திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு, அடுத்து திராவிடக் கட்சிகள் ஆட்சியின் அரை நூற்றாண்டு, தொடர்ந்து தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர் மு.கருணாநிதியின் சட்ட மன்றப் பணியின் அறுபதாண்டு... இந்த மூன்று தருணங்களும் தமிழ்நாட்டைத் தாண்டியும் இந்தியா முழுமைக்கும் முக்கியமானவை. ஆனால், இந்தியாவின் தேசிய ஊடகங்கள் வழக்கம்போல இதற்கும் பெரிய கவனம் அளிக்காமலேயே கடந்து போயின. ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஆசிரியர் குழுவால் அப்படிக் கடந்து போக முடியவில்லை. எல்லா நிறை - குறைகளைக் கடந்தும், இந்த மண்ணில் மகத்தான ஒரு பணியை, குறிப்பாக சமூக நீதித் தளத்தில் திராவிட இயக்கம் நிறைவேற்றியிருக்கிறது. அதன் முக்கியமான தளகர்த்தர்களில் ஒருவர் &
திராவிட கட்சிகளில் ஊழல் உண்டு. சாதி பார்த்து தான் வேட்பாளர் நிறுத்துகிறார்கள். இந்த நாட்டுக்கு அவர்களால் இன்னும் எவ்வளவோ செய்திருக்க முடியும் என்பதில் எல்லாம் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் "திராவிடத்தால் வீழ்ந்தோம்" என்பதை எப்பொழுது கேட்டாலும் தீயாய் சுடும்.
திராவிட கொள்கைகளை புரிந்து கொள்வது பெரிய சூத்திரமில்லை. கொஞ்சம் common sense, மனிதாபிமானம், ஜனநாயகத்தில் நம்பிக்கை, சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றில் உடன்பாடு இருந்தால் போதும். திமுக பல நேரங்களில் இவற்றின் தடம் மாறி சென்றிருக்கிறது. அனால் இன்றும் அதன் அடிப்படை அவை தான் என்றே நம்புகிறேன். இங்கு தான் அரசியலில் possibility என்பது வருகிறது. "ஊரே washing machineல போட்டது மாதிரி இருக்கு" என்று 'ஷங்கர்'த்தனமான புரிதல்களோடு இருப்பவர்களால் இதை உணர்ந்து கொள்ள முடியாது.
சரி.. திராவிட இயக்கங்களின் மேலுள்ள ஈடுபாடு வெறும் Emotional connectஆ? நிச்சயம் இல்லை. தரவுகளின் அடிப்படையிலே கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி, மனித வளம் என்று எல்லா குறியீட்டுகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலங்களில் ஒன்று. ஒரே தேசம் என்று குறிப்பிடப்படும் நிலப்பரப்பில் 1000km சொச்சம் தூரம் உள்ளவர்களால் முடியாத பொழுது, இது இந்த மண்ணின் மக்களின் சாதனை 5௦ ஆண்டு கால ஆண்ட கட்சிகளுக்கு சம்பந்தமில்லை என்று சொல்வது முட்டாள்த்தனம் அன்றி வேறென்ன?
NewYork timesல் 'the land ruled by cine stars is one of the prosperous state in india' என்ற கட்டுரை, NEET பிரச்னையின்போது நுழைவுத்தேர்வு இல்லாமலே தமிழகம் எப்படி சுகாதாரத்தில் சாதித்தது என்ற கட்டுரை என எல்லாம் சிதறி கிடந்தது. குஜராத் மாடல் என்று வட இந்திய ஊடகங்கள் முழங்கியபோது தமிழ்நாடு எந்த விதத்திலும் அதற்கு சளைத்ததல்ல என்று இங்குள்ள ஊடகங்கள் ஒன்று சேர்ந்து பதிலடி கொடுத்திருக்க வேண்டும். இவ்வளவு காலம் கழித்தானாலும் மிக சரியான ஒரு தருணத்தில் பொதுத்தளத்தில் எளிய மக்களுக்கு சேரும் வண்ணம் தெற்கிலிருந்து ஒரு சூரியனை 'தி ஹிந்து' உருவாக்கியிருக்கிறது
இந்த கட்டுரைகள் யாவும் யாரோ முகம் தெரியாத ஒருவரால் வாட்சப்பிலோ முகநூலிலோ பதியப்பட்டவை அல்ல. தரவுகளின் அடிப்படையில் அந்தந்த துறையில் சமூகத்தால் அங்கீகரிக்க பட்டவர்களின் பதிவுகள். இவர்களில் பலரே இந்த இயக்கத்தை பல நேரங்களில் எதிர்த்தவர்கள் தான்.
தனிப்பட்ட அரசியல் பிம்பத்தின் மீது பிணைப்பு கொள்ள விரும்பாத எனக்கே சண்முகநாதன் இமயம் போன்றவர்களின் கட்டுரைகள் நெஞ்சை தொட்டது. இது என் காலத்துக்குமான பொக்கிஷம்.
ஒரு இயக்கத்தின் மீது பெருவாரியான மக்கள் ஈடுபாடு கொள்வதென்பது அவர்களால் அந்தந்த காலக்கட்டங்களில் தேர்ந்தெடுக்கப்படும். நாளை திராவிடத்தை ஒதுக்கி முழு தமிழ் தேசியமோ, தலித் இயக்கமோ ஏன் மதவாத இயக்கமோ தேர்ந்தெடுக்கப்படலாம். ஆனால் கடந்த காலத்தில் இந்த மண்ணிற்கு மாற்றத்தை ஏற்படுத்தியவர்களை அங்கீகரிக்க மறப்பது அறமாகாது. அந்த அங்கீகாரம் தான் "தெற்கிலிருந்து ஒரு சூரியன்"
சமஸ் மற்றும் 'தி ஹிந்து' குழுவினருக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.
"Thiravidathal veezhdhom", "thiravida katchigal enna seithadhu ?" these are the questions or statement raised today by most of the people and they want to spread among the society. They may have selfish motives, but as a media and journalist "The hindu" has done a great job in bringing the truth to light. There may be a corruption, caste vote bank politics in dmk too. But the ideology of a political party, the way it implemented to the society through its schemes i.e. inclusive economics, is great. Hope the great party takes steps to retain its charm and ideological strength in future. Great book at the right time by The Hindu team, Must read for all the generations. Great job Samas !!!
Book has to be divided into two halves. 1st half is about dravidian institutions and its achievements. It is an eye opener for younger generation who are skeptical about dravidian ideology. Briefly answers the question 'what dravidian parties has done to tamil society'. 2nd half is dedicated to Kalaingar . Content praise his attributes and talent . Book ends with highlighting the problems to be addressed in future . I find little difficult in understanding the translated texts
நான் கலைஞரின் மறைவுக்கு பின் திராவிட இயக்க வரலாறையும் அது சார்ந்து புத்தகங்களையும் வாசிக்க தொடங்கியவன், திராவிட இயக்கம் சார்ந்து என் சிந்தனைகளையும் கண்ணோட்டங்களையும் தீர்மானிப்பதில் புத்தகங்களே முதன்மையாக இருந்துள்ளது. அந்த வகையில் இந்து தமிழ் திசை வெளியிட்ட "மாபெரும் தமிழ் கனவு" "தெற்கிலிருந்து ஒரு சூரியன்" போன்ற புத்தகங்கள் எல்லாம் திராவிட இயக்கத்தின் வீச்சை சரியாக பதிவுசெய்யவில்லை என்றே சொல்வேன். சில கட்டுரைகள் தவிர்த்து மற்றவை எல்லாம் ஏனோதானோ நடையிலே எழுதப்பட்டதாகவே தெரிகிறது. திராவிட இயக்கத்தை பற்றி பதிவுசெய்யப்பட்ட நீர்த்துப்போன வடிவங்களாக இந்த இரு தொகுப்பையும் சொல்லலாம், ஆனால் ஒரு உண்மையை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும் இந்த இரு புத்தகங்கள் தான் பரந்த வாசகர்களை திராவிட இயக்கம் நோக்கி அழைத்துவந்தது, திராவிட இயக்கத்தின் அடிநாதமான வாசிப்பு பழக்கம் குன்றி போனதே இதற்கான காரணமாக சொல்லலாம். அதை மீட்டுருவாக்கினால் தான் திராவிட இயக்கத்தின் அடிப்படைகளை அடுத்த தலைமுறைக்கு கடத்த முடியும். இந்தியாவில் தற்போதிருக்கும் சூழல் தொடரும் பட்சத்தில் திராவிட இயக்கத்தின் தீவிர தன்மைகளின்(Radicals of Dravidian Movement) தேவையும் அதிகரிக்கவே செய்யும். “தெற்கிலிருந்து ஒரு சூரியன்” நூல் உணர்வுபூர்வமாக அதே சமயம் அறிவாழம் மிகுந்த கருத்துக்களால் நிறைந்தே இருந்தது. பெரியாரை பற்றியோ அண்ணாவை பற்றியோ அல்லது கலைஞரை பற்றியோ ஒரு கட்டுரை எழுதும்போது அவர்களோடு சேர்ந்து இயங்கிய இயக்கத்தின் வரலாறு தவிர்க்க இயலாத ஒன்று. காரணம் திராவிட இயக்கத்தின் போக்கை அந்தந்த காலகட்டத்தில் தீர்மானித்த முகங்கள். அடிப்படைவாதம் பேசிய சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகமாக(JUSTICE PARTY + SLM) மாறிய போது அதன் பண்பிலும் ஒரு மாற்றம் இருந்தது. அரசியல் நிர்ணய சபையில் திராவிட இயக்க கொள்கைகளை பிரதிநிதித்துவபடுத்த தவிறியதன் விளைவாக உருவானதே திமுக. திக-திமுக பிளவுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், அந்த பிளவின் அடிப்படை நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது திராவிட இயக்கம் கொண்டிருந்த நம்பிக்கை. திமுக தேர்தலில் பங்கேற்காத காலகட்டம் என்பது விதை தூவப்பட்ட காலம், பயிரின் தன்மை செழிப்பாக இருப்பதை உணர்ந்து தான் தேர்தல் அரசியலில் கால் வைக்கிறது திமுக(1957). 10 ஆண்டுகளில் அறுவடையும் நடக்கிறது(1967). துல்லியமான தீர்மானங்கள்,கொள்கை கோட்பாடுகள் நிறைந்த ஒரு இயக்கத்தால் மட்டும் இது சாத்தியப்படும்.(இதற்க்கு மற்றோரு எடுத்துக்காட்டு ஆர்.எஸ்.எஸ் - பாஜக) அதிகார குவிப்புக்கு எதிராகவும், ஜனநாயகம் தழைக்கவும், விளிம்புநிலை மக்களை அதிகார மையம் நோக்கி நகர்த்தவும் தான் இந்த இயக்க செயல்பாடுகள் அமைந்துள்ளது. அப்படி மதிப்பிடுவது தான் சரியும் கூட. திரு. ஜெயரஞ்சன் சொல்வார் "திராவிட இயக்கம் Empowerment Justice ஐ அடிப்படையாக கொண்டு இயங்குகிறது”. அது இந்த தமிழ் நிலம் சார்ந்து ஜனத்தின் அபிலாசைகளை(Aspirations) கூர்தீட்டி உள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. ஒரு காலத்தில் இழி���ாய் நடத்தப்பட்ட தமிழர்களின் சுயமரிதை மீட்டெடுத்தது திராவிட இயக்கம் தான். "பஞ்சம் பிழைக்க வந்த மாதரசி" என்று வடவர்கள் கேலி கிண்டல் அடித்த காலம் எல்லாம் இருந்தது. 60களில் உத்திர பிரேதேசமும் - தமிழ்நாடும்(அப்போது மெட்ராஸ் ஸ்டேட்) ஏழ்மையிலும், தனிநபர் வருவாயில் ஒரே நிலையில் இருந்தவை தான்(Refer: The Paradox of India’s North–South Divide). மண் வளம் - மழை வளம் நிறைந்த உ.பி யை விட தமிழ்நாடு இன்றைக்கு அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு இங்கு நடந்த திராவிட அரசியலை தவிர்த்து வேறென்ன காரணங்கள் இருந்துவிட போகிறது. 90களுக்கு பிறகு நடந்த தாராளமயமாக்களையும் வெற்றிகரமாக பயன்படுத்திக்கொண்டது தமிழ்நாடு தான். அனைவருக்குமான வளர்ச்சியை சந்தை பொருளாதாரத்தில் இருந்து கொண்டே சாத்தியப்படுத்த முடியும் என்பதை நிறுவியதும் இந்த இயக்கம் தான். காலத்திற்கு தகுந்தாற் போல் மக்களுடன் நெருக்கத்தை அது ஏற்படுத்தி கொண்டே வருகிறது. கொள்கையில் சமரசம் செய்துகொண்டது, இளைஞர்களை அரசியல்படுத்த தவறிவிட்டது என்ற விமர்சனங்களை எல்லாம் 2021 தேர்தல் முடிவு தவிடுபொடி ஆக்கி இருக்கும். திராவிட இயக்க கொள்கைகளை காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளும் பேச தொடங்கி இருப்பதே இதன் சமகால பொருத்தத்தை(Contemporary Relevance) உணர்த்தும். இந்த இயக்கத்தின் வரலாறு ஆழமாக எழுதப்பட வேண்டிய ஒன்று, இதன் தேவை இந்த நூற்றாண்டின் முக்கிய தேவைகளும் ஒன்று, அதன் லட்சியங்களை நோக்கி எடுத்துவைக்கும் ஒருவொரு அடியும் தமிழ் மக்களின் சுயமரிதையை மீட்டெடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள். கலைஞர் கூறி சென்ற ஐம்பெரும் முழக்கங்கள் திராவிட இயக்கத்தின் இன்றைய தேவையை உணர்த்தும் 1. அண்ணா வழியில் அயராது உழைப்போம். 2. ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம். 3. இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம். 4. வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம். 5. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி.
One of the important work about Dravidar kazhagam. The way the author gives importance to small things like how many surgeries MK undergone for this eye and the selection of ppl whom were interviewed like MK's photographer Yoga, S.M.Krishna, Ganapathy Sathabathy's heir Selvanathan, Deve Gowda are really impressive. It not only contains praises for MK or DK or DMK, it also points out the criticism about him. Questions put forth by Samas in interviews are great, he always questions about some of the criticisms about MK to every person he interviewed for this book. Overall a great effort and the book it delight to read.
கலைஞரின் வாழ்க்கை வரலாறு என்றே சொல்லலாம். கட்டுரைகள் மூலம் சமஸ் அறிமுமாகி இருந்தாலும் அவர் எடுத்திருக்கும் இந்த ஆவணப்படுத்துதல் ஒரு மாபெரும் உழைப்பு வேண்டுவதாகும்.அதை செவ்வெனே செய்ததில் மிளிர்கிறார் சமஸ். கலைஞர் என்பவரது சொல், செயல், பேச்சு, எழுத்து, சிந்தனை அனைத்தையும் மிகத் தெளிவாக பதிவிடுகிறது. ஆசானாக, நவீன தமிழகத்தின் சிற்பியாக, தேர்ந்த அரசியல்வாதியாக ஏற்கனவே அறிமுகம் ஆன கலைஞரை அறிந்திராத சம்பவங்கள் மூலம் தீர்க்கமாக நிறுவுகிறது. மக்கள் அறிந்த Cliche-களை உடைத்தெறிந்து மிளிர்கிறது இந்த சூரியன். கலைஞர் என்னுமொரு கிழக்கு திசை!
This book talks about Tamil Nadu politics in indian scenario with the merits of Karunanidhi, even the achievements of Jayalalithaa and the Dravidian parties....
ஒவ்வொஒரு விஷயத்தை உறுதியாகச் சொல்ல முடியும். அவரைப் பொறுத்தவரையில் எல்லாவற்றிலும் தமிழ்நாடு முன்னிலையில் நிற்க வேண்டும். அது ஒரு நெருப்பு மாதிரி அவருக்குள் எரிந்துகொண்டே இருக்கும். இதில் பிராமணர் - பிராமணர் அல்லாதோர் அப்படியெல்லாம் இல்லை; தமிழ் – தமிழர் அப்படித்தான். தமிழகத்தைச் சேர்ந்த எந்தத் தொழிலதிபரும் அவரைப் பொறுத்தவரையில் ஓரு தமிழ்த் தொழிலதிபர்தான். அப்படித்தான் அவர் பார்த்தார்..
இது கலைஞரின் அரசியல் பாதையை விவரிக்கும் நூல். எனினும், 'திராவிடம் என்ன செய்தது?' என்று கேட்பவர்களுக்கும், தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றைப் பற்றி எதுவும் தெரியாத என்னைப் போன்றவர்களுக்கும் இந்நூல் ஒரு சிறந்த திராவிட அரசியல் வரலாற்றுச் சுருக்கம் என்றும் கூட சொல்லலாம். பக்கங்கள் நிறைய இருந்தாலும் விரைவில் படித்து முடிக்கக் கூடிய எளிய தமிழ் நடையில் இந்த நூல் உள்ளது (page turner/ fast read). இன்றைய இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.
திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்பவர்கள் இப்புத்தகத்தை படித்து திராவிடத்தால் வாழ்ந்தோம் என்று சொல்வார்கள்.... வெறும் புத்தகத்தில் உள்ள கட்டுரைகளில் மட்டும் அல்ல நம் தமிழ்நாட்டில் சமூக நீதி சமத்துவம் சமதர்மம் இக்கொள்கைகளை நம்முடைய மூளையில் ஏற்றியதே திராவிட கட்சிகள் தான்.. தமிழக அரசியலில் கலைஞர் தவிர்க்க முடியாத ஒரு மாபெரும் வெற்றிகண்ட தலைவர்... திராவிடத்தால் வாழ்ந்தோம் 🖤❤️
Need of the hour maybe, to know what Dravidan parties did to TN. And, also about the man Karunanithi, whose many of the schemes were ahead of its time. You may have 100 reasons to hate, but reading this will give you at least a single reason to love him.
Very nice summarisation of Dravidian movement in Tamilnadu and how it impacts TN's growth. You can support or opppse Dravidian movement and you can never ignore it.
கருணாநிதி என்ற ஒரு பெயர் இந்திய அரசியலில் எவ்வாறு முக்கியம் என்பதை இந்த புத்தகம் உணர்த்துகிறது. அவர் மேல் இவ்வளவு காலமாக இருந்த பார்வ்வை இந்த புத்தகம் மாற்றுகிறது 🖤❤️
தமிழகத்தின் அறுபது ஆண்டு அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர் கருணாநிதி. அவரை விமர்சித்து கொண்டாடி இருக்கிறது இந்த புத்தகம். மேலும், சுதந்திரம் அடைந்த பின் சமூக நீதி அடைய எப்படி மடை மாற்றப்பட்டோம், இந்த பயணத்தை தி.மு.க எப்படி வழி நடத்தியது என்று பல நிபுணர்கள், ஆளுமைகள், தலைவர்களின் தொகுப்பாக உள்ளது. கலைஞர் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்பதை இந்த புத்தகம் பக்கத்துக்கு பக்கம் பறைசாற்றும்.