Jump to ratings and reviews
Rate this book

Irumbu Kudhiraigal

Rate this book
...

411 pages, Kindle Edition

First published November 1, 1984

89 people are currently reading
915 people want to read

About the author

Balakumaran

252 books574 followers
Balakumaran was born in Pazhamarneri village near Thirukattupalli in Thanjavur district in 1946. As a child, he was highly inspired by his mother, who was a Tamil scholar and a Siromani in Sanskrit, used verses of Sangam and other ancient literature to motivate him when ever he was emotionally down. This created a deep interest in Tamil literature which made literature his passion. His first stories were published in a literary magazine called ‘Ka-Sa-Da-Tha-Pa-Ra’ and for which he was also a founding member, a self-anointed militant literary journal that had been launched with a mission to blaze new trails in modernist literature.

He has also contributed to Tamil periodicals such as Kalki, Ananda Vikatan, Saavi and Kumudam. Later he became a famous Tamil writer, author of over 200 novels, 100 short stories, and dialogue/screenplay writer for over 14 films. His writings are noted for a distinct philosophical and religious tone. He is fondly called 'Ezhuthu Sithar' by his fans. He is a disciple of "Sri Yogi Ram Surath Kumar".

In his many novels he shows immense interest in enlightenment. He is considered as "Maanasiga Guru" for many individuals, who are in search of the formless almighty. His lucid but powerful expressions of man-woman relationship and human-God union is a tribute to mankind.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
213 (42%)
4 stars
177 (35%)
3 stars
77 (15%)
2 stars
21 (4%)
1 star
8 (1%)
Displaying 1 - 30 of 34 reviews
Profile Image for Navaneeth Krish.
7 reviews7 followers
June 4, 2014
சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியத் துவங்கினேன்.. சேர்ந்த சில மாதங்களிலேயே வேலைப்பளு தலைக்குமேல் ஏறியது. கல்லூரி வாழ்க்கையில், போதும் போதும் என்கின்ற வரை மனதிற்கு பிடித்தாற் போல் வாழ்ந்து அனுபவித்து வந்த எனக்கு, வார இறுதியில் கிடைக்கும் 2 நாட்கள் சற்றும் போதவில்லை. ஒரு மாதத்தில், சில வார இறுதிகளிலும் கையில் மடிக்கணினி கொடுக்கப்பட்டு, வேலை செய்யுமாறு அலுவல் எனது. "என்னடா வாழ்க்கையிது" என மிக விரைவிலேயே நொந்துகொள்ளத் துவங்கினேன்.

இந்நிலையில் என்னைப்போல் ஆயிரம் ஆயிரம் பேர் இருப்பர் என நம்புகிறேன். இந்நிலையில், வாழ்க்கையின் யதார்த்தத்தை மிக அருமையாக எடுத்து விளக்கியது இப்புத்தகம்.

என்னைப்போன்ற விரக்தியில் யாரேனும் இருப்பீராயின், இப்புத்தகம் படிப்பது தங்களுக்கோர் 'எனர்ஜி டானிக்' போன்றிருக்கும்!

இப்புத்தகத்தைப் பற்றி என் மனதிலுள்ள மற்ற கருத்துகள், திரு.மாலன் எழுதிய முன்னுரையிலேயே சொல்லப்பட்டு விட்டன! அருமை!

இ-புத்தக விரும்பிகளுக்காக: http://www.scribd.com/doc/160566302/I...
Profile Image for Balaji M.
221 reviews14 followers
April 16, 2022
"இரும்பு குதிரைகள்" - பாலகுமாரன்
-------------------------------
1980களின் தொடக்கத்தில் கல்கியில் தொடர்நாவலாக 42 அத்தியாயங்களில் எழுதப்பட்ட நாவல். திரு பாலகுமாரன், தான் வேலை செய்த டிராக்டர் கம்பெனி மூலம் கிடைத்த அனுபவத்தில், வெறும் 40% சதவீத அளவு தகவல்களை கொண்டு இப்புனைவை இயற்றியுள்ளார்.

லாரி தொடர்பான பாகங்கள், பழுது, லாரிகளில் சரக்கு ஏற்றி செல்வது, அந்த தொழிலில் இருக்கும் சாதக/பாதகங்கள், லாரி ஓட்டுநர்/க்ளினர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அவர்கள் சந்திக்கும் விலைமாதுகள், சரக்கு போக்குவரத்து தொழிற்சாலை சிம்பத்திகளின் வேலைப்பளு, அவர்களது குடும்பம், லாரி அலுவலகங்களில் பணிபுரிவோரின் வேலை என இப்படி பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்வியல் சூழ்நிலைகளையும், யதார்த்தங்களையும் படம் பிடிக்கும் விதமாக இந்நாவல் அமைந்திருக்கிறது.

பலதரப்பட்ட வர்க்கத்தினை சேர்ந்த கதைமாந்தர்களாலான நாவல்:
பாகல் தோட்டம்(தற்போதய புதுப்பேட்டை பகுதி)
ராவுத்தர் - லாரி கம்பெனி முதலாளி
நடேச முதலியார் - லாரி பாகங்கள் விற்பனையாளர்
செல்லத்தம்பி - ராவுத்தரின் லாரி க்ளீனர்
கௌசல்யா /வசந்தி / மல்லிகா / பெரியக்கா- விலைமாதர்கள்
வடிவேலு - லோடு தரகர்
வரதன் - ராவுத்தரின் லாரி ஓட்டுநர்
விஸ்வநாதன் - ரப்பர் கம்பெனி மேலாளர்
தாரிணி - விஸ்வநாதனின் மனைவி
காந்திலால் மேத்தா - லாரி கம்பெனி முதலாளி
நாணு ஐயர் (எ) நாராயணசாமி - வடிவேலுவின் வாத்தியார்/ காந்திலாலின் கணக்குப்பிள்ளை
காயத்ரி - நாணு ஐயரின் இரண்டாவது மகள்.

எங்கெங்கோ சுற்றி திரியும் கதைமாந்தர்கள், அவர்களுக்குள் வெகு இயல்பான, யதார்த்தமான சந்திப்புகளை நிகழ்த்தி, நூலில் கோர்க்கப்படும் முத்துக்களை போல ஒன்றுடன் ஒன்று கோர்த்து, வாசிப்பவரையும் இக்கதைக்குள் பயணப்படவைக்கிறார், திரு பாலகுமாரன்.

மேலும் நாணு ஐயர்-காயத்ரியின் முற்போக்கு சிந்தனையிலான தர்க்கங்கள், விசுவநாதன்-காயத்ரி கவிதையாடல், தாரிணி-விசுவநாதன் குடும்ப யதார்த்தங்கள், விஸ்வநாதன் தன்னையே குதிரையாக நினைத்து எழுதும் கவிதைகள் என பல கலவையின் அம்சமாகவும் இந்நாவல் இயற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை துறைமுக கப்பலிலிருந்து, அருகிலிருக்கும் பெட்ரோலியம் தொழிற்சாலைக்கு பூமிக்கு அடியில் செல்லும் குழாயிலிருந்து, திருடப்படும் டீசல் நிகழ்வு, எதிர்பாராத த்ரில்லர் சம்பவம். இந்நாவலின் வேகத்தை கூட்டிய அத்தியாயங்கள் அது.

பாலகுமாரனின் தலைசிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று என உறுதியாக சொல்லலாம்.

புத்தகத்திலிருந்து ....
\
இராயப்பேட்டை முதலியாருங்க இங்கே குடிசை போட்டுக்கிட்டு சீமெண்ணை வித்தாங்க. கம்பெனியில எண்ணெய் வாங்கிக்கொண்டு கவர்மென்டுக்கு வித்தாங்க. கவர்மெண்ட்டுக்கு துட்டுக் கொடுக்க முடியலை. குதிரையை எடுத்துக்க, கோச்சு வண்டிய எடுத்துக்கன்னான். கோட்டையிலிருந்து குதிரை வண்டி வாங்கி மயிலாப்பூர் ஐயருக்கு வித்தாங்க. அன்னிக்கு புடிச்சுது வண்டி வியாபாரம். கீலு, சட்டம் கதவு ஆணின்னு வியாபாரம் புடிச்சுது. 'வார்' முடிஞ்சு மிலிட்டரி லாரி வித்தான் வெள்ளைக்காரன். அதுவும் வாங்கினான். ஒடச்சி வித்தாங்க. அன்றிலிருந்து இன்றுவரை பாகல் தோட்டத்தில் ஒடசல் வியாபாரம்தான். காயல்பட்டினத்தில் துலுக்கருங்க இங்கே வந்து தெற்கு பக்கத்துக்கு வாங்கி போவாங்க. மதுரை, திருநெல்வேலி வரை வியாபாரம். அப்புறம் காயல்பட்டணத்து ஆளே கடை போட்டான். காயலான் கடைன்னு பெயர் வந்தது.
/

\
"யப்பா, காதலுக்கும் கல்யாணத்துக்கும் எப்படி பேயாய் பிறந்தோம். இவளை சுற்றிச்சுற்றித் திரிந்து இவள் சம்மதம் பெற எப்படி தவித்தோம்.
காதலிப்பதை இப்போது செய்திருக்கவேண்டும். முப்பத்தி மூன்று வயதில் பதற்றம் அடங்கிய நேரத்தில் காதல் வாழ்க்கையை துவங்கியிருக்க வேண்டும். சராசரி தென்னிந்தியனுக்கு அனுபவம் வளர்ச்சி குறைவு தான். 10 வயசு மைனஸ் தான்.
/

\
இன்றும் புத்தி கட்டளை போட்டது, போதும் ஐயா எழுந்திருங்க நடேச முதலியார் என்று பேசிவிட்டு. நடேச முதலி தன்னை வாடா போடா என்று அழைத்துக் கொள்வதில்லை. "ஐயா என்ன தூக்கம் எந்திரிங்க எந்திரிங்க" என்று மரியாதையாய் அழைத்துக் கொள்வார். இது சின்ன வயசில் ராவுத்தர் சொல்லிக் கொடுத்த விஷயம். "தன் தலையை தானே அடிச்சுக்கிறது, நாறப்பொழப்புனு சொல்லிக்கிறது, தன்னை மட்டமாக்கி பேசுறது தப்பு. நாம வந்தோம் நாம சொன்னோமுன்னு எங்க ஜாதியில் பேசுறது தமிழ் தெரியாத பேசுறதில்லை. நானும் எனக்குள்ள இருக்கிற இறை உணர்வும்னு அர்த்தம். நம்ம மனசு புத்தி, கடவுள் இருக்கிற இடம். நம்மை நாம் மதிச்சா பிறத்தியாரை அவதூறு பண்ண தோணாது. கெட்ட வாசகம் வாயிலிருந்து வராது"
/

\
அடிப்படை வசதி உள்ளவன்தான் ரசனையோடு இருக்கமுடியும், குழப்பமின்றி யோசிக்கமுடியும்.
/

\
பகல் முழுக்க ஆட்களோடு பேசி போராடி சண்டையிட்டு வெற்றியோடு வரும் மனிதனுக்கு தனிமை அவசியம். அந்த இடத்திலும் காதோடு பேச, கழுத்தை இறுக்கிக் கொள்ள யாரும் தேவையில்லை. பெண்களைக் கண்டு தடுமாறுபவன் நல்ல பனியா(சேட்டு சாதியர்) இல்லை. ஒரு பனியா உழைப்பது பிறர் பொருட்டே. மனைவிக்கும் குழந்தைகளுக்கும் மற்றும் பலருக்கும் அள்ளி கொடுக்க, தர்மம் செய்ய பனியாவுக்கு தெரியும். இருக்கும்பொழுது கொடுக்கப்படும். கொடுப்பதற்காகவே சேமித்து வைக்கப்படும். சேமிப்புகாகவே அதிகம் உழைக்கவேண்டும். வாழ்க்கை இறுதிவரை வியாபாரம் பற்றிய கவனம் வேண்டும்
/

\
"Impossibles are Immediate, Miracles little later"
/

\
கஷ்டப்படக் கஷ்டப்பட ராமனுக்கு நிறைய சினேகிதா கிடைச்சா. சீதையே வேண்டாம்னு கூட தோணியிருக்கும். ஆனால் சீதைதான் இப்படி சிநேகம் கிடைக்கக் காரணம்.
/

\
" கதை சொல்றது ஆதிகாலத்து பழக்கம். எப்ப மொழின்னு ஒன்னு வந்ததோ அது உடனே கதை சொல்லத் தான் ஆரம்பிச்சிருக்கும். இன்னிக்கி கார்த்தால என்ன நடந்தது தெரியுமான்னு கதை பேச ஆரம்பிச்சிருக்கும். கார்த்தால நடந்ததுக்��ும் இப்ப சொல்ற கதைக்கும் வித்தியாசம் நிறைய இருக்கும். கார்த்தால அது ஏன் நடந்ததுன்னான்னு ஒரு ஆராய்ச்சியோட செய்தி துவங்கும். விஷயம் நடக்கிறபோது ஆராய்ச்சி வரலை. அப்புறம் வராது. விஷயம் நல்லதோ கெட்டதோ ஒரு அலசல் செய்ய தோன்றது. "ரீகலெக்ஷன் ஆப் தாட்ஸ்" மனிதனுடைய பெரிய சொத்து இது . நடந்ததை நினைவுக்குக் கொண்டு வந்து யோசனை பண்ண தன்னை பக்குவப்படுத்துகிறது மனுஷாளுக்கு மட்டுமே உண்டு. மிருகம் மாதிரி சட்டென்று கோபமோ, காமமோ வந்துடறதில்லே. வாலை மிதிச்சவுடனே பாஞ்சுடறதில்லை. கோபப்பட்டா என்னவாகும்னு நம்மால யோசிக்க முடியும். தொடர்ந்து யோசிக்கிறவன் ஞானி. முடியாதவன் மிருகம். யோசனை பண்ணினதின் விளைவு இன்றைய வாழ்க்கை, வளர்ச்சி."

"யோசனை பண்ணியும் வேதனை போகலேயே, குழப்பம் தீரலையேன்னு கோபம் வரும். படர்ந்து வரவர கொடிக்குதான் ப்ராப்ளம். பாறாங்கல்லுக்கு பிரச்சனை இல்லை. அன்னிலேர்ந்து இன்னிவரைக்கும் மிருகத்துக்கு பசிதான் பிரச்சனை; நமக்கு ஆயிரம்."

வளர்ச்சின்னா இடைஞ்சல் உண்டு. இடைஞ்சலைத் தாண்டுறதுதான் வளர்ச்சி.

இனி வளர்ச்சியையம் நிறுத்த முடியாது, இடைஞ்சலையும் ஒதுக்க முடியாது. பூமியை விட்டு இறக்கையை விரித்து பறக்க ஆரம்பிச்சாச்சு. இனி புத்தி இறக்கையை புடிச்சுக்கோன்னா முடியுமோ, முட்டிமோதி மனுஷ குலமும் செத்துப்போகும். தொடர்ந்து பறக்கத்தான் வேணும்.

என் அனுபவம் என் கதை. என் கதையை படிச்சு, என் அனுபவம் உனக்கும் அனுபவமாறபோது என் வயசும், உன் வயசும் சேர்ந்து, 30 வயசுக்கு 60 வயசு பக்குவம் வந்துடும். வரலாம் இல்லையா? ஏன் எழுதறேன்னு கேட்டியே, அதுக்கு இதுதான் பதில்."
/

\
அவல ஆடுகள் கூட இங்கே
கொம்புடன் ஜனித்ததாக
கீச்சுப் பூனைகள் கொண்டதிங்கே
கூறிய நகமும் பல்லும்
யாருக்கும் தீங்கு செய்யா நத்தைக்கும்
கல்லாய் ஓடு,
பச்சோந்தி நிறத்தை மாற்றும்
பள்ளிவால் விஷத்தை தேக்கும்
குதிரைகள் மட்டுமிங்கே
கொம்பினின்றி பிறந்ததென்ன?
வெறுப்புடன் பிறந்த மாக்கள்
பயத்தினை துணையாய்க் கொள்ள
விருப்புடன் பிறந்த குதிரை
கொம்பில்லை விஷமுமில்லை.
தர்மத்தை சொல்ல வந்தோர்
தடியோடா காட்சி தருவர்?
குதிரைகள் காதை பாரும்
உள்ளங்கை சிவப்பு தோற்கும்
இது குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் ஏழாம் பாடம்.
/

\
என் விழிகள் நட்சித்திரங்களோடு
உறவாடினாலும்
என் விரல்கள் என்னவோ ஜன்னல்
கம்பிகளோடுதான்
- மு.மேத்தா
/

\
"இதுவே(காயத்ரி) பார்க்க சுள்ளுனு இருக்கு, மூத்தது பார்த்து பகவான் கண் தொறந்தா, தானே கட்டிக்கிறேன்னுடுவான், ஆண்டாளம்மாவை கட்டிக்கிட்டா மாதிரி".
காயத்ரி கலகலவென்று சிரித்தாள்.
எவ்வளவு அழகு இவள் பேச்சு. இந்துக்களுக்கு மதம் எவ்வளவு ஒட்டுதலாய் இருக்கிறது. ஆண்டாள் திருக்கல்யாணம் எவ்வளவு அழகாய் உதாரணம் காட்டப்படுகிறது.
/

\
ஆயில் கம்பெனியில் டீசல் பிடித்துக் கொண்டு போகும் லாரி டேங்கரில் 10,000 மீட்டர் அல்லது 12 ஆயிரம் லிட்டர் லாரியின் கொள்ளளவு கேற்றபடி இருக்கும். டீசல், பெட்ரோல் எதுவும் வெப்பத்தில் விரிவடையும். 12,000 லிட்டர் டீசல் ஏற்றிய லாரி இரண்டு மணி நேரம் வெயிலில் நிற்க வைத்துவிட்டு, லாரி மீது ஏறி அலுமினிய குச்சி வைத்து அளந்தால் 12 ஆயிரத்து 200 லிட்டர் அளவு காட்டும். வெப்பம் செய்கிற வித்தை இது.
கம்பெனியில் ஏற்றிய சரக்கை டேங்கர் ஆட்கள் தொட்டிக்கு கொண்டு வருவார்கள். சீல் உடைக்காமல் இருநூறு லிட்டர் டீசல் எடுப்பார்கள்.
/

\
"கொப்பு தவறவிட்ட குரங்குன்னா ?..."
"மரத்துக்கு மரம் தாவறச்சே குட்டி கொப்பு தவறவிட்டதுன்னா குரங்குக் கூட்டம் அதை சேர்த்துக்காது. அடிச்சு விரட்டிடும். அப்படித் துரத்தப்பட்ட குரங்கு அந்தக் கூட்டம் போற இடத்துக்கெல்லாம் போகும். தூர உக்காந்து வேடிக்கை பாக்கும். ஆயுசு பரியந்தமும் வேடிக்கைதான்."
/

\
"இந்தக் கவிதை, கதை, பெயிண்டிங் மாதிரி சமாசாரம்தான் கொஞ்சம் நம் உசிரை தக்க வைக்கும். நம் கவிதையை விட கம்ப்யூட்டர் கவிதைதான் உசத்தின்னு ஒரு காலம் வரப்போது, நம்ம ஆட்டம் க்ளோஸ். கம்ப்யூட்டரை பத்தி படிக்க படிக்க நடுங்கறது உடம்பு.. விளிம்புக்கு வந்துட்டோமோன்னு பதறிப் போறது. டைனோசரஸ் மாதிரி மிருகங்கள் பெரிசாகி பெருசாகி நகர முடியாம, அது வம்சமே அழிஞ்சா மாதிரி நம்ம புத்தி வளர வளர நமக்கு அழிவு நிச்சயம். நம்ம கண்டுபிடிப்பு வளர வளர, முடிவு நெருக்கம்."
/

\
"இதோ பார், நான் நெறையபட்டிருக்கேன். 1932ஓ 33லயோ , 'இப்ப வேண்டாம். இன்னும் கொஞ்ச நாள் பொருத்துச் சுதந்திரம் வாங்கலாம்'னு ஒரு காங்கிரஸ் மீட்டிங்கில பேசினேன். கழுத்த பிடிச்சு மேடைலேர்ந்து தள்ளிட்டான். ஜனமெல்லாம் சிரிச்சது. பன்னாடைன்னு திட்டித்து, வெத்தலை பாக்கு கூட வாங்கவிடாம ஊர் ஜனம் ஒதுக்கி வச்சது . ரொம்ப குழம்பினேன். பேசினது தப்போன்னு நெனைச்சேன். சுதந்திரம் கிடைச்ச ரெண்டே வருஷத்துல, அடடா சரியாத்தான் பேசியிருக்கோம்னு தோணித்து."
/

\
"விஸ்வநாதா, இந்த தேசத்து பெண்களுக்கு ஆண்கள் மேல் நம்பிக்கை கொறைஞ்சுண்டு வரது. அவளுக்கு உன்மேல் கோபம் இல்லை விஸ்வநாதா. அது வெறும் பொம்மனாட்டி கோபம் இல்லை. இன்னிய சகல நடவடிக்கையையும் எதிர்க்கிற கோபம். இன்னிக்கு இது அதிசயமா இருக்கலாம். பின்னால் இப்படித்தான் நடக்கப் போறது. உன் பொண்ணும் உன் பேத்தியும் இப்படித்தான் இருக்கப் போறா. முன்னோடியா இருக்கிறதால காயத்ரிக்கு சிரமம் அதிகம். பின்னால் இதுவே வாழ்கையாவும் போயிடும்."
...
"தப்போ,சரியோ.பயமுறுத்தலை எந்த உயிரினமும் விரும்பாது.கல்யாண உறவு பயமுறுத்தலா இருக்கிற இன்னிய நிலை இப்படித்தான் மாத்தும். இந்த மாதிரி போக வைக்கும். கூட்டுக் குடும்பம் எப்படி உடைஞ்சது, நம்ம கண் முன்னாடி? அது மாதிரி குடும்பம்கிற இடமும் மெல்லச் சிதையும்."
/
Profile Image for Vinodh Dharani.
41 reviews4 followers
February 13, 2021
You don’t have to agree with everything in the book, however it has very human, opinionated characters from all strata of society, and these characters and their interpersonal relationship make this book a compelling read.
1 review
May 27, 2018
காலத்தால் அழிக்க முடியாத படைப்பு

பல்வேறு மனிதர்களின் வியாபார நுணுக்கங்களை, உணர்வுகளை, வாழ்கை முறைகளை உள்ளது உள்ளபடியே நேர்த்தியாக, சிந்தனையை தூண்டும் விதமாக படைக்கப்பட்ட வியக்க வைக்கும் காலத்தால் அழிக்க முடியாத படைப்பு
Profile Image for Hari Udayakumar.
102 reviews15 followers
September 15, 2018
கலசக்கரம்

Interesting characters, இவருடைய பந்தய புற கதை மாதிரி இருக்கு.

ரொம்ப modern thoughts கொண்ட பெண் காயத்ரி. கதாசிரியர் அப்பவே living together relationship பத்தி பேசிருகரு.


Profile Image for Vasanthakumar.
25 reviews5 followers
June 23, 2016
Even though i have contrasting opinion against this novel, i loved balakumaran's argument about his thoughts through the characters... I am not convinced but this is well written...
Profile Image for Priyanga Thamizhini.
6 reviews10 followers
September 24, 2020
'குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான்' என்று கேட்டே பழகிவிட்ட நம்மிடம் குதிரைகள்போல் வளர்ச்சி கண்டால் எவ்வளவு சிறப்பாகும் என ஆசிரியர் கூறியிருப்பது சிறப்பு. குதிரையை மனிதனாக ஓடவிடும் கவிதைகள் ஆஹாகாரத்திற்க்குரியவை. லாரி தொழிலைப்பற்றி ஆரம்பித்து, ஓட்டத்தின் நடுவே நெடுஞ்சாலையின் இடையில் வரும் விலைமாதர் வாழ்க்கைத்தொட்டு, இல்வாழ்க்கையும் பேசப்பட்டுள்ளது.
காதல் மணம்புரிந்து அலுவல் இடையில் கவிதை கிறுக்கும் கதாநாயகன்; என்றுமே ஓட்டத்தில் வாழ்க்கை ஓடிவிடுமோ என்று ஐயப்பட்டுத் தன் கடிவாளத்தைத் தானே பிடித்திழுக்கும் அவலம் அறியாதவன்.
'வாழ்க்கை என்பது யாது?' என வாழ்க்கையின் உண்மைத்தனம் அறிய அலறிடும் என்னைப்போன்ற மாந்தர்களுள் ஒருத்தியாக காயத்ரி! மகள், திருமணம் இன்றி குழந்தைப்பேறு அடைய விரும்புவதையும், தந்தையாக தானே மாற விழைவதையும் ஆமோதிக்கும் அப்பாவாக நாணு ஐயர்; மன்னார்குடி கிழவனுக்குத்தான் எத்தனை முதிர்ச்சி; சிந்தனையிலும்!!

வாழ்க்கை என்பது என்ன??
வயது வரையறுக்கப்பட்ட கல்யாணங்களும் சம்பிரதாயங்களும் பிள்ளைப்பேறும் சம்பாத்யமும்; யார் இயற்றியது இவ்வுலக நியதிகளை?? சரி தவறு பேதம் பிரிக்கும் சூத்திரத்தை?? பெண் என்றால் ஆண் நிழலில் அடக்கம் என்பதை?? உறவு முறிவுகள் நிகழாதிருக்க நடுவுநிலைமை பாராட்டாது அடங்கிப்போகும் அசட்டுத்தனத்தை? சுயவிருப்பத்தைக்
குடும்பத்திற்காக கூறுபோட்டு மாயும்வரை கட்டுண்டு கிடக்கும் அவலத்தை??
ஆயிரம் ஆயிரம் கேள்விகள்!!
"பூமிக்குள் ஏதேனும் குதிரை உண்டோ?
யார் உருக்கி அடைத்தார்கள் உருளைப் புவியில்?
பூமியது தேர்தானா? குதிரை உடலா?
தெரு முழுதும் ஓடுவது தேரா? பரியா?
உயிர் போல ஓர் பொறியை
உள்ளே பொதித்து
இரும்பான குதிரைகள் ஓடக்கண்டேன்!!
பூமியெனும் குதிரைகள் சக்தியூட்டி
பொழுதெல்லாம் ஓட்டுவது
எந்த ஞானி?
ஏன் ஓட்டிப்போகிறான் ?
எத்தனை காலம்?"( புத்தகத்திலிருந்து)

-தமிழினி(Priyanga)
Profile Image for Balaji Srinivasan.
148 reviews10 followers
July 6, 2025
சென்னையில் ஒரு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் விஸ்வநாதன் . அதே சென்னையில் லாரி டிரான்ஸ்போர்ட் நடத்தும் ராவுத்தர் மற்றும் ராவுத்தர் ஆபிஸில் வேலை பார்க்கும் முதலி. லாரி டிரான்ஸ்போர்ட் பிரதானமாக இருக்கும் தெருவில் கௌசல்யா என்ற பெண். எங்கோ ஒரு டவுனில் இருக்கும் பள்ளிக்கூடத்தில் வேலை பார்க்கும் வாத்தியார் மற்றும் அவரது பெண்.

இவர்கள் அனைவரையும் வெகு நைச்சியமாக அறிமுகம் செய்து ஆங்காங்கே சம்பவங்களை உதிர்த்து ஒரு கட்டத்தில் பாலகுமாரன் அவர்கள் அனைவரையும் அழகாக ஒன்றினைத்து எழுதி உள்ளார்.

வாத்தியாருக்கும் அவரது பெண்ணிற்கும் இருக்கும் முற்போக்கான சிந்தனைகள், அவர்களுக்கு மத்தியில் நடக்கும் உரையாடல்களில் அவ்வளவு எதார்த்தம் இன்றைக்கும் ஒரு தந்தை மகள் உரையாடல் அப்படி இருந்துவிடுமா என்பது சந்தேகமே. சினிமா எடுக்கும் ஆசையுள்ள ஆனால் சம்சார பந்தத்திலும் ஆபீஸ் பிரச்சனைகளில் சிக்கி உழன்று தவிக்கும் நம்மை போன்ற கோடானு கோடி இளைஞர்களில் ஒருவராக விஸ்வநாதன் . தொழிலில் ஓரளவு நேர்மையாக நடத்தும் ராவுத்தர்.

உடலை விற்று சம்பாதிக்கும் கௌசல்யா தன்னை நேசிக்கும் ஒருவனுடன் வாழ முற்படுவது. ராவுத்தர் தனக்கு நஷ்டம் என்றாலும் தொழில் கொடுத்தவருக்கு நஷ்டம் ஏற்படுவதால் காசு வாங்காமல் இருப்பது. விஸ்வநாதன்-தாரிணி இடையே நடக்கும் எதார்த்தமான கணவன் மனைவி உரையாடல்கள். விஸ்வநாதன் வசந்தா உரையாடல்கள், விஸ்வநாதன் கூறும் குதிரை கவிதைகள் என்று அடுக்கி கொண்டே போகலாம் 100 காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம் இந்த புத்தகத்தை படிக்க.
4 reviews
September 12, 2021
One gets very mixed feelings when reading this book. Human beings are complex. But not too complex as we think. There are several patterns in them. For some, differences may look prominent. For others, similarities may be prominent. Balakumaran plays with such characters in his usual way which is unique and something not seen before or after. Never seen such complex characters woven into such a nice story that makes an eternal impact into your psyche. A master-piece.
118 reviews
December 12, 2020
Just okay... the approach of tying multiple storylines together at the end was interesting but the story just kept dragging. Gayathri and Viswanathan characters and their modernist thoughts might sound interesting if you had read the book in the 80's and 90's but the thought process isn't relevant in today's world.
Profile Image for Sivaramakkrishnan.S.K.
84 reviews1 follower
January 4, 2018
My 1st book from Balakumaran. Need more philosophical mind to read the latter part of the book. It was good experience to read on Lorry driver and other things related to it.
Profile Image for Naveen Kumar.
189 reviews10 followers
May 9, 2022
Struggle is mandatory but suffering is an option
Profile Image for Saranya Dhandapani.
Author 2 books179 followers
May 9, 2022
-
Book 21 of 2022-இரும்பு குதிரைகள்
Author-பாலகுமாரன்

“அல்ப்பம் என்று ஒரு பொருளும் இல்லை. நேற்றைய அர்ப்பம் இன்றையஅற்புதம். இன்றைய அற்புதம் நாளைய அல்ப்பம். ஆனால், எல்லாவற்றிர்க்கும் உலகில் ஒரு விலை உண்டு. எச்சில் இலைக்கு விலை போட்டு எடுத்து போகுபவர்கள் உண்டு. சாம்பல்-காசு கொடுத்து வாங்குபவர்கள் உண்டு.”

குதிரையை உவமையாக கொண்டு பல மக்களின் கதையை சொல்கிறார் பாலகுமாரன். லாரி டிரான்ஸ்போர்ட் பற்றிய கதை. விஸ்வநாதன் தன் கம்பெனி சரக்கு ஏற்றி வந்த லாரி காணாமல் போக அதைத் தேடி போகும் வேளையில் சந்திக்கும் மனிதர்கள், பிரச்சினைகள் பற்றிய கதை இரும்பு குதிரைகள்.

லாரி டிரான்ஸ்போர்ட், போக்குவரத்து, அதில் இருக்கும் மனிதர்களின் வாழ்க்கை எல்லோரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதன் நுணுக்கங்களை எல்லாம் கொண்டது தான் இக்கதை. இந்த கதையின் பெரிய பலமே இதன் எதார்த்தம் தான். பாலகுமாரனின் எழுத்துக்குள் இருக்கும் சக்தி-ருசி கண்டுவிட்ட பூனை போல் மிகவும் அலாதியானது.

#tamizhkirukki #tamilbooks #tamilbookstagram#tamilbooklovers #tamilbook #tamilbookstore #tamilbookreaders #tamilbooksreview #tamilbooks #tamilbookstagrammer #tamilmeme #bookstagram #bookpage #tamilbookreviewer #vaasippainesippom #balakumaran #balakumarannovels #tamilbookreviews

20 reviews2 followers
October 22, 2015
Balakumaran - Respect. This is my second Balakumaran novel and it is not going to stop with this. A rich experience to have lived with characters like Viswanathan, Gayathri, Nanu Iyer, Rowther etc. Teaches some great truths about life that connects the dots between passion, survival and truth !
Profile Image for Vijay Ramdu.
58 reviews
December 30, 2012
BALAKUMARAN IS THE BEST...
AWESOME MAN.. DON'T NO WHAT ELSE TO SAY.. MUST READ.. THAT'S IT
Profile Image for Srikanth R.
123 reviews11 followers
July 5, 2014
just OK... too much philosophy for my liking... but a good story line...
Profile Image for Aravinthan ID.
145 reviews17 followers
May 16, 2015
It is my first Balakumaran novel. Balakumaran write the story of ordinary man in extra ordinary way with philosophical point of view.
11 reviews
October 19, 2017
book was written in 80's with the progressive thought.
It reflects the current status. this shows the power of the author
4 reviews1 follower
March 10, 2016
Phenomenal, exciting, will change the person that you think you are. My best read so far!
3 reviews
June 13, 2018
Who am i to write a review for this?

It has to be felt while reading it.
Read and feel it.It is simply a marvelous experience reading it!Great!Please read it!
Displaying 1 - 30 of 34 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.