Balakumaran was born in Pazhamarneri village near Thirukattupalli in Thanjavur district in 1946. As a child, he was highly inspired by his mother, who was a Tamil scholar and a Siromani in Sanskrit, used verses of Sangam and other ancient literature to motivate him when ever he was emotionally down. This created a deep interest in Tamil literature which made literature his passion. His first stories were published in a literary magazine called ‘Ka-Sa-Da-Tha-Pa-Ra’ and for which he was also a founding member, a self-anointed militant literary journal that had been launched with a mission to blaze new trails in modernist literature.
He has also contributed to Tamil periodicals such as Kalki, Ananda Vikatan, Saavi and Kumudam. Later he became a famous Tamil writer, author of over 200 novels, 100 short stories, and dialogue/screenplay writer for over 14 films. His writings are noted for a distinct philosophical and religious tone. He is fondly called 'Ezhuthu Sithar' by his fans. He is a disciple of "Sri Yogi Ram Surath Kumar".
In his many novels he shows immense interest in enlightenment. He is considered as "Maanasiga Guru" for many individuals, who are in search of the formless almighty. His lucid but powerful expressions of man-woman relationship and human-God union is a tribute to mankind.
Talks about a couple who had different interests, different ideologies and a different financial status gets married and their after marriage life. Also talks about the demerit of individual families and author advices in the words of Lalitha, how these concerns have to be managed these days. Would highly recommend to someone who has understanding issues with their spouse after marriage.
This entire review has been hidden because of spoilers.
நிழல் யுத்தம் - இந்த புத்தகத்திற்கு பொருத்தமான பெயர்.
கணவன் முரளிக்கும் மனைவி லலிதாவிற்கும் நடக்கும் யுத்தம். முரளி அம்மா வளர்த்த பிள்ளை. லலிதாவோ அப்பா வளர்த்த பெண்.
முரளி பல விஷயங்களில் பத்தாம் பசலி. லலிதா முற்போக்கான பெண். இருவரும் விருப்பத்தின் பேரிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள், எனினும் அவர்களது எண்ணம் ஒத்துப்போகவில்லை. விளைவு என்ன என்பதே நிழல் யுத்தம். இன்றும் அநேக மனிதர்களின் வீடுகளில் நிழல் யுத்தம் நடக்கிறது.
லலிதாவின் அப்பாவாக வரும் சங்கரன் பார்வையில் இரண்டாம் உலக யுத்தம், அவர் தன் மனைவியை நடத்தும் விதம் ஆகியவை நன்றாக இருந்தன.
ஆங்காங்கே வரும் வரிகள் அற்புதம்.
1. கொண்டாட்டங்களை பற்றி இப்படி ஒரு வசனம்: இலை போட்டு வக்கணையா சோறு திங்கணும். அதுக்கு ஏதாவது ஒரு சாக்கு. கொலோசல் வேஸ்ட்.
2. கோபம் சாதாரண தாவரம் அல்ல. அசுர தாவரம். நிமிஷத்துக்கு நூறு இலை விடும். ஒரு நாளைக்கு ஆயிரம் கிளை பரப்பும்.
3. லலிதா eyebrow செய்து கொள்வதை பற்றி ஒரு பெண் நினைப்பது : ஏழு ரூபாய் கொடுத்து புருவம் ஒதுக்கி கொள்ள வசதியிருக்காது. பெரியவங்க தப்புனு சொல்லிருக்கா என்று நொடிக்க துவங்கும்.
4. ஜாதி என்பது குலம் கோத்திரத்தில் இல்லை. பொருளாதாரம் பிரித்து வைத்து இருக்கிறது.
1980ஸ்-இல் இவ்வளவு முற்போக்கு சிந்தனையுடன் எழுதிய அற்புதமான புத்தகம். பல சாதாரணமான விஷயங்களையும் மிகவும் அழகான உவமைகளுடன் சேர்த்துள்ளார். மனிதனின் சுயநலச் சிந்தனையை ஆராய்ந்து பல கேள்விகளைத் தூண்டினார்.
ஒரு இடத்தில் மனிதன் உலகில் எல்லாவற்றையும் தனக்கென நிகழ்கிறது என்று நினைத்துக் கொள்கிறான் என்று கூறியிருந்தார். அது போல ஆணும், பெண்கள் எது செய்தாலும் அவனுக்கென்று நினைத்துக் கொள்வான் போலும். பெண்கள் தந்திரமானவர்கள் என்று அவர் விளக்கிய பகுதி அதைச் சரி படுத்தியது.
சில இடங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பல இடங்களில் சிந்தனைக்கு ஊக்கமளித்த சிறப்பான புத்தகம்.
நிழல் யுத்தம் பாலகுமாரன் இரு வெவ்வேறு தனிநபர்கள், மனம் ஒப்பிய திருமணம், எண்ணங்கள் மாறுபடும் கணங்களில் பிரிவின் விளிம்பில் அவர்களது பார்வையை கொண்டதாய் நகரும் கதைக்களம். ‘Adjustment’; எந்தவொரு உறவிலும் அவசியம் என்பது சமூகத்தின் கருத்து… ஆனால் பரஸ்பர மரியாதை, அன்பு, புரிதல் இல்லாமல் காட்டும் ஒத்திசைவு என்றோ சீறும் ஆழிப்பேரலைக்கான முதல் அலை என்பதை களமாய் கொண்டு நகரும் கதையில் பாரம்பரியத்தின் வாசத்தில் வாசம் செய்யும் கதாநாயகனும் நவீனத்தில் லயித்திருக்கும் கதாநாயகியும் எமக்கு ‘Generation Gap’ என்பதன் அடிநாதத்தினை உணர்த்திட ஆங்காங்கே உலக யுத்தத்தின் சாயங்களை தெளித்த எழுத்தாளர் பெண்ணடிமைத்தனம், அதன் வழி வந்த பெண் சுதந்திரம் அதன் அதீதத்தால் விளைந்த இடர்களையும் தொட்டுச்சென்ற விதம் மற்றும் கறுப்பு வெள்ளை என சாயம் பூசாமல் அனைத்து முதன்மை பாத்திரங்களையும் யதார்த்தமாய் காட்டியது கதையின் போக்கை relatable ஆக மாற்றியது என்பதில் ஐயமில்லை. நிழல் யுத்தம்; இன்றும் ‘adjustment’ என்ற பெயரில் சமூகத்தின் பார்வையில் இணைந்து வாழும் தம்பதிகளை பற்றிய யதார்த்தம். ⭐️⭐️⭐️⭐️