Thriller Based Fiction Written By Rajeshkumar. ஒரு கொலை கேஸில், கிராஸ் டாக் செய்தியை வைத்து குற்றவாளியை எப்படி நெருங்குகிறார் க்ரைம் ஃப்ரான்ச் ஆபீஸர் விவேக் என்பதை தனக்கே உரித்தான பாணியில் விவரிக்கிறார் ஆசிரியர்.
அடுத்தவர்களை வீழ்த்த திட்ட போடுபவர்களை வீழ்த்த எங்கோ வேறொருவன் திட்டம் தீட்டுவான்.
கோவையில் இருந்து கிரைம் ஆபிஸர் விவேக் சென்னை வரும் இரயிலில் ஏதோ ஒரு பெண்ணைக் கொலை செய்யப்போகிறார்கள் என்ற தகவலை போன் கிராஸ் டாக் மூலம் கேள்விபட்டவன் சொன்னதை வைத்துக் கவனமாக இருக்கிறார்கள்.
அந்த இரயிலில் வரும் பத்திரிக்கையாளர் நீரஜாவை தான் கொலை செய்யும் முயற்சி நடக்கிறது அதை விவேக் சாமர்த்தியமாகத் தடுத்துவிடுகிறான்.
அதே இரயில் தன் மனைவியைக் கொல்ல சர்தார் வேஷத்தில் கௌதம் வருகிறான்.
தன் நண்பன் சுதாகருக்குக் கொடுத்த பணத்தைக் கௌதம் திருப்பிக் கேட்டதால் அவன் பின்னே வந்து அந்த இரயில் ஏறி கௌதமை பார்ட் பார்ட்டாக வெட்டி டாய்லெட் பிளஷ் வழியே தள்ளிவிடுகிறான்.
வண்டி சேலத்தைத் தாண்டுவதற்குள்ளே நடந்த கொலை தெரியவருகிறது.
சர்தார் தான் குற்றவாளி என்று தெரிந்த பிறகு அந்த உருவமைப்பை தேடி சுதாகரின் வீட்டை கண்டடைகிறார்கள்.