புதிய கண்டுபிடிப்புகளுக்கான நேரத்தில் பலவகையான எதிர்மறை முடிவுகளும் வரும். அதைப் பயன்படுத்தும் ஆராயாச்சியாளரின் மனதை பொருத்தே சமூகம் எதிர்கொள்ளும் இடர்கள் வரும்.
ரேடியேஷன் மூலம் கண் பார்வை இல்லாதவர்களுக்குக் கண்ணாடி மூலம் உலகத்தைக் காணச் செய்ய விரும்பிய அஜித்மேனன் அதற்கான முயற்சியில் முக்கால் பாகம் வென்றுவிடுகிறார்.
உருவாக்கிய கண்ணாடியில் ரேடியேஷன் அதிகமாக அதை அணிந்து உயிரிகளைப் பார்த்த சில நிமிடங்களிலே அது உருகிவிடும் தன்மை கொண்டிருப்பதை அறிந்தவர் தன் எதிரிகளைத் தீர்க்கும் முடிவெடுத்து இருவரை கொன்றும் விடுகிறார்.
மூன்றாவதாக ஒருவரை கொல்ல போகும் நேரத்தில் போலீஸின் வலையில் வீழ்ந்து கைதாகுகிறார்.