணர்ச்சியின் அடிமைகள் கதையைப் படிக்கும் போது நமக்குள் தோன்றும், நாம் அனைவரும் அடிமைகள் தான் என்று. இக்கதை மணிக்கொடி இதழில் 08/07/1934 வெளிவந்துள்ளது.
-பாலமுருகன்.லோ-
—————————————————————-
கட்டில் பேசுகிறது…
இதுவும் திரு புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுப்பில் ஒன்று.
இந்த கதை மணிக்கொடி இதழில் 13.05.1934 வெளிவந்துள்ளது.
ஒருவன் உடல் நலக்குறைவால் அல்லது அவன் தவறுதலாக எடுத்த முடிவால்! உடல் பாதிக்கபட்டு கவர்ன்மெண்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவனின் மன நிலை என்னவாக இருக்கும் என்பதை எழுத்தாளர் தனக்கே உரித்தான பாணியில் கூறியிருப்பார்.
கதைக்களம் கவர்ன்மெண்டு ஆஸ்பத்திரியில் உடங்கும். அங்கு நாயகனை ஒரு படுக்கையில் கிடத்தினார்கள்.
அவனது வலதுபுறமும், இடதுபுறமும் அவனைப் போல் வேறு சில நோயாளிகள் படுக்கையில் கிடத்தப்பட்டனர்.
ஒவ்வொரு படுக்கைக்குப் பக்கத்தில் அவர்களுக்கு வேண்டிய மாத்திரை, மருந்துகள் எல்லாம் வைப்பதற்கு ஒரு தடி அலமாரி உண்டு.
நாயகனுக்கு மறுபடியும் அந்த வயிற்றுவலி. அவரை கையால் வயிற்றை அமுத்திக்கொண்டு ஒருபுறமாகத் திரும்பிப் படுத்தான். அவன் மனம் சற்று வாடியது ஸ்பிரிங் கட்டிலாம் கட்டில் என்று தனக்கு தானே புலம்பிக் கொண்டான்.
இது இப்படி இருக்கக் கட்டில் அவனுடன் பேச ஆரம்பித்தது. கட்டில்: என்ன வோய்! என் ஸபிரிங்கிற்கு என்ன குறைச்சல்? நீ நாளைக்கு ரொம்ப…
என்னிடம் வருகிறவர்களை, மரியாதையாக நான்கு பேரோடு, சங்கு சப்தம் அல்லது வேத மந்திரம் முறைப்படி நீண்ட பிரயாணமாக அனுப்புவது! என்ன அர்த்தமாகவிட்டதா? உமக்கு அந்த வழித்தான்.
நாயகனின் காதுகளில் கோரமான பிசாசுச் சிறுப்பு சத்தம். இன்னும் சந்தேகமா என் டயரியை வாசிக்கிறேன் கேள்!
கட்டில் நாயகனிடம் என்னவெல்லாம் கூறியது. நாயகனுக்கு என்ன நடந்தது? என்பதைக் கட்டில் பேசுகிறது கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
- பாலமுருகன்.லோ-
——————————————————————-
நிகும்பலை….
திரு புதுமைப்பித்தனால் எழுதப்பட்ட சிறுகதைகளில் இதுவும் ஒன்று. இக்கதை 15.07.1934யில் மணிக்கொடி இதழில் வெளிவந்துள்ளது.
விடிந்தும் சூரியனின் ஒழி அந்த அறையின் பக்கம் செல்லவில்லை. அந்த அறையில் ஒரு மாணவன் கையில் புத்தகத்தை வைத்துக்கொண்டு ஏகாக்கிர ( ஒன்றிலே ஊன்றிய மனம்) சிந்தனையிலிருந்தான்.
என்னவென்று பார்த்தால் இரவு முழுவதும் பாடப் புத்தகம் படித்துக்கொண்டு இருந்தான் பரீட்சை காரணமாக.
இந்த கதை மூன்று நண்பர்கள் தங்களது பரீட்சையை எப்படி எழுதுகிறார்கள் என்பது தான். புதுமைப்பித்தனின் எழுத்துக்களைப் படிக்கும் போது, நமது பள்ளி மற்றும் கலாசாலை(பல்கலைக்கழகம்) ஞாபகம் மனதில் வந்த செல்லும்.
எப்படி மாணவர்கள் பரீட்சைக்குத் தயார் செய்து கொள்கின்றனர். நண்பர்களிடையே பாடச் சம்பந்தமாக என்னபேசிக் கொள்வார்கள் என்பதைத் தொழிவாக எடுத்துக் கூறியிருப்பார்.
பிறகு நண்பர்கள் ஒன்று சேர்ந்து கலாசாலை ( பல்கலைக்கழகம்) சென்று ‘ஹால் டிக்கட்டு’ எப்படி வாங்குகின்றனர் போன்ற பல சுவாரசியமான விஷயங்களை அழகாக தன் எழுத்தின் மூலம் வெளிப்படுத்தியிருப்பார்.
மாணவர்கள் எப்படியெல்லாம் பரீட்சை ஹாலுக்கு வருகைதருவார்கள். அவர்களது மனோபாவம் எப்படியெல்லாம் இருக்கும் என்பதைத் தெள்ளத் தொழிவாகச் சொல்லியிருப்பர் தன் எழுத்துக்கள் மூலம்.
இந்த மூன்று நண்பர்கள் பரீட்சையை எழுதினார்களா? அவர்களது வாழ்க்கையில் அடுத்தகட்ட நடவடிக்கைஎன்ன?
தெரிந்துகொள்ள நிகும்பலை கதையைப் படியுங்கள்.
- பாலமுருகன்.லோ-
—————————————————————
தனி ஒருவனுக்கு….
பாவாடைக்கு மகனாகப் பிறந்தவன் அம்மாசிச் சாம்பான்.
ஏனோ அம்மாசிச் சாம்பானின் தகப்பன் பாவாடை குறுகிய காலத்திலே இறைவனடிப் போய்ச் சேர்ந்துவிட்டார்.
அந்த ஊரில் பணம் படைத்த ஒருவர் இவனுக்குச் சிறுத் தொகை பணம் கொடுத்து உதவி திருமணமும் நடத்திவைத்தார். சில காலம் கடந்தது! அம்மாசிச் சாம்பானின் அம்மாவும் இறையடி சேர்ந்தாள்.
ஏன்னோ இதற்குப் பிறகு அம்மாசிச் சாம்பானுடன் அவனது மனைவியும் உடன் வாழவில்லை. அவனது மனைவி தன் தாய்வீட்டுக்குச் சென்றுவிட்டாள்.
எழுத்தாளர் இந்த கதையின் வாயிலாக ஒரு தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த அம்மாசிச் சாம்பான் எப்படி இந்த உலகத்தில் வாழ்ந்தான் அவனை மற்றவர்கள், எப்படி நடத்தினார்கள்? அம்மாசிச் சாம்பான் ஒரு வேலை சோற்றுக்காக என்னவெல்லாம் செய்யத் துணிந்தான்?
என்னென்ன நாடகங்கள் நிறைவேற்றினான் ஊர்கார்ர்கள் மத்தியில் போன்ற எல்லாவற்றையும் நேர்த்தியாக தன் எழுத்தின் மூலம் சொல்லிய���ருப்பார்.
அவனுக்கு என்னவெல்லாம் நேர்ந்தது? தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில்? ஜெகத்தினை அழித்துடுவோம் என்ற அடிகள் நம் செவியில் விழுந்தவுடன், நம் மத்தியில் என்ன உருக்கம், என்ன கனிவு! ஆனால் அம்மாசிச் சாம்பான் வாழ்வில் நடந்ததோ முற்றிலும் வேறு. தெரிந்து கொள்ளத் தனி ஒருவனுக்கு என்ற கதையைப் படியுங்கள்.
இந்த கதையும் திரு புதுமைப்பித்தன் கதைகள் தொகுப்பில் ஒன்று. இது மணிக்கொடி இதழில்12.08.1934யில் வெளிவந்துள்ளது.
- பாலமுருகன்.லோ-
—————————————————————-
ஒப்பந்தம்…
ஒவ்வொரு குடும்பத்திலும் பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு எப்படி திருமணத்தை நடத்த ஏற்பாடுச்செய்கிறார்கள் என்பதை எழுத்தாளர் தன் எழுத்துக்கள் மூலம் அழகாக வெளிக்கொணர்ந்திருப்பார்.
பார்வதி நாதன் பி.ஏ முடிதாகிவிட்டது மற்றும் சர்வீஸ் கமிஷன் பரீட்சையை ஒழுங்காக எழுதி முடித்தாகிவிட்டது. பிறகு என்ன அரசாங்க வேலையை எதிர்பார்த்துக் கொண்டு வீட்டில் இருக்கிறான்.
தந்தை; சங்கர லிங்கம் பிள்ளை அவர்கள் . தந்தையின் ஆசை!பிள்ளையை ஒரு பெரிய இடத்தில் திருமணம் பேசி முடிக்க வேண்டுமென்று.
இதற்காக வீட்டில் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டு இருந்தது. பார்வதிநாதனின், அம்மா சங்கரலிங்கத்திடம் பெண்ணை பற்றிச் சொன்னாள். அதற்கு சங்கரலிங்கம் கூறினார் நமது மகன் படித்து விட்டு வேலைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்குத் தங்க நகைகள், இரண்டாயிரம் ரூபாய்க்கு மற்றது ஒரு ஆயிரத்துக்குச் செய்தார்களேயானால் நன்றாக இருக்கும் என்று பேசிக்கொண்டிருந்தனர்.
இந்த சமயம் பார்த்து தபால் ஒன்று வீடு தேடி வந்தது. தபாலில் நாயகனின் பெயர் எழுதப்பட்டிருந்தது. உடனே தந்தை தன் மகனை அழைத்தார் பார்வதிநாதனும் மாடியிலிருந்து கீழேயிறங்கி வந்தான். அவனிடம் தபாலைக் கொடுத்துப் படிக்கும் படிச் சொன்னார் சங்கர லிங்கம். அவனும் தபாலைக் கையில் வாங்கி படிகளானான். அதில் அவனுக்கு அரசாங்கத்திலிருந்து குமாஸ்தா வேலைக்குக் கடிதம் வந்திருந்தது, உடனே வந்துச் சேறும் படிச் சொல்லியிருந்தது அந்த கடிதத்தில்.
பிறகு என்ன குடும்பத்தில் மகிழ்ச்சி தான். சங்கரலிங்கம் மகனிடம் சொன்னார்; இனிமேல் உனக்குக் கல்யாணம் தான் என்று சொல்லி, உனக்கு உன் அம்மா ஒரு சிங்கிகொளத்து பெண்ணை பார்த்து வைதிருக்கிறார் என்று. உடனே பார்வதிநாதனுக்கு வெக்கம் தாங்க முடியவில்லை.
நாயகனுக்குச் சென்னையில் வேலை. பெரியவர்கள் பேசி முடித்தபடி சிங்கிகொளத்து பெண்ணுடன் திருமணம் நடந்ததா? நாயகனுக்கு!என்ன நடந்தது பார்வதிநாதன் வாழ்வில்? முழுவதையும் தெரிந்து கொள்ள ஒப்பந்தம் கதையைப் படியுங்கள். இந்த கதையும் புதுமைப்பித்தனின் சிறுகதைத் தொகுப்பில் ஒன்று. மணிக்கொடி இதழில் 05.08.1934யில் வெளிவந்துள்ளது.
-பாலமுருகன்.லோ-