க.நா.சுவின் நாவல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ‘நளினி’ சிக்கல்கள் எதுவுமில்லாத ஒரு சாதாரண நாவல். 1959இல் வெளிவந்த நாவல் இது. இந்த காலக் கட்டத்தில் சிற்றன்னைகளுக்கு குறைவே இல்லை. அந்த கிராமங்களில் ஒவ்வொரு தாத்தாவுக்கும் தாழ்வாரத்திற்கு ஒரு மனைவி அதிகாரம் செய்து கொண்டிருப்பாள். மறுதாரம் இல்லாத மனிதர்கள் இல்லை என்று கூறும் அளவிற்கு காவிரி கரையோரத்து கிராமங்களும் அக்கிரகாரங்களும் இருந்தன. அப்படிப்பட்ட ஒரு அக்கிரகாரத்தின் கதை இது; அப்படிப்பட்ட ஒரு சிற்றன்னையின் கெடுபிடியில் வளர்ந்த சிறுமியின் கதை இது. வாசற்படியே உலகம் என்று இருந்தவள் அச்சிறுமி நளினி. ஆனால் திருமணம் முடிந்த மறுநாளே படிதாண்டிச் செல்கிறாள் - ஒரு அயோக்கியனுடன் வாழ விர
க.நா.சு எனப்படும் கந்தாடை நாராயணசாமி சுப்ரமணியம் தஞ்சை வலங்கைமானில் பிறந்தவர். எழுத்தாளராக வாழ்வது என்ற முடிவை இளம் வயதிலேயே தேர்ந்துகொண்டு வாசிப்பிலும் எழுத்திலும் நிறைவடைந்தார்.
க.நா.சு படைப்புகளில் சர்மாவின் உயில், வாழ்ந்தவர் கெட்டால், ஒருநாள், பொய்த் தேவு, அசுரகணம் முதலான பல நூல்கள் முக்கியமானவை. தமிழ் இலக்கியம் உலக இலக்கியத்திற்கு நிகராக நிற்க வேண்டும் என்ற கவலையில், தமிழின் மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்திலும், பல உலக இலக்கியங்களைத் தமிழுக்கும் மொழியாக்கம் செய்தார்.
சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை மொழிபெயர்ப்பு, விமர்சனம் முதலான பல துறைகளிலும் தரமாக இயங்கிய க.நா.சு தன் காலத்திற்கு மேலான பல பரிசோதனை முயற்சிகளைச் செய்திருக்கிறார். ராமபாணம், இலக்கிய வட்டம், சூறாவளி, முன்றில், Lipi - Literary Magazine போன்ற சிற்றிதழ்களை நடத்தினார்.
நவீன இலக்கிய முயற்சிகளுக்கான சங்கமாகச் செயல்பட்ட மணிக்கொடியின் முக்கிய அங்கத்தினர் இவர். 1986ஆம் ஆண்டு அவரது “இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்” என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி பரிசு பெற்றார். தமிழக அரசின் விருது, குமாரன் ஆசான் விருது போன்றவற்றால் கௌரவிக்கப்பட்டார்.
1988ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி டெல்லியில் மறைந்தார். 2006ம் ஆண்டு அவரது நூல்களை தமிழ்நாடு அரசு நாட்டுடமையாக்கியது. தமிழ் எழுத்தாளர் மற்றும் நாடக நடிகரான பாரதி மணி க.நா.சு வின் மருமகன்.
The story captured life of agraharam. Loved the author's take on women of agraharam and their thoughts when it comes to gossiping, also his take on chinnammal and Nalini.
The only concern that I have was the author portrays Nalini as smart person though rebellious. However, she made a life changing decision at a whim without considering future. or the author did not explain her ruminating before making this decision.
I think her decision was not consistent with her life through out before her marriage.
சுமார் நூறு பக்கங்களிலான குறுங்கதை. ஒரு அக்ரஹாரத்துக்குள்ளே நடக்கிறது. மிக சொற்பமான கதாபாத்திரங்களுடன் கதையை அமைத்திருக்கிறார்.
ஒரு ஆழமான கருவை போகிற போக்கில் கதையாக சொல்வதில் கா ந சு வித்தகர். மலர்களின் நறுமணம் போல அவர் கதைகளில் நகைச்சுவை.
ஆல்பர்ட் காம்யூ கதைகளில் ஏழ்மையின் சித்திரம் இருப்பதுபோல் கா ந சுவுடய கதைகளில் பணத்தின் பரிமாணத்தை பார்க்கலாம்.
கதாநாயகி நளினி பத்து வயது தாயில்லா பெண்ணாக, கள்ளம் கபடமற்ற ஆனால் மிகவும் சூட்டிகையான குழந்தையாக இருக்கிறாள். சின்னமாவின் கடுகடுப்பையும், சுற்றி நடக்கும் நடப்புகளையும் தாமரை இலை தண்ணீர் போல எடுத்து கொண்டு வளரும் நளினி எப்படி அத்தகைய முடிவு எடுக்கிறாள்? சாதாரண மனிதர்களுக்கு பணம் என்ற கருவி குற்றங்களை எல்லாம் மறக்க செய்கிறது; எதுவும் ஏற்று கொள்ள படுகிறது. ஆனால் நளினி? இந்த பெண்ணிடமா இத்தனை உறுதி ?
நம்மை சிந்திக்க வைக்கும் அழகான கதாபாத்திரம் நளினி.
அதிகப் படிப்பறிவில்லா நளினியிடம் இருக்கும் துணிச்சல் படித்த பெண்கள் பலரிடம் இல்லாமல் போவதும் முரண். அன்பு என்ற விலங்கை அறித்தெறிய விரும்பாத மனமும் அதற்கான காரணமாக இருக்கலாம்.
திரு. கா.நா.சுப்ரமணியம் அவரின் மற்றும் ஒரு நாவல் நளினி.
அவரின் தமோஸ் வந்ததார், ஒரு நாள், அவரவர் பாடு போன்று நளினியும் - தஞ்சை பிராமண அக்ரகரத்தில் நடக்கும் ஒரு எளிமையானா கதை.
நளினி கதையின் நாயகி தன் சிற்றன்னையாள் வளர்க்க படும் மங்கை/மடந்தை. நளினியை தவிர்த்து சில பெண்களும் வந்து போகிறார்கள்.
கதையின் போக்கு கதை மாந்தரின் வாழக்கை முறை - set அண்ட் proceed மாதிரியான எழுத்து வடிவம். ஒருவருக்கும் ஒரு குறிக்கோள், வாழும் முறை மாற்றும் அவர்களின் நீதி நியாயம்.
1950 களில் ஒரு அக்ரஹாரம். அதன் எளிமையான மனிதர்கள். சிற்றன்னை கெடுபிடி செய்தாலும், பொருட்படுத்தாமல் வளைய வரும் துணிச்சலான பெண் நளினி. பாம்பா பழுதா என தெரியாமல் நளினியைப் போல் நம்மையும் தவிக்க விடும் சீதாராமன். மிகைப் படுத்தாமல் எழுதப் பட்ட மனப் போராட்டங்கள். சம்பவங்களும், எண்ணங்களும், உணர்வுகளும் சம விகிதத்தில் கலந்து செல்லும் சீரான நடை. க நா சு விவரிக்கும் அந்த காலத்து சித்திரம் சுவையானது. ஆனால் கதை செல்லும் போக்குக்கு, முடிவு சட்டென வருவது போல் தோன்றும்.