எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல்.
புள்ளி விவரங்களுக்கு மத்தியில் அனுபவங்களின் வழியாகப் பல்வேறு துறைகளைப் புரிந்துகொள்ளும் விதத்தில் அமைந்திருக்கிற கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. சர்வ சாதாரணமாகக் கடந்துபோகும், பார்வைக்கே வராத விஷயங்களைக் காட்சிப்படுத்தும் இந்தத் தொகுப்பு அடர்த்தியான கேள்விகளை முன்னிறுத்துகிறது. எளிய விஷயங்கள் இவை எனக் கடந்து போயிருக்கலாம் இதுவரை. ஆனால் அவற்றிற்குப் புதிய அர்த்தங்களை வரைந்து காட்டுகிறது இந்தப் புத்தகம். அறிவுரை சொல்லும் தொனியை முற்றாக ஒதுக்கி தோளில் கைபோட்டு உரையாடும் ஒரு தோழனைப் போல, தமிழ் நிலத்தின் பல்வேறு சிக்கல்களின் முடிச்சுகளை அவிழ்க்க முயல்கிறார் சரவணன் சந்திரன்.
நிகழ்காலத்தின் கண்ணாடி இந்த புத்தகம், இது ஒரு துளி தான், பள்ளி , கல்லூரி வாழ்வை முடித்து பொது வாழ்வுக்கும் வரும் அத்தனை மனிதர்களும் இந்த புத்தகத்தை படிப்பது அவர்களின் வாழ்க்கைக்கு நல்லது, சமகால வாழ்க்கையின் அபத்தத்தையும், சாதுர்யத்தையும் இந்த புத்தகம் உங்களுக்கு புரிய வைக்கும்