Jump to ratings and reviews
Rate this book

ஒரு நாள் [Oru Naal]

Rate this book
நம் நாட்டில், வாழ்க்கையில் முப்பது வருஷங்கள் என்றால் பாதிக்குமேல் என்றுதான் அர்த்தம். சாதாரண மனோபாவத்தில்கூட ஒரு மாறுதல் அவர்களுடைய முப்பதாவது வயசில் நேருகிறது என்பது அனுபவபூர்வமாகக் காண்கிற உண்மை. அறிவும் அனுபவமும் ஒரு மனிதனுடைய ஆயுளில் சற்றேறக்குறைய அவனுடைய முப்பதாவது வயசில் கூடுகின்றன என்று சொல்ல வேண்டும். சாதாரணமாகத் தத்துவ விசாரத்தில் ஈடுபட்ட அதிகமில்லாத மனிதனும்கூட, அந்த வயசில் சற்று அதிகமாகத் தத்துவ விசாரத்தில் அடிப்படையான மேன்மை ஆராய்ச்சியில் இறங்கிவிடுகிறான் என்பது என் அனுபவம். காலதேச வர்த்தமானங்களை ஒட்டி இன்றைய முப்பது வயசு வாலிபனுக்கு மனசில் தோன்றக்கூடிய சிந்தனைகளுக்கு வாழ்க்கை உருவம் கொடுக்க முயன்றிருக்கிறேன் இந்த ந

217 pages, Kindle Edition

First published January 1, 1946

10 people are currently reading
65 people want to read

About the author

க.நா.சு எனப்படும் கந்தாடை நாராயணசாமி சுப்ரமணியம் தஞ்சை வலங்கைமானில் பிறந்தவர். எழுத்தாளராக வாழ்வது என்ற முடிவை இளம் வயதிலேயே தேர்ந்துகொண்டு வாசிப்பிலும் எழுத்திலும் நிறைவடைந்தார்.

க.நா.சு படைப்புகளில் சர்மாவின் உயில், வாழ்ந்தவர் கெட்டால், ஒருநாள், பொய்த் தேவு, அசுரகணம் முதலான பல நூல்கள் முக்கியமானவை. தமிழ் இலக்கியம் உலக இலக்கியத்திற்கு நிகராக நிற்க வேண்டும் என்ற கவலையில், தமிழின் மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்திலும், பல உலக இலக்கியங்களைத் தமிழுக்கும் மொழியாக்கம் செய்தார்.

சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை மொழிபெயர்ப்பு, விமர்சனம் முதலான பல துறைகளிலும் தரமாக இயங்கிய க.நா.சு தன் காலத்திற்கு மேலான பல பரிசோதனை முயற்சிகளைச் செய்திருக்கிறார். ராமபாணம், இலக்கிய வட்டம், சூறாவளி, முன்றில், Lipi - Literary Magazine போன்ற சிற்றிதழ்களை நடத்தினார்.

நவீன இலக்கிய முயற்சிகளுக்கான சங்கமாகச் செயல்பட்ட மணிக்கொடியின் முக்கிய அங்கத்தினர் இவர். 1986ஆம் ஆண்டு அவரது “இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்” என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி பரிசு பெற்றார். தமிழக அரசின் விருது, குமாரன் ஆசான் விருது போன்றவற்றால் கௌரவிக்கப்பட்டார்.

1988ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி டெல்லியில் மறைந்தார். 2006ம் ஆண்டு அவரது நூல்களை தமிழ்நாடு அரசு நாட்டுடமையாக்கியது. தமிழ் எழுத்தாளர் மற்றும் நாடக நடிகரான பாரதி மணி க.நா.சு வின் மருமகன்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
26 (25%)
4 stars
51 (49%)
3 stars
20 (19%)
2 stars
7 (6%)
1 star
0 (0%)
Displaying 1 - 11 of 11 reviews
18 reviews
January 1, 2024
தனது மாமாவின் கடிதத்திற்கு ஒப்புதலாய், மேஜர் மூர்த்தி, சாத்தனூர் கிராமத்திற்கு ஒரு நாள் செல்வதனால் அவனுக்கு ஏற்படும் அனுபவங்களையும், வாழ்க்கை புரிதல்களையும், மாறுதல்களையும் உள்ளடக்கிய புனைவு கதை.

எது வாழ்க்கை?, என்ற கேள்விக்கு, பல இடங்களில் தத்துவ ரீதியில்,அவர் பக்கத்தை எடுத்து வைப்பதாய் பார்க்கிறேன். ஸ்பினோசா என்ற தத்துவ வாதியையும் எனக்கு ஒரு வரியில் அறிமுகப் படுத்தியதோடு, அக்காலத்து அரசியல் நிலை, போர் காலத்தில், உலக நாடுகளின் பாதிப்பு மற்றும் சாத்தனூர் கிராமத்தின் நிலை பற்றிய கலந்துரையாடல்கள் இடம் பெற்றிருந்தது நன்றாக இருந்தது.

கதையின் முதலில் வரும் ஒரு கைம்பெண்ணை பற்றிய பின் தொடரும் உரையாடல்கள் சிந்திக்க வைப்பதாயிருந்தது. நான் கூட, தமிழ் சினிமாவின் வழக்கமான திரைக்கதை போன்று, அவள்தான் மூர்த்திக்கு ஜோடியாக போகிறாள் என்றெல்லாம் அனுமானித்திருந்தேன். மேலும், இதில் முடிவாய் அமைத்த விதமும் ரசிக்கும்படியாய் இருந்தது. அம்முடிவு எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பதை சாத்தனூர் கிராமத்தில், மூர்த்தியுடன் காலாற நடந்துவிட்டு வந்த, நம்மிடையே விட்டுவிட்டனர்.

பிடித்த சில வரிகள்:

‘ஒரு நிரந்தரமான உண்மையின் கூறுகள் இந்த நாவலில் வருகிற வாழ்க்கை வழிகளிலும், கதாபாத்திரங்களிலும் அடங்கிக் கிடப்பதாக நான் எண்ணுகிறேன்’.

‘பலமா, பலமில்லாமையா என்று தீர்மானிப்பது அவரவர்களுடைய நோக்கைப் பொறுத்தது. தாக்குதலைச் சமாளிக்கத் தெம்பு போதவில்லை. என் கதாநாயகன் சிந்திக்க முயன்று முயன்று தடுமாறுகிறான். பலவீனமான, பழைய வாழ்வேதான் என்றாலும் நிலைக்கிற மாதிரியான ஒரு வாழ்வுக்கு அடிகோலிக்கொள்ள வேண்டும் என்று அவனுக்குத் தோன்றுகிறது’.

‘அறிவும் அனுபவமும் ஒரு மனிதனுடைய ஆயுளில் சற்றேறக்குறைய அவனுடைய முப்பதாவது வயசில் கூடுகின்றன என்று சொல்ல வேண்டும். சாதாரணமாகத் தத்துவ விசாரத்தில் ஈடுபட்ட அதிகமில்லாத மனிதனும்கூட, அந்த வயசில் சற்று அதிகமாகத் தத்துவ விசாரத்தில் அடிப்படையான மேன்மை ஆராய்ச்சியில் இறங்கிவிடுகிறான் என்பது என் அனுபவம்’.

‘பிறர் துயரத்தைப்பற்றி நினைப்பதால் தன் துயரம் மாறிவிடாது என்பது பங்கஜம் அனுபவபூர்வமாக அறிந்த விஷயம்தான். ஆனால், பிறர் துயரில் பங்கிட்டுக்கொள்வதில் தன் துயரை மறக்கமுடிவதையும் அவள் அனுபவபூர்வமாகக் கண்டிருந்தாள்’.

‘வேறு என்ன செய்தாலும் அகலாத ஒரு துயரம் பிறர் துயரத்திலே மங்கி, மக்கி, மறைந்துவிடுகிறது. வாழ்க்கையிலே துயரை அதிகமாக அனுபவித்தவர்களின் மனம் கனிந்து இருப்பதற்கு இதுதான் காரணமோ? சுயநலம் காரணமாகவே அவர்கள் பிறர் துயரில் பங்கெடுத்துக்கொள்ள நேர்ந்ததோ?’

‘துயரங்களை ஒன்றன்பின் ஒன்றாக, நேருக்கு நேர் சந்தித்துப் பார்த்துவிட்டவர்களுக்குத் தானாகவே ஒரு தத்துவ விசாரவேகம் அமைந்துவிடுகிறது’.

‘இன்றும் சரி, நேற்றும் சரி, இனி வரப்போகிற நாட்களிலும் சரி, அனுபவத் துயரம்தான் கலாசாலைப் பேராசிரியர்களைவிடப் பெரிய தத்துவ ஆசிரியன் என்பதில் சந்தேகமில்லை’.

‘எதுவும் பிரமாதமான சிந்தனையல்ல. சிந்தனையற்றிருப்பதே ஓரளவுக்கு பிரமாதமான விஷயமாக இருந்தது இந்த நாட்களில்’.

‘ஒவ்வொரு மனிதனும் வாழுகிற ஒவ்வொரு நாளுமே அவனவனுக்கு, அவனவன் அளவில், ஒவ்வொரு விதத்தில் முக்கியமான நாட்கள்தான். இந்த உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டுதான் மனிதன் ஒவ்வொரு நாளுமே வெற்றிகர மான வாழ்க்கை நடத்த முடிகிறது - எவ்வளவு வெற்றிகரமாக அந்த நாளின், அந்த நாழிகையின், அந்த விநாடியின் செயலிலே ஈடுபடுகிறான் என்பதைப் பொறுத்துதான் வாழ்க்கையில் வெற்றி’.

‘உலகத்தில் மனிதன் தோன்றிய நாள் முதலாக இதுதான் மனிதனுடைய லட்சியம். குடும்பத்தை லட்சியமாகக்கொண்ட இடத்தில்தான் மனித குலத்தின் உயர்ந்த கிளைகள் தோன்றியிருக்கின்றன. அந்தக் கிளைகளில்தான் மகோன்னதமான தனி மனிதர்கள் தோன்றியிருக்கிறார்கள்’.

‘கடவுளின் ஆட்சி என்கிற ஆதரவு மனிதனுக்கு இருக்கிற வரையில் உலகில் ஏழைகள் என்கிற ஜாதியினர் என்றும் இருந்துகொண்டுதான் இருப்பார்கள். ஏழைப் பங்காளன் என்கிற பெயர் கடவுளுக்கு நிலைக்க வேண்டுமே, அதற்காக வேரும்…’

“உலகில் எங்கேயும் மிருகங்கள் ஒன்றாகத்தான் இருக்கின்றன. சாவு என்கிற கோரத் தாண்டவத்தின் மத்தியிலே, தென் பிரான்சு தேசத்தில், எங்களுக்கெதிர்ப்பட்ட ஒரு பசுங்கன்று எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது. பசு மனிதனுக்கு இரையாகிவிட்டது. கன்று மட்டும் எப்பொழுதும்போல, மனிதன் மனிதனுக்கு இழைக்க முயன்றுகொண்டிருந்த தீமையை உணராமல், துள்ளி விளையாடிக்கொண்டிருந்தது.

“அந்த மாதிரி ஒரு விநாடியை ஓர் ஆயுள் முழுவதும் நீட்டிக்க முடியாமல் இருப்பதுதான் மனிதன் சோக வாழ்வுக்கே சிகரமாக அமைகிறது”

“கடவுள் மனிதனைப் படைத்தான் என்று வைத்துக்-கொள்வோம் - மனித சுபாவத்தையும் படைத்தான் - மனிதனுக்கு ஒரே கண்ணையும் அக்கண்ணுக்கு ஒரே நோக்கையும் படைக்காததுதான் கடவுளின் பிசகு.”

“நிழலைப் பின்பற்றிப் பின்பற்றி மனிதன் நடந்து பழகிக்கொண்டிருக்கிறான். நிழல் விழுகிற பக்கத்துக்கு எதிர்ப்பக்கம் திரும்பி நடந்தால், தன் நிழல் தன்னைத் தொடரும் என்று மனிதனுக்குத் தெரிவதில்லை. நிழலைத் தொடர்ந்துகொண்டே காலத்தைக் கடத்தி வருகிறான். எதிர்ப்பக்கம் திரும்பினால் வெளிச்சம் கண்ணில் பட்டுவிடும் - ஆனால், எப்படியோ மனிதன் திரும்பாமலே காலம் தள்ளிவிடுகிறான்”

“முன்னேயும் பின்னேயும் பார்த்துக்கொண்டு, குறுகிய அளவிலேதான் என்றாலும், முன்னேறுபவன்தான் மனிதன்.”

“என் வாழ்வில் நான் கண்டவரையில், ஆசைப்படாதவனே அதிர்ஷ்டசாலி என்று சொல்ல எனக்குத் தோன்றுகிறது”

“அப்படியும் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லையே!“

ஆசைப்படுகிறவன் ஏமாறுகிறான் என்கிற அர்த்தத்தில் சொன்னேன் நான்”

அது சரி, ஆனால் ஆசையற்றவன் மனிதனே அல்ல”

வாழ்க்கையின் அடிப்படையான ஆதாரமான எந்த விஷ யத்தையும் பற்றி எவ்வளவு பேர் எத்தனை நாள் தான் எவ்வளவோ அறிவோடு விவாதம் நடத்தினாலும் தீர்மானமான முடிவு கண்டுவிட முடியாது என்பதுதான் அந்த நிச்சயம். ஆகவே, கூடியவரையில் நான் யாருடனும் எவ்வித விவாதமும் நடத்துவது கிடையாது.

எமர்ஸன் இதையே சொன்னான்: ‘நீ எங்கே சென்றாலும் உன்னையேதான் அழைத்துப் போகிறாய்’

உன் நோக்கின் மேன்மையைப் பொறுத்தது, உன் லட்சியத்தின் திடத்தைப் பொறுத்தது, இவ்வுலகின் எந்த இடத்திலிருந்தும் உனக்குக் கிடைக்கிற லாபம்” என்றார் சிவராமையர்.

வேறு காரியம் இல்லாததனால்தான் போலும் அவனுக்குச் சதா பேச்சு தேவையாகவேதான் இருந் தது. வாய்விட்டுப் பேச யாரும் அகப்படாவிட்டால் தனக்குத் தானே, ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் இருக்கிற இரண்டாவது மனிதனுடன், பேசிக்கொள்ளத் தொடங்கிவிடுவான்.

“ஏதோ கதைகள் சொல்கிறார்களே தவிர, இந்தக் காவேரி நதியின் கரைகளை மனிதன் கட்டியதில்லை-இந்தக் கரைகளுக்குள் ஓடு என்று யாரும் காவேரி நதிக்கு ஆணையிட்டுக் கட்டுப்படுத்தவில்லை. இந்தக் கரைகளைத் தன் தேவைகளை உத்தேசித்து, தன்போக்கை அறிந்து, தன் லட்சியத்தை மனசில் ஏற்றுக்கொண்டு காவேரி நதி இந்த இரண்டு கரைகளையும் ஏற்படுத்திக்கொண்டது. வெள்ளம் வருவதுண்டு சில சமயம்; கரை உடைவதுண்டு; உடைந்துவிட்ட கரையைச் ச��ப்பனிட மனிதன் மண்ணும் கூலியும் உதவுவதுண்டு. ஆனால், இந்தக் கரைகளைக் காவேரியாறு தானாகச் சிருஷ்டித்துக் கொண்டதுதான். கரைகளை மீறக்கூடாது என்கிற சிந்தனை தூய்மையானது.
Profile Image for Sadhasivam.
37 reviews5 followers
April 26, 2021
ஒரு நாள் நெடுங்கதை தான் நான் படித்த க.ந.சுவின் முதல் படைப்பு.

கதை பரப்பு - பல போர்க்களம் கண்டு பல நாட்டு அனுபவம் கொண்ட கிட்டா என்கிற மேஜர் மூர்த்திக்கும் , வெகுஜன வாழ்வின் பூர்ண வடிவத்தை சாத்தனூர் என்னும் தஞ்சை வாழ் சிறிய கிராமத்தில் பெற்ற சிவராம-ஐயர் தம்பதியர்க்கும் நடக்கும் ஒரு அனுபவ உரையாடல்


கா.நா.சுவின் தஞ்சை பகுதி பிராமண வட்டார வழக்கு எனக்கு மிக அருகில் புரியும் ஒரு சொல்லாடல். மனிதர்கள் கொண்ட கதை.
ஒரு மாதிரி அக்ராஹாரம் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருக்கிறது.

பல வாழ்வியல் அனுபவ பரிமாணகளை சில பிராமண மனிதர்கள் ஊடக கடந்து செல்வத்து - கதை சொல்லி திட்டம். அவர்களின் வாழ்வின் சுகம் -தூக்கம் நமக்கு ஒரு இணைப்பை கொடுக்கிறது


மூர்த்தியின் நிழல் - வாழ்ககை - மனிதர்கள் உருவகம் , சிவராம ஐயரின் விதி தர்க்கம் , மாமியின் புரிதல், சாமாவின் கேலி , க.ந.சு .வின் ஹிட்லர், சுபாஷ் சந்திர போஸ் ஓப்பிடு மற்றும் நகை கதையின் இயக்கத்தை சிறப்பிக்கின்றன

இப்படி-யம் ஒரு வாழக்கை இருக்கு என்று மூர்த்தியும் நாம் நம்புவோம். மங்களம் மூர்த்தி இருவரும் சுபமாக வாழ நம்மை
கா .நா.சு தயார் படுத்தி விடுவார்

ஒரு நாள் நாமும் சாத்தனூர் கிராமத்தில் வாழ்ந்து மறைந்து இருப்போம்


நான் கற்றவை பெற்றவை

1. அனுபவம் ஒரு நிலையான கோட்பாடு இல்லை
2. மனிதம் தான் முக்கியம்
3. ஹிட்லர் , சுபாஷ் சந்திரா போஸை சாதித்தது ஒன்றும் இல்லை
4. ஆன்மா, பாவம் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சேர்த்தே இருப்பவை
5. நீ எங்கே சென்றாலும், உன்னையேதான் அழைத்து சொல்லுகிறாய்
Profile Image for Girish.
1,157 reviews263 followers
December 28, 2022
Jeyamohan Rated this book as one of the best Tamil novels and i picked it up out of curiosity. Written in 1950s and set in Sathanur village, the book follows Major Murthy over a day with the villagers.

Major Murthy was the privileged orphan who studied in Germany, fought under Hitler and then joined INA under Subash Chandra Bose. Now returning to his root, he comes to an uncle and aunt who he had never met before and is trying to make sense.

The villagers are a colorful bunch of sgraharam people - the gossip mongers, the nosey neighbour, the miser, the fanatic, the altruist et all. Their interactions, seen through a philosopher's frame of mind, makes him appreciate simple community mindset as against regimental living. The ease and simplicity of their lives and their love for him wins him over.

The fact that he is able to philosophise puts him high up on maslow's hierarchy. Every person does this musing at some point or other nd hence the book works as dialogues on practicality.

Decent book with olden ideas
Profile Image for Pari Tamilselvan.
15 reviews8 followers
April 10, 2022
"ஒவ்வொருவனும் தனக்கு வாழ்வில் எவ்விதமான பொறுப்பும் இருக்கக்கூடாது என்றுதான் முதலில் நினைக்கிறான். ஆனால், எப்படியோ ஒவ்வொருவன் தலையிலும் அவன் சுமக்கக்கூடிய அளவுக்குப் பொறுப்பு ஏற்றப்பட்டுவிடுகிறது. ஏற்றப்படுகிற பொறுப்பைச் சகிக்கக்கூடிய அளவுக்கு மனிதன் தன்னைத் தயார் செய்துகொள்ள வேண்டியது அவசியம்தானே!” என்றான் மூர்த்தி.
Profile Image for Rajesh Arumugam.
144 reviews3 followers
November 17, 2020
நான் வாசித்த சிறந்த நாவல்களில் ஒன்று என குறிப்பிடுவேன். உலகத்தில் பல இடங்களில் வாழ்ந்து அலைந்து சுற்றி திரிந்து பல அனுபவங்களை பெற்ற  மேஜர் மூர்த்தி சாத்தனூர் அக்ராஹாரத்திறகு வந்து இருக்கும் ஒரு நாளின் ஊடாக வாழ்க்கையில் பல வகையான மக்களை பற்றியும், வாழ்க்கையை பற்றியும் ஆழமாகவும் விஸ்தாரமாகவும் கூறிய அவதானிப்புகளுடன் தொட்டு செல்கிறது நாவல் . உலகம் சுற்றியவன் வாழ்க்கை இறுதியில் எப்படி மங்கலத்திடம்  வாழ்க்கை ஒப்படைக்க படுகிறது என்று நுட்பமாக முடிகிறது. 
Profile Image for Abirami Sridhar .
64 reviews4 followers
July 18, 2024
க.நா.சு வின்‌ முதல் புத்தகம் இது எனக்கு! ஒரு பெரும் எழுத்தாளரின் அறிமுகம் இவ்வளவு எளிமையாக நெஞ்சை கொள்ளைகொள்ளும் அளவு இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை!

வாழ்வில் தனக்கென்று யாருமில்லை எனத் தீர்மானித்து, ஒரு ஆசிரியரோடு ஜெர்மனி சென்று ஹிட்லரால் ஆட்கொள்ளப்பட்டு, பின் உலகம் முழுவதும் சுற்றித்திரிந்த மேஜர் மூர்த்திக்கும், தஞ்சாவூரில் சாதாரண கிராமமான சாத்தனூரின் சிவராம ஐயருக்கும் நடக்கும் ஒரு நாள் தான் கதை. அந்த ஒரு நாளில் மூர்த்தி வாழ்க்கையே கற்றுக் கொண்டு விட முயல்கிறான்.

முதலாவதாக தஞ்சாவூர் பிராமண சொல் வழக்கு. படிப்பதற்கு அவ்வளவு எளிமையாகவும் இனிமையாகவும் இருந்தது. பொதுவாக அந்த காலத்தில் இது போன்ற எழுத்து நடை சகஜம் என்றாலும் க. நா. சு மிக நேர்த்தியாக இந்த வழக்கை இக்கதையில் பிணைத்துள்ளார்.

அடுத்து இந்த புத்தகத்தின் கதாபாத்திரங்கள். ஒவ்வொரு கதாபாத்திரமும் நம் மண்ணில் வாழும் கோடான கோடி பேர்களின் ஒரு நகல். சாதாரண மக்களுக்கும் சாதாரண முகங்களுக்கும் சாதாரண குணங்களுக்கும் இவ்வளவு அழகான சொல்லாடல்கள் தந்து வாழ்வின் இயற்கையை காட்ட முடியும் என்று இந்த நாவலை படிப்பவர்கள் உணரலாம். ஒவ்வொரு சாதாரண கதாபாத்திரமும் நேரடியாகவோ மறைமுகமாகவோ புகட்டும் வாழ்க்கையின் அர்த்தங்கள், சோகங்கள், இன்பங்கள், புரிதல்கள், 'இதுதாண்டா வாழ்க்கை, போடா' என்று சொல்லும் ஒரு மெத்தனம் என அனைத்தையும் நான் ரசித்து ரசித்துப் படித்தேன்.

அடுத்ததாக வாழ்க்கை மீதான தத்துவ குறிப்புகள். அடுத்தடுத்து ஒவ்வொரு வரியிலும் வாழ்க்கை என்பது என்ன, எவ்வாறு ஒரு மனிதன் வாழலாம், வாழ முடியும், வாழ வேண்டும் என்ற வரையறைகள் படிக்கும்போது சாதாரணமாக தெரிந்தாலும் எண்ணி பார்க்கும்போது அசாதாரணமான நிதர்சனங்களாக இருந்தன. பல கேள்விகளும் எழுந்தன.

அடுத்து பெண்களைப் பேசும் விதம். அந்த காலகட்டத்தில் எழுதும் எழுத்தாளர், அதுவும் இவ்வளவு சிறப்பிற்குரிய எழுத்தாளர், பெண்களைப் பற்றி எப்படி எழுதப் போகிறார் என்று நான் எதிர்பார்த்ததற்கு நேரெதிர்மாறாக, அவ்வளவு அழகாக, அவ்வளவு ரசனையாக அவ்வளவு புரட்சியாகவும் கூட எழுதி இருக்கிறார்.

இறுதியாக அக்காலகட்ட அரசியல் பார்வை. அரசியல் நோக்கி, அரசியல்வாதிகள் நோக்கி, போராளிகள் நோக்கி, போரை நோக்கி வைக்கும் கேள்விகளும் நமக்கு புகுத்தும் உண்மைகளும் புல்லரிக்கச் செய்கின்றன. அரசியல் குறித்த ஒவ்வொரு வரியுமே இன்றைய காலகட்டத்திற்கு அவ்வளவு பொருந்துபவையாக இருக்கின்றன. நான் ரசித்துப் படித்த புத்தகங்களில் நிச்சயமாக இந்த புத்தகத்திற்கு இடமுண்டு. க.நா.சு வின் பிற புத்தகங்களை படிக்க ஆவலாக உள்ளேன்!
Profile Image for Hari.
102 reviews15 followers
March 28, 2022
This book reminded me the novel “nalai matrorru nale by g nagarajan” only difference being both the novels are poles apart,

The protagonist is blessed thoroughly during is entire process from being born to a upper caste to travel abroad for studies and choose is path solely based on his inner desire,

For me the major murthy symbolises the current woke liberal gang who are driven solely by propagandist ppl and philosophies, once he gets some realisation/harsh truth moves towards the next philosophy example being participating in WWIi and then in INA and finally reaching sathanur sarva manya nagar/village

Major murthy All the while seems to be confused soul, neither the practical lot nor the revolutionary type, the dislike he shows for status of widowed but never getting the courage to go ahead and marry the hirl next door who was windowed at very young age,

Except murthy all others characters a resticking to their belief system irrespective of heinous/generous/stupidity of their nature

The conversation between him and uncle are really good in bringing this out

This entire review has been hidden because of spoilers.
2 reviews
January 6, 2024
A book which describes that how one day can change a persons life!

A man who lost his way by wandering different aspects in his late 20's and when an invite to his uncle's place he receives which he decides to go and how a day happens there and how it affects his life.

An interesting story that depicts how&what is life, and stating a strong fact that it is nothing but on how a person thinks. Isn't it correct? Life happens the way we think and what we want to lead, which this books shows by quoting many examples of lives of people who lives and lived in that village and how it affects a single person who is searching for the meaning of life.

And when the book ends, I actually thought what will happen in his life after this day which author left to our thoughts....

A good book to read!
Profile Image for Saravanapiriyan K.
269 reviews3 followers
July 19, 2022
மிகவும் அருமையான புத்தகம். ஒரு குறிப்பிட்ட வயதில் வாழ்வில் அனைவருக்கும் தோன்றும் ஐயத்தை வைத்து எழுதப்பட்ட கதை இது.‌
Profile Image for Bhuvan.
254 reviews42 followers
April 3, 2024
3.5

Lots of philosophical thoughts throughout the novel.

Good one.

Simple story line with a lot of sub plots and characters.

Interesting portrayal.
Profile Image for Chidambaram.
73 reviews2 followers
July 14, 2025
க. நா. சு வின் ரசிகன் இருந்தாலும் இந்த ஒரு நாள் பிடிக்கல. அவருடைய மற்ற கதைகள் போல எழுத்து சிக்கனம் இல்லை. 149 பக்கம் தான் 300 பக்க அலுப்பு குடுத்தது.
Displaying 1 - 11 of 11 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.