Jump to ratings and reviews
Rate this book

அப்பாவின் வேஷ்டி

Rate this book
பிரபஞ்சனின் சிறுகதைகள் காட்டும் யதார்த்தம் மிகவும் நுண்மையானது. சமூக, பொருளாதார, உளவியல் நெருக்கடிகளுக்கு உள்ளான மனிதர்களின் துயரங்களைப் பேசும் இக்கதைகள் அன்பால் மட்டுமே மனிதர்கள் மீட்சி பெற முடியும் என்பதை வலியுறுத்துகின்றன. பிரபஞ்சன் கதைகளில் வரும் பெண்கள் அபூர்வமானவர்கள். வேதனைகளைத் தாண்டி வாழ்க்கையைக் காத்திரமாக எதிர்கொள்ளும் தைரியம் கொண்டவர்கள். அன்பின் பொருட்டு அவலங்களை சகித்துக் கொண்டு வாழ்பவர்கள். அந்த வகையில் அவரை தி.ஜானகிராமனின் வாரிசு என்றே கூறுவேன். மொழிநுட்பத்திலும், கச்சிதமான வடிவத்திலும் தேர்ந்த சிற்பம் போல கலைநேர்த்தி பெற்றுள்ளன பிரபஞ்சனின் சிறுகதைகள்.

எஸ். ராமகிருஷ்ணன்

Unknown Binding

17 people are currently reading
70 people want to read

About the author

பிரபஞ்சன்

64 books60 followers
Prapanchan (Tamil: பிரபஞ்சன்), is the pseudonym of S. Vaidyalingam (Tamil: சாரங்கபாணி வைத்தியலிங்கம்) a Tamil, writer and critic from Puducherry, India.

He started his career as a Tamil teacher in Thanjavur. He also worked as a journalist in Kumudam, Ananda Vikatan and Kungumam. In 1961, he published his first short story Enna ulagamada in the magazine Bharani. He was influenced by the Self-Respect Movement. He had published 46 books. In 1995, he was awarded the Sahitya Akademi Award for Tamil for his historical novel Vaanam Vasappadum (lit. The Sky will be ours) set in the times of Ananda Ranga Pillai. His works have been translated into Hindi, Telugu, Kannada, German, French, English and Swedish. His play Muttai is part of the curriculum in Delhi University and his short story collection Netrru Manidhargal is a textbook in many colleges.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
29 (41%)
4 stars
28 (40%)
3 stars
12 (17%)
2 stars
1 (1%)
1 star
0 (0%)
Displaying 1 - 8 of 8 reviews
Profile Image for Udhayakumar Tamileelam .
87 reviews27 followers
August 1, 2020
பிரபஞ்சனின் எழுத்தில் என் முதல் வாசிப்பு.மொத்தமாக 25 சிறுகதைகளை கொண்ட ஒரு தொகுதி.
பிரபஞ்சனின் எழுத்துக்கள் மிகவும் இலகுவாகவும் அதேசமயம் சிலகணங்கள் மனதில் அசைபோடுகின்றன.
எனக்கு பிடித்தமான கதைகள்:
1.சைக்கிள்
2.அப்பாவு கணக்கில் 35 ரூபாய்(எனக்கு மிகவும் பிடித்தமான 9ஆம் வகுப்பு தமிழ் துணைப்பாடத்தில் வரும் கதை)
3.நிகழ்உலகம்
4.அரி என்கிற நண்பன்
5.வீடு
6.இராஜகோபுரமும் சங்கப்பலகையும்
7.வடு
8.காயம்பட்ட மாலைவானம்
9.3 நாள்
10.ஓடிப்போனவள் திரும்பியபோது
11.சுமதிக்கு ஒரு கடிதம்
12.4வது வழி
13.நேற்று மனிதர்கள்
14.ராட்சஸக் குழந்தை
15.தட்சணை
16.மனுஷி
17.அப்பாவின் வேஷ்டி
18.மனசு
ஒரு சில கதைகள் ஆண்களால்,பெண்களால் பாதிக்கப்படும் பெண்களை மற்றும் ஆண்களை பற்றியும் எழுதி உள்ளார்.சில கதைகள் நெஞ்சில் ரீங்காரம் இட்டுக்கொண்டே செல்லும்.
Profile Image for Anitha Ponraj.
277 reviews44 followers
April 17, 2021
"எல்லோருக்கும் அம்மாவை பிடிக்கும்
எனக்கு அப்பாவைத்தான் அதிகம் பிடிக்கும்"

-அப்பாவின் வேஷ்டி
பிரபஞ்சன் ✨


புத்தகத்தின் பின் அட்டையில் இருந்த இந்த இரண்டு வரிகள் போதுமானதாக இருந்தது எனக்கு, இந்த புத்தகத்தை சென்னை புத்தகக் கண்காட்சியில் தேர்வு செய்வதற்கு.

"அப்பா" நிச்சயம் பெண்பிள்ளைகளின் முதல் ஹுரோவாகவும், தன் வாழ்வில் அவர்கள் கடந்து வரும் ஆண்களை தங்களையும் அறியாமல் ஒப்பிட்டு பார்க்கும் ஒரு தராசாக இருப்பார்கள்.

அம்மாவை பற்றி தான் எத்தனை கதைகள், கவிதைகள். ஆனால் ஏனோ அப்பா அவ்வளவு பாடப்படவில்லை(என் கருத்து) அதை அவர்கள் பெரிதும் கண்டுகொள்வதோ, எதிர்பார்ப்பதோ கிடையாது. தன் பாரங்களை காட்டிக் கொள்வதும் கிடையாது.ஆனால் நம் எல்லோர் வாழ்விலும் முக்கிய பங்கு வகிப்பவர்களாக இருப்பார்கள்.

அதனால்தானோ என்னவோ அதிகம் எழுதப்படாத அப்பாவைபற்றி அப்படி ஆசிரியர் என்னதான் இந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறார் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் எனக்கு .

வித்தியாசமான வெவ்வேறு கதைக்களங்களை கொண்ட, எளிமையான யதார்த்தமான, 25 சிறுகதைகள் கொண்டு நெய்யப்பட்டததுதான் இந்த அப்பாவின் வேஷ்டி.

அப்பாவைபற்றி சில கதைகள் மட்டுமே இருந்தாலும், "தந்தையுமாகி" போன்ற குணநலன்களை கொண்ட கதைமாந்தர்களை பல இடங்களில் காண முடிகிறது.

என்னை அதிகம் கவர்ந்தது புத்தகம் முழுவதும், நாம் நன்கு அறிந்த பொருட்களையும், சூழல்களையும் கொண்டு கவிநயத்துடன் எழுதப்பட்ட உவமைகள்தான். அட, இதை இப்படி கூட ஒப்புமை காட்ட முடியுமா என்று வியக்கும் விதமாக இருந்த அழகான எழுத்துநடை.

80 களின் வாழ்க்கைமுறைகளை அதிகம் பிரதிபலிக்கிறது எல்லா கதைகளும்.

இன்று என் அப்பாவின் பிறந்தநாள். இன்று இந்த புத்தகத்தை பற்றி எழுத வேண்டும் என்று இரவோடு இரவாக வாசித்து முடித்த புத்தகம். ஏன் என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை.

வாழ்வில் சில விஷயங்கள் அப்படித்தானே.. காரணங்கள் தாண்டி..❤️✨
Profile Image for Vaideki Thayumanavan.
62 reviews
July 24, 2024
எழுத்தாளர் பிரபஞ்சனின் சிறுகதைகள் அனைத்தும் எனக்கு ஒரு பெருந்தீனி. அப்படியாகவே அமைந்தது அவரின் 'அப்பாவின் வேஷ்டி' சிறுகதைகள் தொகுப்பில் இருந்த சிறுகதைகள் அனைத்தும். ஒரு நாளைக்கு இரு சிறுகதைகள் என்று வாசிக்கத் தொடங்கி, அவ்விருசிறுகதைகளை வாசித்தபின் அந்த கதைகளில் வரும் மாந்தர்களின் வாழ்க்கை நெருக்கடிகளையும், அவர்களின் மனவுணர்வுகளையும் நினைத்து அடுத்த நாள் வரை என் மனதினுள்ளே அசைபோட்டப் பிறகுதான் என்னால் அடுத்தடுத்த கதைகளுக்குள் நுழைய முடிந்தது.

''எல்லோருக்கும் அம்மாவைப் பிடிக்கும், எனக்கு அப்பாவைத்தான் அதிகம் பிடிக்கும்'' என்று பிரபஞ்சன் இந்த தொகுப்பின் முன்னுரையில் கூறியிருப்பார். அதற்கு அடுத்த வரியே ''ஆனால் அம்மா மகிழ்ச்சியைத் தொலைத்துவிட்டு வாழ்ந்தமைக்கு முதலும் கடைசிக் காரணமும் அப்பாவாகத்தான் இருக்க வேண்டும்'' என்று தன் அம்மாவின் நிலையில் இருந்தும் பேசியிருப்பார். பெண்களின் நியாயங்களை எப்பொழுதும் உரக்கக் கூறும் பிரபஞ்சன், ஆண்களின் உலகத்தினுள் பிரவேசித்து பெரிதும் பேசப்படாத அவர்களின் தியாகங்கள், மனக்குமுறல்கள், தவிப்புகள் போன்றவற்றை இந்த தொகுப்பில் இருக்கும் சிறுகதைகள் வழியாக வெளிச்சம் போட்டுக் காண்பித்துள்ளார்.

'3 நாள்' சிறுகதையில் ,பெண்ணின் திருமண வாழ்க்கையைப் பற்றிய பரிதவிப்பு அந்த பெண்ணின் அப்பாவிற்கு எப்படி இருக்கும் என்பதனை ஒரு பத்தியிலே கடத்தியிருப்பதில் தான் பிரபஞ்சன் ஒரு சிறந்த எழுத்தாளராக மிளிர்கிறார். ஆண்பிள்ளைகள் பெரிதாகி விட்டால் அப்பாவிற்கும் அவர்களுக்குமான இடைவெளியை அழகாகச் சொல்கிறது 'மாறுதல்கள்' சிறுகதை.

'4வது வழி' கதையில் ஒரு பெண்ணால் மனமுறிந்து, தற்கொலை வரைக்கும் சென்ற ஒரு ஆண், மீட்கப்படுகிறான் வேறொரு பெண்ணால். அவளால் அவன் மீட்கப்படுகிறான் என்று அவளுக்குத் தெரியாதது இந்த கதையின் அழகு.

சில ஆண்கள் தர்மசங்கடமான சூழல்களை தன் அறம் தவறாமல் எப்படிக் கையாளுகிறார்கள் என்பதனை 'காயம் பட்ட மாலை வானம்’ எனும் சிறுகதை வழியாக நாம் அறிய முடியும்

நம் வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்கள் ''இப்படித்தான்'' அல்லது ''இவ்வளவுதான்'' என்ற தீர்மானத்திற்கு இடமே இல்லாமல் போய்விடும் இந்த சிறு கதை தொகுப்பில் வரும் சில மாந்தர்களை வாசிக்கும்போது. குறிப்பாக 'அரி என்கிற நண்பன்' கதையில் வரும் அரி என்றும் மனதில் நிற்கும் ஒரு கதாபாத்திரம்.

பிரபஞ்சன் அவர்களின் எழுத்துக்கள், மனித மனதிற்குள் இருக்கும் அடுக்குகளை மெல்ல மெல்ல அவிழ்க்கும் வல்லமை படைத்தவை. ஒவ்வொரு அடுக்கும் ஆச்சரியம் நிறைந்தவை, உயிர்ப்பு நிறைந்தவை என்று இந்த அப்பாவின் வேஷ்டி தொகுப்பில் வரும் சிறுகதைகள் அனைத்தும் உணர்த்தி விட்டுச் செல்லும்.
Profile Image for Sangamithra.
58 reviews26 followers
April 27, 2022
🤍ஆனா பாருங்க நமக்கு ரொம்பவும் பிடிச்ச உடைதான் சீக்கிரம் இற்றுப் போகும். நிறம் மங்கிப் போகும். எவ்வளவு துவைத்தாலும் போகாத கறை வந்து ஒட்டிக்கொள்ளும். எனது சிறுவயதில் ஒரு ஆடை இருந்தது. மாம்பழ நிறத்தில் பட்டுப் பாவாடை. சிவப்பு நிறத்தில் முழுக்கை சட்டை. முழுவதும் சரிகைகளால் நிறைந்திருக்கும். ஒரு கட்டத்தில் அது இற்றுப் போய்விட்டது. அப்பாவின் வேஷ்டி என்ற சிறுகதையைப் படிக்கும்போது எனக்கு அந்த ஆடை தான் ஞாபகத்திற்கு வந்தது. கண்டிப்பாக உங்களுக்கும் இப்படியானதொரு ஆடை சார்ந்த அனுபவம் இருக்கும். அது இச்சிறுகதை வாசிக்கும்போது நினைவிற்கு வந்து போகும்.

🤍படித்த எல்லா கதைகளும் ஞாபகத்தில் உள்ளதா, பாதிப்பை ஏற்படுத்தியதா எனக் கேட்டால், இல்லை. சில உடன்பட முடியாத கதைகளும் இருந்தன.

🤍’மாமன் வரவு’ இந்தக் காலத்திற்கு சற்றும் பொருந்தாத சிறுகதை.

🤍Fan war பற்றிப் பேசும் ‘கருப்பட்டி’ சிறுகதை மேலோட்டமாக யதார்த்தத்தை ��திவு செய்திருந்தாலும் ஆங்காங்கே இருந்த ஒரு சில வசனங்கள் கதையோடு ஒன்றிப் போக விடாமல் செய்துவிட்டன.

🤍’வரிசை’ சிறுகதையில் கைக்குழந்தையுடன் தாய் திரையரங்கிற்குப் போயிருப்பாள். டிக்கெட் வாங்கும் வரிசை கலைந்து கூட்ட நெரிசலை உண்டு பண்ணிவிடும். அதனால் குழந்தை இறந்து விடும். கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருந்திருந்தால் இப்படியொரு இழப்பு ஏற்படாமல் போயிருக்கும் என்று எனக்குத் தோன்றியது. ‘பச்சக் குழந்தைய தூக்கிட்டு தியேட்டருக்குப் போகணுமாக்கும்’ என்ற ஒரு எண்ணத்தையும் இச்சிறுகதை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அப்படியான ஒரு கருத்தைதான் இந்தச் சிறுகதை பெரும்பாலானவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்றால் இதில் எனக்கு உடன்பாடில்லை. (இப்படியாக நான் யோசித்துப் பார்த்தேன். தியேட்டருக்குப் பதிலாக கோவில் என இருந்திருந்தால் இக்கதை எவ்வாறான எண்ணத்தை நமக்குள் ஏற்படுத்தி இருக்கும் என்று)

🤍மரத்தில் ஆணி அடித்து தொங்கவிடப்பட்ட தபால் பெட்டியை தனது smart move மூலமாக வைத்தவர்களையே அகற்ற வைக்கும் ‘அரி என்கிற நண்பன்’ என்ற சிறுகதையும்,
சொந்த வீடு பற்றிய கனவு… அப்படி கட்டுவதில் உள்ள பிரச்சினைகள் பற்றிப் பேசும் ‘வீடு’ என்ற சிறுகதையும், ‘அப்பாவின் வேஷ்டி’ என்ற சிறுகதையும் என்றும் என் மனதில் நிற்கும்.
Profile Image for t_for_tippu.
12 reviews3 followers
January 22, 2023
🖤
இலக்கியத்தில் கவிதைகள் கதைகள் என அம்மாக்கள் பிடித்திருக்கிற இடத்தை அப்பாக்கள் அடையவேயில்லை.
உலகில் உள்ள எல்லா அப்பாக்களும் தனக்குள்ளே இறுகிப்போன பேசப்படாத பக்கங்களைக் கொண்டிருக்கிறார்கள்.
அப்பாக்கள் என்றுமே மகள்களின் சூப்பர் ஹீரோக்கள் தான்.
மகன்களுக்கு எல்லாமே அம்மா தான்.

விதிவிலக்காக,

"எல்லோருக்கும் அம்மாவை பிடிக்கும்
எனக்கு அப்பாவைத்தான் அதிகம் பிடிக்கும்" என்னும் பிரபஞ்சனின் வரிகளும் அதை விடவும் தன் அப்பாவைக் குறித்து நேர்த்தியாக அவர் விவரிக்கும் வர்ணனைகளைப் படிக்கையில் எவ்வளவு உன்னிப்பாக பிரபஞ்சம் தன் தந்தையை கவனித்திருக்கிறார் என்று விளங்கும்.

அப்பாவைக் குறித்து ஒரு சில கதைகளே இருந்தாலும், மற்ற கதைகளில் இடம்பெறும் கதாநாயகர்கள் எல்லாருக்குள்ளும் அப்பாவின் சாயல் இருந்துகொண்டேயிருக்கிறது.

இயல்பான, யதார்த்தமான 25 சிறுகதைகளைக் கொண்டு பிரபஞ்சன் இந்த ‘அப்பாவின் வேஷ்டி’யை நெய்திருக்கிறார்.

அப்பாவை விடுங்கள் அவர் வேஷ்டியைக் குறித்துக் கூட ஒரு எழுத்தாளனுக்கு இந்த உலகிற்குச் சொல்வதற்கு எட்டுப் பக்கங்கள் இருக்கின்றன என்பது தான் எனக்கு ஆச்சரியம்.

இன்றைக்குப் நாம் இறக்கை முளைத்து வளர்ந்து விட்டோம் என்றாலும் கூட சிறு வயதில் நாம் கண்டு வியந்த நம் அப்பாவின் நினைவுகள் என்றுமே பசுமையானவை தானே.

நூல் : அப்பாவின் வேஷ்டி
ஆசிரியர் : பிரபஞ்சன்
பக்கங்கள் : 208
விலை : ₹237
Profile Image for Gayathri Nagarajan.
3 reviews
June 23, 2024
Reading the short story collection "Appavin Veshti" by Prabhanjan has deeply affected me, particularly the stories "Varisai" and "Snegam." "Snegam" resonated so strongly that I couldn't sleep properly after reading it. This might be because it brought back memories of my childhood parrot. The story made me reflect on the lives of parrot astrologers and the daily struggles they face to earn a living. Their hard work and the uncertain nature of their existence left a profound impression on me.
This entire review has been hidden because of spoilers.
7 reviews
August 9, 2024
இந்த புத்தகத்தை முடித்துவிட்டு என்னால் ஒன்று மட்டும் தான் சொல்ல முடியும். பிரபஞ்சன் என்றும் எளிய சாமானியர் பக்கமே நிற்கிறார் ❤️❤️
38 reviews
August 7, 2023
அழகான, அருமையான கதைகள். அப்பாவின் வேஷ்டி,
Displaying 1 - 8 of 8 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.