ஒரு பக்கத்துக்கு மிகாத சிறிய கதைகள். ஒவ்வொரு கதையும் இந்த சாயலில் இருக்கும். புத்தகத்தின் முதல் கதை: ஒரு யூனிட் இரத்தம் கிடைத்தால் போதும் - ஏபி நெகட்டிவ்… ரொம்ப முக்கியம்! அரக்கப் பரக்க எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு தெரிந்தவர்களுக்கெல்லாம் மெசேஜ் செய்தான். மதியமாக இன்னும் ஒரு மணி நேரம்தான் உள்ளது. ஆனால் நம்பிக்கையை விட்டுவிடவில்லை, இரத்தம் கிடைத்துவிடுமென ஒரு அசாத்திய நம்பிக்கை அவனுக்கு! கடைசியாக ஒரு கால் வந்தது; இரத்தம் கொடுக்கத் தயாராக இருந்தவரிடம் தன் விலாசத்தைக் கொடுத்து உடனே வரச் சொன்னான். காலிங் பெல் சத்தம் கேட்டு மகிழ்ந்தான். வந்தவரை வீட்டுக்குள் அழைத்து சோபாவில் உட்காரவைத்து தண்ணீர் கொடுத்தான்.