நல்சக்தியை சுயநலத்திற்காகத் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைப்பது அபூர்வம்.
யோகாவை வைத்து நிவேதாவுடன் பந்தயம் போடும் மாமல்லன் அதற்குப் பலியாடாகத் தன் நண்பன் பிரேமை கைகட்டி விடுகிறான்.
பிரேம் மேல் ஆசைப்பட்ட நிவேதா அவனின் மனைவியைப் பற்றித் தவறாக ஆழ்மனதில் பதிய வைத்துவிடுகிறாள் அதன் தொடர்ச்சியாக மூளையின் செயல்பாடுகள் இருநிலையாகப் பிரிந்து தன் மனைவியின் பெயரில் உள்ள விபசாரியை கொல்லும் அளவிற்குச் சென்று விடுகிறான்.
தன்னிலையில் இல்லாமல் பிரேம் செய்த கொலையில் இருந்து விடுவிக்கப்பட்டதுடன் அவனின் மனநிலையும் குணப்படுத்தப்படுகிறது.
மனநலம் சார்ந்த விஷயங்களில் நாம் பலசமயங்களில் கவனம் செலுத்துவதில்லை. உதவி தேவை படும்பொழுதுகூட ஒரு மனநல மருத்துவரை அணுக அஞ்சுகிரோம். எங்கே நம்மை மனநலம் குன்றியர் என்று முத்திரை குத்திவிடுவார்களோ என்ற அச்சம் தான் அது. நிலைமை இப்படி இருக்க ஆண்டாண்டுகாலமாக மனநல மருத்துவர்கள் psycho வாக மாறி தன் நோயாளிகளின் பலவீனத்தை பயன்படுத்தி கொலைகள் செய்யும் கதை கரு சினிமாவிலும் புத்தகங்களிலும் வந்தவண்ணமே உள்ளது. அந்த கண்ணோட்டத்தில் இந்த புத்தகம் அந்த அலட்சியப்போக்கை மிகைப்படுத்துகிறது.