பாலகுமாரனுக்கு இது ஒரு முக்கியமான எழுத்து... முதல் பாதி மிக சுவாரசியமான நிகழ்வுகளால் பின்னப்பட்டு உள்ளே இழுக்கிறது.. பாத்திரப்படைப்பு மிகச்சிறப்பாக ஈர்த்து இழுத்து விடுகிறது. ஆனால் பிற்பாதி சிறிது குழப்பப்பாதையில் நாடகபாணியில் பயணிக்கறது. 'Gift of the magie' template எடுத்து தமிழ் படுத்தியது போல் இருக்கிறது. ஆனால் உணர்வுகளை சிறப்பாக எடுத்தாண்ட வகையிலும், நெருக்கமான எழுத்து நடையிலும் விலகவிடாமல் முடிகிறது. பாலகுமாரன் திரைக்கதையில் பெற்ற வெற்றி ஏன் என்று புரிகிறது.
Balakumaran has been on my TBR for a long time and I decided to start with his longer book - Payanigal Kavanikkavum. I was left with feeling his writing must be best when it is concise.
When the book started, it felt like reading an Arthur Hailey book in tamil. There is a lot of detailing of the Chennai airport in 1990 and the life in the airport quarters. The book starts with a tense control tower episode where an incoming airplane lifts off again due to unauthorized presence on the runway.
You have airline security, bomb squad and the airport staff in politics and squabble. There is a human element which starts brewing and we get to know about a bombing in 1984 that left multiple families impacted. Back in 1990, we meet Satyanarayanan and Georgina as colleagues. When we realise they have lost a common person in 1984, the book then takes the form of mystery that ends in the first half.
The second part of the book is a love story that used to the theme in 1990s - a Hindu, Christian story. There is a bit of stereotyping and a lot of predictable things. In fact, there was not a mention of airport or the other staff - it was as if it is two books in one. I did not enjoy this part of the book since there is no novelty.
This book feels like the author started with 5 sixes and ended up with a strike rate of 50.0. I did like his Tamil, especially the Christian language.
மிகக்குறைந்த நாட்களில் இந்த நாவலை படித்து முடித்தேன். ஆர்தர் ஹெய்லீ அவர்கள் எழுதும் நாவல்கள் அனைத்தும் தொழில் சம்பந்த பட்ட கதைகள். உதாரணமாக ஹோட்டல், ஏர்போர்ட் நாவல்கள்.
அதைப்போல, பாலகுமாரன் அவர்களும் தன்னுடைய கதைகளில் ஒரு தொழிலை தொடர்புபடுத்தி , அதில் உள்ள சிரமங்களை எடுத்துசொல்லி, அதன் வழியாக கதாபாத்திரங்களை சித்தரித்து, பாவு நூலில் ஊடுவது போல நெய்யும் திறமை கொண்டவர். அந்த திறமையை பயன்படுத்தி அவர் நெய்த ஒரு நாவல்தான் பயணிகள் கவனிக்கவும்.
முதல் பாதியில் கதை ஏர்போர்டையும் அதில் பணி செய்யும் உழியர்களின் காலனியையும் சுற்றி வருகிறது. ராணுவ விமானம் ஒன்று கீழிறஙுவதற்கு உத்தரவு வேண்டி நிற்க, அந்த உத்திரவு ரன்வேயை பைனாகுலர் மூலம் பார்த்து , வரலாம் என்று அனுமதி கொடுத்தபின் , கீழிறங்கும் விமானம் தடாரென்று மேலே விருட்டென எழும்பிசெல்வதை பதட்டத்துடன் பார்த்து, அதன் காரணம் புல்வெட்டும் பையன் ரன்வேயில் கையை ஆட்டுவதுதான் என்று அறிந்து, அதற்காக மெமோ வாங்கும் ஸ்டீபன் தான் முதல் அறிமுகம். இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் ஆசிரியர் ஏர்போர்ட்டில் நடக்கும் உள்குத்து விவகாரங்களை நமக்கு காட்டுகிறார்.
ஜார்ஜினா ஒரு கிற்த்துவ பெண். கணவனை இழந்தவள். அவள் கணவன் ஏர்போர்ட்டில் நடந்த ஒரு வெடிகுண்டு வெடிப்பில் இறந்ததால் அவளுக்கு அங்கு வேலைகிடைக்கிறது. முதலில் ஸ்டிபன் தான் கதையின் நாயகன் என அவனை சுற்றி ஒடுகுறது. சடாரென்று சத்யனாராயணன் கதா நாயகனாக மாஅறுகிறான்.
அவனுக்கு ஒரு காதல் தோல்வி. அவனுடைய பழைய காதலிதான் ஸ்டீபன் டாவாகிறாள். சத்ய நாரயணன் யாரிடமும் முகம் கொடுத்து பேசுவது இல்லை. யாராவது அவனிடம் ஏதாவது கொடுத்தாலோ அல்லது கேட்டாலோ எரிந்து விழுகிறான். அதுவும் ஜார்ஜினாவிடம் மிக அதிக திமிர் காட்டுகிறான்.
இந்த இடத்தில் ஆசிரியர் சஸ்பென்ஸ் வைப்பதாக நினைத்து , அவனுடைய இந்த மன இறுக்கத்திற்கு காரணம் சொல்லாமல் பில்டப் செய்ய நினைக்கிறார். ஆனால் அவர் சில நிகழ்வுகளை சொல்லும்போதே என்ன காரணம் என்று எனக்கு தெரிந்துவிட்டது.
இந்த நாவலில் பெரும்பாலும் க்றுத்தவர்களின் இலகிய மனம், மற்றும் அவர்களின் அன்பு மனதை நமக்கு காட்டுகிறார். பிற்பகுதியில் ஏர்போர்டை பற்றி வரவேஇல்லை. இவர்களுடைய காதல் மட்டுமே பேசப்படுகிறது. இந்த சமய்த்தில் ஏர்போர்ட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் போய்விடுகிறதா? இதனால் ஏதோ ஒன்று மிஸ்ஸானது போல தோண்றுகிறது.
இவர்களுடைய திருமணத்திற்கு வில்லனாக , ஜார்ஜினாவின் மாமனார் வருகிறார். அவர்தான் ஜார்ஜினாவின் மகன் செல்வாவிற்கு காட்பாதர். அதனால் இவர்களுடைய திருமணத்தை செல்வாவின் மனம் , மதத்தின் பெயரால் தடுமாறும் என்பதால் இந்த த்ருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஏனெனில் அவர்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு பூணுல் போட்டால், அதனால் இவன் குழம்பிமனம் பாதிக்கப்படும் என்பது அவர் வாதம். இதற்காக அவள் ஆபரேசன் செய்துகொள்ள முடிவு செய்து அதை சத்தியிடம் சொல்ல, அவன் அதற்கு மறுப்பு தெரிவிக்க... ஒரு வழியாக ஒரு பொய்மூலம் , அவளுடைய மாமனார் மனம் மாற. அதற்குள் சத்தி அந்த பொய்யையே உண்மையாக்கி விடுகிறான் .
ஆனால் இந்த கதையில் சில உண்மைகள் சொல்லப்படுகிண்றன. அத்தவது கிறுத்தவர்கள் எக்காலத்திலும் தன்னுடைய மதத்தின் சட்ட திட்டங்கள் எதையும் கைவிடுவதில்லை. ஆனால் இந்துக்கள், நான் என் மதத்தை பின்பற்றுவதில்லை என்று கர்வத்துடன் சொல்கிறார்கள். அதுவும் பிராமணர்கள் அதை சொல்லும்போது எனக்கு மிகவும் தர்ம சங்கடமாக போய்விடுக்றது. ஏனெனில் அவர்களுக்கு இந்து மதத்தை பாதுகாக்கும் பொறுப்பு அவர்களுக்கு உண்டு என்பதை மறந்துவிடுகிறார்கள் என்பது தான் வேதனை.
பிற்பாதி The gift of magi போண்று ஒரு நாடக மயமாக மாறிவிடுகிறது என்பதை சொல்லத்தெவையில்லை.