தொழில் போட்டிகளில் உயிர்பலி என்பது தவிர்க்க முடியாதது.
சென்னையில் இருக்கும் பேராசிரியருக்கு வந்த பார்சலில் சந்தேகத்திற்கிடமான பொருள் இருப்பதாக எழுந்த வினாவால் அதைக் கிரைம் ஆபிஸர் விவேக் திறந்து பார்க்க முழுமனித தோல் கிடைக்கிறது. டெல்லி சென்றிருந்த அந்தப் பேராசிரியர் பற்றி எந்தத் தகவலும் இல்லாமல் போக அங்கே விரையும் போது இரண்டு கொலைகள் நடந்தேறுகிறது அதில் பேராசிரியரும் ஒருவர். அவர் விட்டுச் சென்ற தடயத்தை வைத்து விசாரணையைத் தீவிரப்படுத்துகிறார்கள்.
பேராசிரியர் கண்டுபிடித்த செயற்கை பெட்ரோலால் அரபு நாட்டில் இருந்து இறக்குமதி குறையும் என்று நினைத்த துபாய் ஷேக் ஒருவர் தான் இந்தக் கொலைகளைச் செய்யத் திட்டம் போட்டது என்ற உண்மை வெளிவருகிறது. அவருக்காக இங்கே இருக்கும் சிலர் கொலைகளை நடத்தி இருக்கிறார்கள்.