காம சூத்திரம் (Kama Sutra, வடமொழி: कामसूत्र), என்பது காமம் தொடர்பான தொடர்பான ஒரு பண்டைய வடமொழி நூலாகும். இது வாத்சாயனர் என்பவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவர் கிபி முதலாம் நூற்றாண்டுக்கும் ஆறாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட ஒரு காலத்தில் வாழ்ந்தவர் ஆவார். காம சூத்திரம் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நூலின் துவக்கத்தில், முதலில் நான்கு புருஷார்த்தங்கள் குறித்தும், பின்னர் அதன் முக்கியத்துவம் குறித்தும் கூறப்பட்டுள்ளது. இந்நூலிலேயே அறம்(தர்மம்), பொருள்(அர்த்தம்) ஆகியவற்றுக்கு பிறகே காமம் என தெளிவாக கூறப்பட்டுள்ளது[1]. எனினும் மேலை நாட்டவரின் தவறான மொழிபெயர்ப்பினாலும் மூலநூலில் இல்லாத பாலியல் சித்திரங்களையும் பின்னர் இணைத்ததனாலĬ