கவனமாக ஏமாற்ற நினைத்தாலும் மாட்டிக்கொள்வதற்கு ஏதுவாக ஏதாவது ஒரு தடயத்தை விட்டு விடுவர்.
அப்பாவிற்குத் தெரியாமல் கர்ப்பமாக இருக்கும் காதலியை தனி வீட்டில் வைத்திருக்கிறான் சித்தார்த்தன்.திடீர் என்று அவள் கடத்தப்படுவதால் தன் தந்தை மேல் சந்தேகம் கொண்டு தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்துவிடுகிறான்.
இருபது வருடங்களுக்குப் பிறகு லேடிஸ் ஹோஸ்டலில் யாரோ கொலையாகி இருக்கிறார்கள் என்ற செய்தி கிடைத்து விவேக் அங்கே செல்கிறார்.யார் அவன் என்று விசாரணை தொடங்க மற்றொரு பெண்ணும் கொலையாகிறாள். அவள் ஏற்கனவே இறந்தவனின் தங்கை.யார் செய்தார்கள் என்று ஒரு சின்ன நாடகம் மூலம் உண்மை வெளியாகிறது.
சித்தார்த்தனின் காதலி கடத்தியவர்களிடம் தப்பித்து குழந்தையைப் பெற்றெடுத்து இறந்துவிடுகிறாள். அக்குழந்தை தற்போது கொலையான ஹோஸ்டலில் படித்துக் கொண்டிருக்கிறாள். இந்த உண்மை தெரிந்த அந்த ஹோஸ்டல் வார்டன் தனக்குத் தெரிந்த பெண்ணை சித்தார்த்தனின் மகள் என்று ஒப்படைக்கிறாள். பிளாக்மெயில் செய்த இருவரையும் அவர் தான் கொலை செய்தார் என்று வெட்ட வெளிச்சமாகிறது.