காலம் கடந்து கிடைக்கும் தடயம் கூடக் குற்றங்களின் எண்ணிக்கையைத் தடுத்து நிறுத்தும்.
இந்தியாவில் இருக்கும் நிலங்களை மலடாக்க முயற்சியில் தந்தை ஈடுபடுவதைத் தெரிந்த சௌபர்ணிகா அதைப் போலீஸிடம் கொண்டுபோவதற்குள் கொல்லப்படுகிறாள்.
ஒருவருடத்திற்குப் பிறகு இறந்தது சௌபர்ணிகா அல்ல அவளிடம் இருந்து காரை திருடிக்கொண்டு போன மாயா என்பதைப் பத்திரிக்கையாளர் ஹேமாபாரதி மூலம் வெளிவருகிறது.
சௌபர்ணிகா வீட்டின் தோட்டகாரர் இவர்கள் செய்யும் சதியை அறிந்த பிறகு போலீஸ் உதவியை நாடுகிறார்.இந்த சதியில் ஈடுபடும் ஐவரையும் விவசாயியான தோட்டகாரரின் கையாலே சுட வைத்து இந்த கேஸை ஒரு முடிவுக்குக் கொண்டுவருகின்றனர்.