அடுத்தவர்களைத் துன்புறுத்தி பார்க்கும் போட்டியின் முடிவுகள் அவர்களுக்கே பாதகமாக அமையும்.
தமிழ்நாடு போலீஸ் எப்படி விரைவாகக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கிறார்கள் என்று பார்க்க இரு தொழிலதிபர்கள் போட்டி வைத்துக் கொல்கத்தாவில் பணத்திற்காகக் கொலை செய்யும் கலியமூர்த்தியை வரவைத்து கொன்று தலையில்லா உடம்பை பொது இடத்தில் போட்டு வைக்கத் திட்டம் தீட்டுகின்றனர்.
இரு தலையில்லா உடல்கள் கிடைக்கிறது, யார் என்று கிரைம் ஆபிஸர் விவேக் விசாரணையைத் துவக்கும் போது க்ளு தருகிறேன் என்று ஒருவன் முகம் காட்டாமல் முன் வர அதுவே குற்றவாளியை நெருங்க காரணமாகிறது.
கலியமூர்த்தியை உடனடியாக வர சொன்னதால் இரட்டை பிறவியான தன் தம்பியை அனுப்பி வைத்தவன் பின்னே தானும் வர, அங்கே தன் தம்பியின் உயிர் இல்லா உடலை தான் பார்க்கிறான். தன் தம்பியை கொன்ற இரண்டு தொழிலதிபர்களையும் கொன்று சென்னையில் இரண்டு இடத்தில் போட்டு விட்டு விவேக்கிற்கு க்ளு கொடுத்துவிட்டுக் கொல்கத்தா திரும்பிய கலியமூர்த்தியின் பின்னேயே வந்து கைது செய்கிறான் விவேக்.