Kannadasan (24 June 1927 – 17 October 1981) was a Tamil poet and lyricist, heralded as one of the greatest and most important writers in the Tamil language. Frequently called Kaviarasu (English: King of Poets), Kannadasan was most familiar for his song lyrics in Tamil films and contributed around 5000 lyrics apart from 6000 poems and 232 books,[1] including novels, epics, plays, essays, his most popular being the 10-part religious essay on Hinduism, captioned Arthamulla Indhumatham (English: Meaningful Hindu Religion). He won the Sahitya Akademi Award for his novel Cheraman Kadali in the year 1980 and was the first to receive the National Film Award for Best Lyrics, given in 1969 for the film Kuzhanthaikkaga.
Each chapter tells story from different POV,the Author's elegant writing skill shone especially in telling of RAM and sita as metaphor in one of the chapters..a good one time read..but not wished to read for even a second time...
1978 வாக்கில் எழுதப்பட்ட குறுநாவல். இதுவரை படித்த, கவிஞரின் உரைநடைகளில் இது கொஞ்சம் வித்தியாசமாக படுகிறது.
கதைக்கரு, சுரேந்திரன் என்பவருக்கு மனைவியாய் வாய்க்கும் ஜானகிக்கு குழந்தையில்லை. அதனால் தனது தங்கையான வைதேகியை இரண்டாம் தாரமாக கணவனுக்கு மணமுடிக்கிறாள். ஒரே வீட்டிலயே மூவருமாக வாழ்ந்துவருபவர்களுக்கு, குழந்தைபேறு கிடைத்ததா? அவர்கள் ஒற்றுமையாக இருந்தார்களா? குழந்தைபேறுக்காக என்னவெல்லாம் அவர்கள் இழந்தார்கள், பெற்றார்கள்?.இப்படி பல விஷயங்களை மிக அழகாக புனைந்திருக்கிறார் கவிஞர்.
முக்கியமாக., சிவப்புக்கல் மூக்குத்தியால் அவ்விரு பெண்களுக்கு என்ன கிடைக்கிறது. அது உண்மையில் யார் தந்து, அவர்கள் யாராக ஆகிறார்கள் என்பதனை சொல்லி ஆன்மீகச் சிந்தைனையுடன் முடிக்கச் செய்கிறார்.
தாய்-மகள் அன்பு, சகோதரிகள் பாசம், மூவருக்குள்ளுமான காதல், ஊடல், போன்ற புனித உணர்வுகளை பரவவிட்டபடி தடையில்லாது செல்கிறது நாவல். அதிலும் இந்த மூவரின் வழிநின்று அவர்களது பார்வையில் வாக்குமூலம் 1,2,3..என அத்தியாயங்களாக அமைக்கப்பட்டிருப்பது அந்தகாலத்திற்கு புதுமை, இப்போதும் .
நாற்பது வருடங்களுக்கு முன் எழுதப்பட்டதால், சக்களத்தி முறை பெரிய விஷயமாக இப்போது கருதுவதிற்கில்லை. ஆனால் இப்போது நினைத்து பார்க்கவும் முடியாத ஒன்று, மற்றபடி அனைத்தும் ஏற்கும்படி, உரைநடை வகையிலும் கவிஞர் முத்திரை பதித்திருக்கிறார் என்பதற்கு இந்நாவல் மேலும் ஒரு சான்று!
சில கவிஞர்கள் கதையின் துணை கதாபாத்திர இறப்பை நம் நெஞ்சுக்குள் ஊசியாய் குத்தி , குதிரம் பார்த்து விடுவார்கள். கதையின் தன்மைக்கு அது அவசியப்படும். கண்ணதாசன் அப்படியே மாற்றி , கதையை சொல்லும் முக்கிய கதாப்பாத்திரத்தையே கொன்று அதை ஒரு சாதாரண நிகழ்வு போல் கொண்டு சென்றார் . கதையின் தன்மைக்கு அது தேவைப்படுகிறது. மண வாழ்வின் தூன்பங்களையும் இன்பங்களையும் சமமாக பேசும் இந்த நாவல் , முடிவில் ஆனந்தத்தை வாசகர்களுக்கு பரிசளித்து தாலாட்டு பாடி தூங்க வைத்திருக்கிறது..