ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கால்நூற்றாண்டுக்கும் மேல் ஆயுள் தண்டனை கைதியாகச் சிறைப்பட்டிருப்பவர்களில் ஒருவர். இவர் தமிழகத்தைச் சார்ந்த, விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்பதைவிட, ஈகம்செய்யத் துணிவுகொண்டு, இளம் வயதிலேயே ஈழம்சென்று, போர்செய்யும் உத்திகள்பயின்று, பகைஎதிர்த்துக் களம்நின்று, வீரம்சிந்திய விடுதலைப்புலி என்பதே மிகவும் பொருத்தமாகும். தோழர் ஏகலைவன் அவர்களின் அரிய முயற்சியில் தொகுக்கப்பட்டுள்ள இந்நூல் அதனை விரிவாக விவரிக்கிறது.