Jump to ratings and reviews
Rate this book

நாரத ராமாயணம்

Rate this book
எஸ் . ராமகிருஷ்ணனின் வரிகளில் ...
"புதுமைபித்தனின் சிறுகதைகள், இலக்கிய கட்டுரைகள் கொண்டாப்பட்ட அளவில் நாரத ராமாயணம் பெரிதாக கொண்டாடப்படவில்லை. அப்படி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் என்று கூட பலரும் அறிந்திருக்கவில்லை. புதுமைபித்தனின் பகடி எழுத்தின் உன்னதம் இதுவே என்பேன்.

இது வெறுமனே ராமாயணத்தை கேலி செய்யும் ஒரு புனைவுமட்டுமில்லை. மாறாக ராமாயணத்தை முன்வைத்து புதுமைபித்தன் கலாச்சார அரசியலை விமர்சனம் செய்கிறார். இந்திய கலாச்சாரத்தில் இதிகாசங்கள் உருவாக்கி வைத்துள்ள புனிதபிம்பங்களை உடைத்து எறிகிறார். அதே நேரம் நவீன புனைவின் வழியாக எப்படி இதிகாச கதை உருமாற்றம் கொள்கிறது என்பதற்கும் நாரத ராமாயணம் சாட்சி போலிருக்கிறது."

48 pages, Paperback

First published January 1, 1955

2 people are currently reading
25 people want to read

About the author

Pudhumaipitthan

41 books57 followers
C. Viruthachalam better known by the pseudonym Pudhumaipithan (also spelt as Pudumaipithan or Puthumaippiththan), was one of the most influential and revolutionary writers of Tamil fiction. His works were characterized by social satire, progressive thinking and outspoken criticism of accepted conventions. Contemporary writers and critics found it difficult to accept his views and his works were received with extreme hostility. He is an individual and his works have been extensively reviewed and debated for over sixty years since his death. His influence has been accepted and appreciated by present-day writers and critics of Tamil fiction. In 2002, the Government of Tamil Nadu nationalised the works of Pudumaippithan.

His career as a writer began in 1933 with an essay "Gulabjaan Kaadhal" (Love for Gulab jamun) published in the magazine Gandhi. His first short story "Aatrangarai Pillaiyaar" (Pillaiyaar on the river bank) was published in 1934 in "Manikodi" and from then on his short stories appeared regularly in it. His short stories appeared in a number of magazines like Kalaimakal, Jothi, Sudantira Chanku, Oozhiyan and Thamizh Mani and the annual issue of Dina Mani. He worked briefly as a sub-editor at Oozhiyan and later at Dina Mani. In 1943, he left Dina Mani to join Dinasari.

In 1940, his book "Pudhumaipithan Kadhaigal" (The stories of Pudhumaipithan), an anthology of his short stories was published. He slowly ventured into the world of Tamil cinema and worked as a scriptwriter in the films Avvaiyaar and KaamaValli. In 1945, he started "Parvatha Kumari Productions" and made an abortive attempt at producing a film called "Vasanthavalli". While working on the movie "Raja Mukthi", in Pune he contracted tuberculosis. He died on 5 May 1948 at Thiruvananthapuram.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
9 (18%)
4 stars
18 (36%)
3 stars
17 (34%)
2 stars
3 (6%)
1 star
3 (6%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for இரா  ஏழுமலை .
136 reviews9 followers
January 6, 2023
புதுமைப்பித்தன் இறந்த பிறகு வெளியிடப்பட்ட ஒரு நூல் புதுமைப்பித்தன் பின்நாவினதுவ பாணியில் கதையை எழுதி இருக்கிறார். சீனாவிற்கு சுற்றுப் பிரயாணம் சென்ற ஒரு மொழி பெயர்ப்பாளருக்கு அங்கே இருக்கும் ஒரு புத்த மடாலயத்தில் பழைய செப்பு பட்டையம் கிடைக்கிறது அது பாதி அழிந்த நிலையில் இருக்கிறது அதையே இங்கே கதை ஆக்கி தருகிறார். ராமாயணமும் ராமனும் சீதையும் இன்று கடவுள்கள் ஆனால் அவர்களின் காலகட்டத்தில் எவ்வாறு இருந்தார்கள் என்பதை பகடியால் அந்த புனித பின்பத்தை அடித்து உடைக்கிறார் புதுமைப்பித்தன். ராமாயணத்தை பாராயணம் செய்வது புனிதமாக இன்று கருதப்படுகிறது அந்த பாராயணத்தையே அனுமனும் ராமனும் தனது வயதான காலகட்டங்களில் பேசிப் பேசி வெட்டியாக கழித்த பொழுதுகள் தான் பின் நாட்களில் பாராயணம் என்று வந்ததாக தாக்குகிறார். ராமன் நீண்ட நாள் உயிரோடு இருந்ததற்கு காரணமே அவர் தனது புராணத்தை தினமும் பாராயணம் செய்தது தான் காரணம் என்கிறார். அரசன் ஆன ராமனுக்கு செய்வதற்கு எதுவும் இல்லாததால் என்ன செய்வது என்று யோசிக்கிறார் அதேவேளை அவரின் அணுக்க சேவகனான அனுமனுக்கும் எத்தனை காலம் தான் நாம் பேனை குத்திக் கொண்டு இருப்பது என்று தோன்றுகிறது. எனவே வடக்கே சென்று கானகத்தில் இருக்கும் அசுரர்களை வேட்டையாடி நமது தோள் திணவை தீர்த்துக் கொள்ளலாம் என்று முடிவு கட்டி கிளம்புகிறார்கள் கானகத்திற்கு சென்று சீதையை ஓர் இடத்தில் அமரச் செய்து எந்த அசுரனாவது வந்து தூக்குகிறானா என்று பார்க்கிறார்கள் . ஆனால் எந்த அசுரனும் சீதையை சீண்ட கூட வரவில்லை.வெறுத்துப் போன ராமன் சராயு நதியில் குதித்து தற்கொலை செய்ய முயற்சிக்கிறான் ஆனால் அது நிறைவேறவில்லை திரும்பவும் அயோத்தி வந்து தன் மகனுக்கு பட்டம் அளித்துவிட்டு அனுமனும் ராமனும் வெட்டியாக கதைகளை பேசிக்கொண்டு காலத்தை கழிக்கிறார்கள். ராமனுக்கு நான்கு பேரப்பிள்ளைகள் பிறக்கிறது அவர்களில் ஒருவனுக்கும் நாட்டை ஆள ஆர்வம் இல்லாததால் ஒருவனை வலுக்கட்டாயமாக நாட்டை ஆள வைக்கிறார்கள் பிறகு அயோத்திய நிலை என்ன ஆனது என்பதே மீதி கதை. தமிழின் பல புதிய முயற்சிகளுக்கு விதை போட்டவர் புதுமைப்பித்தன் அதேபோல பின்ன வினத்துவ கதை சொல்லும் முறைக்கும் புதுமைப்பித்தன் முதன்முதலாக இந்த கதையை எழுதியிருக்கிறார் மிக அற்புதமாக முதல் முயற்சியிலேயே கைகூடி வந்திருப்பதை நாம் இதை வாசிக்கும் போது உணர முடிகிறது. மிகச் சிறிய நூல் மிகச்சிறந்த நூல்.
Profile Image for Balaji M.
221 reviews15 followers
December 4, 2021
"நாரத ராமாயணம்" - புதுமைப்பித்தன்
====================================

1955-ல் முதற்பதிப்பு கண்ட இப்புத்தகம், 2020ல் Kindle பதிப்பாக வெளியாகியிருக்கிறது.

திரு. புதுமைப்பித்தன் அவர்கள், மொழிபெயர்ப்பாளர் அத்தியாயத்தில், தம்மை உருவகப்படுத்திக்கொண்டு, தாம் சீனதேசம் பயணித்ததாகவும், அங்கு கிடைத்த செப்பேட்டில் கிரந்த எழுத்துக்களை கண்டதாகவும்., அதில் "நாரத உவாச" என கூறியிருந்த படியால், இது நாரதர் அருளிய ராமாயணம் என அறிவதாக கூறுகிறார்.

பின்னர், 13 சருக்கங்களில்(அத்தியாயங்கள்) ராமனுக்கு பின்னான வம்சத்தை பற்றி புனைவாக, அதுவும் அக்கால நகைச்சுவை ரசத்திற்கேற்ப எழுதியிருக்கிறார். ராமன், சீதை, அனுமன் போன்றோரை பற்றியும், ராமனின் மகனான லவ மகராஜனை பற்றியும், அவனது பிள்ளைகள், அதன் மூலம் கிடைத்த பகைவர்கள் பற்றியும், முற்றிலும் ஹாஸ்யமும் கற்பனையும் கலந்து இப்புனைவு இயற்றப்பட்டிருக்கிறது.

ராமன்-சீதைக்குள்ளான குடும்ப பிரச்சனைகளும், குழந்தையை பார்த்து கொள்வதில் ஸ்ரீராமபிரானையே சீதாபிராட்டி புரட்டி எடுப்பதையும் மிகு நகைச்சுவை உணர்வுடன் புனைந்திருக்கிறார். இதே போல் சில முக்கிய பாத்திரங்களான அனுமன், சுமந்திரன், சுக்ரீவன், குகன், விபீஷணன், பரதன் போன்றோர்களையும் இந்த களேபரத்தில்(!) இழுத்துவிட்டுள்ளார்.

தற்கால நகைச்சுவை எதிர்பார்ப்புக்கு ஈடு செய்யவில்லை என்றாலும், புதுமையான கோணத்தில், வித்தியாசமான சிந்தனையை ராமாயணத்தில் புகுத்தியது, அதுவும் 1955களிலேயே எனும்போது, ஆச்சரியத்துக்கும் பாராட்டுக்கும் உரியதாகிறது இப்படைப்பு.


புத்தகத்திலிருந்து ....

\\
(9) அரக்கர்களும் கண்டு நடுநடுங்கும் ஒருவருக்கு, குழந்தையைக்கூட எடுக்கத் தெரியாதோ என்று, சீதைக்குப் பெரிய அவமானமாக இருந்தது.
(10) இம்மாதிரியான சிறு சங்கடங்கள், ஸ்ரீ ராமரின் நெஞ்சில் வேல் போல் குத்தின.
(11) சீதையின் ஹ்ருதய கமலத்திலிருந்து பராக்ரமசாலியான ராவணேசுவரனாலும், பெயர்த்து எடுக்க முடியாத தன்னை, இந்த வலிமையற்று, எப்பொழுதும் அழுதுகொண்டேயிருக்கும் குழந்தை தனது சிறு கால்களால் உதைத்துத் தள்ளிவிட்டது என்பதை அறிந்தார்.
//

\\
ஸ்ரீ ராமபிரானுக்கே இப்படி என்றால், ஹனுமாரைப் பற்றிக் கேட்கவேண்டியதில்லை. ‘இம்மாதிரி உடம்பிலிருக்கும் பேனைக் குத்திக்கொண்டிருக்கும் தொழிலாக இருக்குமென்று தெரிந்திருந்தால், அங்கு சுக்ரீவனுடன் குடித்துவிட்டாவது சோம்பலை மறக்கலாமே’ என்று நினைத்த காலங்களும் உண்டு. ஆனால் ஹனுமார் ராமபக்தி மிகுந்த வீரனாகையால் வெளிக்காட்டுவதில்லை.
(19) மேலும், சீதாபிராட்டியின் மீது ஒரு தனிக் கோபம் இருந்தது. அசோகவனத்திலிருக்கும் பொழுது, என்ன சொல்கிறோம் என்றுகூட கவனிக்காமல் அவள் அவசரப்பட்டுக் கொடுத்த வரத்தினால், தனக்குச் செத்துப் போகவும் வழி இல்லாமல் செய்துவிட்டதை, அவரால் மன்னிக்க முடியவே இல்லை.
(20) பிரம்மசரிய வாழ்க்கையின் மகிமையை எடுத்துரைக்கும் பொழுது, பெண்களால் வரம் கொடுக்கக்கூடத் தெரியாது என்பதற்கு உதாரணமாக இதை இவர் பிற்காலங்களில் கூறுவதும் உண்டு.
(21-25) ஹனுமாரின் கஷ்டத்தை ஒருவாறு அறிந்த ராமருக்கும் ஒரு யோஜனை தோன்றியது. தமது குமாரனுக்குப் பட்டத்தைக் கட்டிவிட்டால், இந்தச் சிங்காதனக் குத்தலும் ஒருவாறு ஒழியும். சுமந்திரனோ மிகுந்த நம்பிக்கையானவன், தனது பால மகாராஜாவைப் பார்த்துக்கொள்ள. நாம் ஏன் ஹனுமாருடனும் சீதையுடனும் கானகம் சென்று, அங்கிருக்கும் அரக்கர்களையாவது கொன்று தோள் தினவு தீர்க்கலாகாது என்று எண்ணி, ஹனுமனிடம் சொல்ல, மிகுந்த சந்தோஷம் உண்டாகி, அவருடைய பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து பின்வருமாறு சொல்லலானான்.
(26) ஹனுமான் கூறுகிறான்: “என்னை அடிமை பூண்ட அண்ணலே! இன்றுதான் நான் கிருதார்த்தனானேன்...” (27) தென் திசையிலுள்ள அரக்கர்களை நாம் அப்பொழுதே துவம்சம் செய்துவிட்டோம். அங்கு ஒருவரும் கிடையாது. வடதிசையில் இமயமலைச் சாரலில் ஒருவேளை இருக்கலாம். அங்கு போவது நலம்” என்றான்.
(28) ஸ்ரீ ராமரும் அவரது புத்தியை மெச்சி, “அப்படியே ஆகுக” என்றார்.
//

\\
இந்திரன் சொல்லுகிறான்: (2-7) “இத்தனை நாள் வரை தங்கள் வரவை எதிர்பார்த்திருந்தோம். தங்கள் கருணை அயோத்தி நகரிலே தங்கிவிட்டது. அங்கு பாற்கடலோ பாசி பிடிக்க ஆரம்பித்துவிட்டது. வெகு நாட்களாக வராததினால் தங்கள் சேஷசயனத்தில் காளான்கள் முளைக்க ஆரம்பிக்கின்றன. தாங்கள் அங்கு வந்து தூங்குவதற்குத் திருவுளம் எப்படியோ” என்று தனது ஆயிரம் கண்களினின்றும் தாரை தாரையாகக் கண்ணீர் வடித்து அழுது, ஸ்ரீ ராமபிரானையும் சீதாபிராட்டியாரை���ும் புஷ்பக விமானத்தில் வைத்துக் கூட்டிக்கொண்டு போய்விட்டான். முன்பு தன்னை இலங்கையில் கண்டவுடன், ஊளையிட்டுக்கொண்டு ராவணனின் முன்பு ஓடி முறையிட்ட, இந்தத் தேவர்களின் செய்கையைக் கண்டு, ஹனுமாருக்கு கோபாக்கினி கொழுந்துவிட்டு எரிந்தது. ஆயினும் என்ன செய்யலாம்? இப்பொழுது வாலைத் தூக்கிப் பயமுறுத்தவும் முடியவில்லையே.
//

\\
பரதனைப் பார்த்து, “எங்கள் சண்டை தீர்ந்த பிறகு உமது வார்த்தைகளைக் கேட்கிறோம், அதுவரை நீர் எங்கள் சிறைச்சாலையில் தயவு செய்து எழுந்தருளல் வேண்டும்” என்று கூறி அவனை அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள்.
//
Profile Image for Dinesh Selvam.
Author 3 books2 followers
March 29, 2022
புதுமை பித்தனின் பகடி இலக்கியமிது. ராமனின் முடிசூட்டிற்கு பிறகு, அவனுக்கும் அவனது வம்சத்திற்கும் நிகழும் நிகழ்வுகளை அடுக்கும் ஒரு படைப்பாக இது தான் வெளித்தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், இது சமகால அல்லது சுதந்திரப் போராட்ட கால அரசியலைச் சாடையாடுகிறது. புதுமைப்பித்தன் இதை ஒரு மொழிபெயர்ப்பு நூலாக இட்டுக்கட்டி கதையை நகர்த்துகிறார். புத்தகம் அதன் இறுதிக் கட்டத்திற்கு ஆயத்தமாகும் பொழுது, நாம் வெள்ளையர்களையும் அவர்களது செயல்களையும், காந்தியையும் அடையாளம் கண்டு கொள்கிறோம். அதுவரை இது ஒரு வரலாற்று நூல் போலத்தான் காட்சியளித்தது எனக்கு (முன்னுரையைப் படிக்காமல் முன்னேறியதன்விளைவு)
23 reviews1 follower
August 15, 2020
Good satire. My only complaint is that it should have been longer.
Profile Image for Jagan K.
50 reviews15 followers
July 23, 2020
A Pudhumaipithan book

Isn't that all we need? Although it might set you up little wrong saying this is "a very funny book" it isn't exactly. A unique and novel of effort from one of the greatest tamil writers. An alternative extended history of Ramayanam that is interesting, fun and definitely funny.
Displaying 1 - 5 of 5 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.