Jump to ratings and reviews
Rate this book

சிதைவுகள்

Rate this book
ஆப்பிரிக்காவில் ஓர் பழங்குடி சமுதாயத்தில் 18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் வருகையால் நிகழும் மாற்றங்களை பற்றிய நாவல் இது. நாவல் ஒக்கொங்வோ என்ற ஈபோ இன மனிதனை பற்றியது. இவன் மூலமாக இவனது இனத்தையும் நாகரீகத்தையும் நமக்கு காட்டுகிறார் சினுவா. அவனுடையது பழங்குடி சமுதாயம். அதற்கே உரிய மூடப்பழக்கங்களையும் நெறிமுறைகளையும் சமுதாய அமைப்பையும் சிறு தெய்வங்களையும் நிலத்துடன் இயைந்த வாழ்வையும் கொண்டது.

199 pages, Paperback

Published January 1, 2014

15 people want to read

About the author

Chinua Achebe

161 books4,246 followers
Works, including the novel Things Fall Apart (1958), of Nigerian writer Chinua Achebe describe traditional African life in conflict with colonial rule and westernization.

This poet and critic served as professor at Brown University. People best know and most widely read his first book in modern African literature.

Christian parents in the Igbo town of Ogidi in southeastern Nigeria reared Achebe, who excelled at school and won a scholarship for undergraduate studies. World religions and traditional African cultures fascinated him, who began stories as a university student. After graduation, he worked for the Nigerian broadcasting service and quickly moved to the metropolis of Lagos. He gained worldwide attention in the late 1950s; his later novels include No Longer at Ease (1960), Arrow of God (1964), A Man of the People (1966), and Anthills of the Savannah (1987). Achebe defended the use of English, a "language of colonizers," in African literature. In 1975, controversy focused on his lecture An Image of Africa: Racism in Conrad's "Heart of Darkness" for its criticism of Joseph Conrad as "a bloody racist."

When the region of Biafra broke away from Nigeria in 1967, Achebe, a devoted supporter of independence, served as ambassador for the people of the new nation. The war ravaged the populace, and as starvation and violence took its toll, he appealed to the people of Europe and the Americas for aid. When the Nigerian government retook the region in 1970, he involved in political parties but witnessed the corruption and elitism that duly frustration him, who quickly resigned. He lived in the United States for several years in the 1970s, and after a car accident left him partially disabled, he returned to the United States in 1990.

Novels of Achebe focus on the traditions of Igbo society, the effect of Christian influences, and the clash of values during and after the colonial era. His style relied heavily on the Igbo oral tradition, and combines straightforward narration with representations of folk stories, proverbs, and oratory. He also published a number of short stories, children's books, and essay collections. He served as the David and Marianna Fisher university professor of Africana studies at Brown University in Providence, Rhode Island, United States.

ollowing a brief illness, Achebe died.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
5 (50%)
4 stars
4 (40%)
3 stars
1 (10%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Moulidharan.
96 reviews19 followers
April 20, 2023
"சிதைவுகள்"

ஆசிரியர் : சினுவா அச்சிபி(நைஜீரிய எழுத்தாளர் )
தமிழில் : பேராசிரியர் ச. வின்சென்ட்
நாவல் (1953}
things fall apart
எதிர் வெளியீடு
199 பக்கங்கள்

விண்வெளியில் வேறு புதிய கிரகங்களையும் கோள்களையும் கண்டு பிடிப்பதில் தீவிரமாக இயங்கும் இந்த உலகம் ஏனோ இந்த பூமியில் எங்கோ ஓர் மூலையில் வாழ்ந்து கொண்டு வரும் சில மனித இனத்தை அடியோடு மறந்து விடுகிறது. முன்னேற்றம் அவசியம் தான் ஆனால் அதே நேரம் அந்த முன்னேற்றம் இந்த பூமியில் வாழும் அனைத்து மனித குலத்திற்கும் சமமானதாகவும், உரிமைக்குரியதாகவும் இருத்தல் அவசியம். இப்படி இந்த உலகில் வெளி உலகிற்கு அரியப்படாத, காட்டப்படாத எண்ணற்ற மனித குலத்தின் வரலாறுகள் வெளி வராமலேயே மண்ணோடு மண்ணாக புதைந்து கிடக்கிறது. ஆனால் இலக்கியத்திற்கு இந்த வேறுபாடு இல்லை, அதன் பார்வையில் அனைவரும் சமமே, அதனால் தான் தன்னால் முயன்றவரை இலக்கியம் தன் எழுத்தாளன் மூலம் இவ்வுலகின் வெவ்வேறு மறக்கப்பட்ட, மறுக்கப்பட்ட, புதைந்துபோன பல இனத்தின் வரலாற்றை தனக்குள் கருவாய் சுமந்து கொண்டு ஒவ்வொரு வாசகரிடமும் ஒரு சிசுவை போல பத்திரமாக கொண்டு செல்கிறது. இந்த பயணத்தில் எழுத்தாளன் ஒரு தூதுவன்.

பெருநகரங்களையும்,சரித்திரம் புதைந்த இடங்களையும், போர் நிரம்பிய மண்ணையும் தொடர்ந்து பேசி வரும் இலக்கியத்தில் இது வரை யாரும் பேசாத ஒரு இனத்தையும், மண்ணையும், மக்களையும் பேசியவர் தான் சினுவ அச்சிபி. ஏனெனில் இவர் அவர்களில் ஒருவர். இவர் ஆப்பிரிக்கா வின் இலக்கியத்தின் தந்தை. தன் நிலத்தையும், மக்களின் வாழ்க்கை முறையையும் நாவல் வடிவில் பதிவுசெய்துள்ளார். அடுத்த இரண்டு பக்கங்கள் நீங்கள் வாசிக்க போகும் பெயர்களும், வாழ்க்கை முறையும் நமக்கு அந்நியமாக தோன்றலாம் ஆனால் சற்று கூர்ந்து நோக்கினால் நமக்கும் அவர்களுக்கும் இருக்கும் பந்தம் புரியும்.

நைஜீரியாவின் உமோஃபியா என்ற கிராமத்தில் ஆக்கன்கோ என்ற மல்யுத்த வீரனின் வாழ்க்கையே இந்த நாவல். சோம்பேறியான தன் தந்தையின் அவ பெயரை தகர்த்து தனக்கென ஒரு மரியாதையான பெயரை தன்னை சுற்றியுள்ள 9 ஊர்களிலும் பெறுவதற்காக அவன் ஒரு சிறந்த மல்யுத்த வீரனாக மாறி, தன் மூன்று மனைவிகளுடனும், 9 பிள்ளைகளுடனும் ஊர் பெரியோர்களில் ஒருவனாக வாழ்ந்து வருகிறான். பக்கத்து ஊருடன் ஏற்பட்ட சண்டையில் அவர்களிடம் இருந்து பலியிட ஒரு சிறுவனை அழைத்து வந்து இவனிடம் வளர்க்க ஒப்படைத்து விடுகின்றனர். ஆக்கன்கோ அவனை தன் மகன் போல வளர்க்கிறான், ஒரு நாள் அவன் கண்முன்னே அவன் பலி கொடுக்கப்படுகிறான். ஆக்கன்கோ நிலைகுழைந்து விடுகிறான். எல்லாம் சரியாக சென்றுகொண்டிருந்த தருணம் ஒரு நாள் ஒரு சாவு வீட்டின் நிகழ்வில் தன்னை அறியாமல் ஒரு சிறுவனை கொன்றுவிடுகிறான். அதற்கு தண்டனையாக அவன் தன் குடும்பத்துடன் 7 வருடங்கள் ஊரை விட்டு வெளியே வாழ்கிறான்.

அவன் தன் தாய் ஊருக்கு செல்கிறான். அவனுக்கு இருக்கும் ஒரே கவலை தனக்கு பிறகு இந்த குடும்பத்தை வழி நடத்த போவது யார்? அவன் மலை போல் நம்பிய அவன் மூத்த மகன் நவோயி க்கு அதில் பெரிதாக நாட்டம் இல்லை.இதன் நடுவே வெள்ளையர்களின் ஊடுருவல் மெல்ல அதிகமாகிறது. மதம் எனும் ஆயுதம் கொண்டு இவர்களை அழிக்க பார்க்கின்றனர். ஆக்கன்கோ விற்கு 7 ஆண்டுகள் முடிவடைந்த தருணம் தன் ஊருக்கு திரும்ப ஆயத்தமாகிய தருணம் அவனுக்கு ஒரு பேரிடி விழுகிறது. அவனுடைய மூத்த மகன் நிவோயி கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிடுகிறான். ஆக்கன்கோ மீண்டும் உடைந்து போகிறான். அதன் பிறகு ஆக்கன்கோவும் அவன் குடும்பமும் என்ன ஆனது? ஆக்கன்கோ ஊர் திரும்பினானா? வெள்ளையர்கள் என்ன செய்தார்கள்? அவர்களுடைய 9 கிராமங்களும், 9 மூதாதயர்களின் ஆவிகளும், குல தெய்வங்களும் என்ன ஆனார்கள்? என்பதே கதையின் முடிவு.

இந்த கதையில் வெள்ளையர்களுக்கும் உமோஃபியா ஊர் பெரியவர்களுக்கும் ஒரு பேச்சுவார்த்தை நடக்கும். அதில் அந்த பெரியவர் கூறுவார் " எங்கள் மக்களின் மொழியையும், வாழ்க்கை முறையையும் புரிந்து கொள்ள முடியாத உங்களால் எப்படி எங்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று? " எவ்வளவு ஆழமான உண்மை நிறைந்த வரிகள் இவை. ஒரு இனத்தை அந்த இனத்தின் ஒருவராக இனைந்து வாழ்ந்தால் மட்டுமே நாம் அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியும். அப்படி புரிதல் இல்லாமல் முன்னேற்றம் என்ற ஒற்றை சொல்லை வைத்துக்கொண்டு நாம் அவர்களுக்கு செய்ய விளையும் எந்த ஒரு செயலும் அந்த இனத்தின் அழிவின் ஆரம்பம் ஆகும். மனிதனின் பேராசையும், புகழ், பதவி போதையும் இப்படி பல இனத்தை புரிந்து கொள்ளாமல் கொன்று குவித்திருக்கிறது. அந்த வரிசையில் ஆப்பிரிக்கா வும் ஒன்று. தன் சக மனிதரை மேலே கீழே என்று வைத்து பார்க்கும் இழிவான எண்ணம் கொண்ட நம்மை விட அவர்கள் ஒன்றும் பெரிய காட்டுமிராண்டிகள் அல்ல என்றுதான் நினைக்கிறேன். என்னை பொருத்த வரையில் இந்த உலகம் தோன்றிய காலம் முதல், குரங்கிலிருந்து மனிதனாக நிமிர்ந்து நடக்க கற்றுக்கொண்ட ஒருவனுக்கு தன்னையும் தன் கூட்டத்தையும் முன்னேற்றிக்கொள்ள தெரியும்.நிறம், மொழி, மதம், இவை அனைத்தையும் கடந்து மனிதர்களாக நம்மை இணைப்பது அன்பு மட்டுமே. வேற்றுமையை வேரறுத்து அன்பினை விதைப்போம் மனிதனும் மனிதமும் வளரட்டும்.

---இர. மௌலிதரன்.
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.