தவறான ஆட்களிடம் காதலில் விழுந்தால் காதல் என்ற மெல்லுணர்வு பணத்தின் முன்பு அடிப்பட்டுப் போகிறது.
கதைகளமான அமெரிக்காவில் காதலனுடன் ரோட்டில் நடந்து செல்லும் அபிராமியை வழிமறித்த நீக்ரோக்கள் தவறாக அவளிடம் ஈடுபடப் போவதை பொறுக்க முடியாமல் தன்னையே சுட்டுக்கொண்டு இறந்து போனதை பார்த்த அவளின் காதலன் கதிரவனுக்குப் புத்தி நிலையாக அப்படியே நின்றுபோகிறது.
அபிராமியின் இறப்பிற்குக் காரணத்தைத் தேடும் போது அவளின் சொத்திற்காக அண்ணனே கொல்ல ஆட்களை ஏவியது ஒருபக்கமும் கதிரவனின் தாய்க்கு மகனின் காதல் பிடிக்காமல் போனதால் அபிராமியை கொல்ல ஆட்களை ஏற்பாடு செய்தது மறுபக்கமும் என்று சந்தேகக் குற்றவாளிகள் நீண்டு கொண்டே சென்றாலும் எதிர்பாராமல் கதிரவன் தான் குற்றவாளி என்பது ரிப்போர்டர் கேமராவில் பதிவான புகைபடத்தால் தெரிய வருகிறது.
தனக்கு வந்த கோடீஸ்வர சம்பந்தம் கிடைப்பதற்கு அபிராமி தடையாக இருப்பாளோ என்ற பயத்தில் கதிரவன் அவளை மிரட்ட செய்த செயலில் எதிர்பாராமல் அபிராமியின் உயிர் இழப்பு ஏற்படுகிறது.