எனக்கு மர்ம நாவல்கள் படிப்பதில் கனமான நாவல்கள் படிப்பதிலே போல ஈடுபாடு உண்டு. ஓரளவுக்கு மர்ம நாவல்களையும் இலக்கியத் தரமுள்ளதாகச் சமீப காலத்தில் ஃபிரெஞ்சு நாவலாசிரியர் ஜியார்ஜஸ் ஸிமனான் என்பவர் பண்ணுகியார் என்பதைக் கவனித்த போது ஏன் அம்மாதிரிச் சில நாவல்கள் எழுதக் கூடாது என்று தோன்றிற்று. நான் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே மர்ம நாவல்கள் எழுதி வந்திருக்கிறேன். சக்தி விலாசம், ஆயுள் தண்டனை, கந்தர்வ லோகத்தில் கொலை என்று பல தொடர்கதைகளாகப் பல பத்திரிகைகளில் வெளிவந்த பின் சிதம்பரத்தில் என் தகப்பனார் கண்முன் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து அதற்குக் கண், காது, மூக்கு, கால், மனம், காலம் என்று எல்லாம் சேர்த்து ‘அவரவர் பாடு’ என்கிற நாவலை எழுதினேன்.
க.நா.சு எனப்படும் கந்தாடை நாராயணசாமி சுப்ரமணியம் தஞ்சை வலங்கைமானில் பிறந்தவர். எழுத்தாளராக வாழ்வது என்ற முடிவை இளம் வயதிலேயே தேர்ந்துகொண்டு வாசிப்பிலும் எழுத்திலும் நிறைவடைந்தார்.
க.நா.சு படைப்புகளில் சர்மாவின் உயில், வாழ்ந்தவர் கெட்டால், ஒருநாள், பொய்த் தேவு, அசுரகணம் முதலான பல நூல்கள் முக்கியமானவை. தமிழ் இலக்கியம் உலக இலக்கியத்திற்கு நிகராக நிற்க வேண்டும் என்ற கவலையில், தமிழின் மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்திலும், பல உலக இலக்கியங்களைத் தமிழுக்கும் மொழியாக்கம் செய்தார்.
சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை மொழிபெயர்ப்பு, விமர்சனம் முதலான பல துறைகளிலும் தரமாக இயங்கிய க.நா.சு தன் காலத்திற்கு மேலான பல பரிசோதனை முயற்சிகளைச் செய்திருக்கிறார். ராமபாணம், இலக்கிய வட்டம், சூறாவளி, முன்றில், Lipi - Literary Magazine போன்ற சிற்றிதழ்களை நடத்தினார்.
நவீன இலக்கிய முயற்சிகளுக்கான சங்கமாகச் செயல்பட்ட மணிக்கொடியின் முக்கிய அங்கத்தினர் இவர். 1986ஆம் ஆண்டு அவரது “இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்” என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி பரிசு பெற்றார். தமிழக அரசின் விருது, குமாரன் ஆசான் விருது போன்றவற்றால் கௌரவிக்கப்பட்டார்.
1988ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி டெல்லியில் மறைந்தார். 2006ம் ஆண்டு அவரது நூல்களை தமிழ்நாடு அரசு நாட்டுடமையாக்கியது. தமிழ் எழுத்தாளர் மற்றும் நாடக நடிகரான பாரதி மணி க.நா.சு வின் மருமகன்.
Ka.Na.Su, who is one of the figure heads of new literary movement in Tamil, is a noted literary critic and also a very good novelist. His incredible knowledge over indian and world literature made him explore a lot of genres and style of writing in his own works.
While with asuraganam he explored the james joycesque stream of consciousness writing, in this he explores murder mystery and how to represent it with sufficient literary quality.
Although the mystery is sufficiently well maintained throughout the narrative, it is the heightened sense of realism and deliberate rejection of pulpy elements like titillating sex and violence that makes this a very interesting read.
The story about the murder of a famous bootlegger and drug lord is slowly revealed through different P.O.Vs of his driver sambandham and the inspector Francis with interjections from the narrator. rather than focusing on just the murder this turns out to become an interesting character study and paints a very raw picture sans needless embellishment about the underworld.
with just 114 pages and individual chapters that are very concise this turned out to be a much more interesting read than what I expected. definitely would recommend this to casual as well as serious tamil literature aficionados
க.நா.சு (கந்த்தாடை சுப்ரமணியம்) எனக்கு மிகவும் பரிச்சயமான தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை எனும் ஊரில் பிறந்தவர். அவரின் எனது முந்தைய வாசிப்பு (ஒரு நாள்), மற்றும் இந்த நாவல் "அவரவர் பாடு" தஞ்சாவூர், திருவாரூர் பகுதிகளை மய்யமாக கொண்டு எழுதப்பட்டது
"அவரவர் பாடு" இரண்டு இரண்டாம் தர குற்றவாளிகளின் (ஒரு கைஆள் , ஒரு காவல் அதிகாரி) குரல்வழி சொல்லாக்கம். புலனாய்வு கதைக்களம். விக்ரம் சந்திரா-வின் sacred games , விக்ரம் வேதா தமிழ் திரைபடம் கூறிய விதத்தை ஓத்த மர்ம கதை.
வணிகரிதியான சுலபமா படிக்க கூடிய ஒரு நல்ல கதை . அத்தியாயங்கள் வெகுசீக்கிரம் படித்து முடிக்கக்கூடிய கால அளவில் தொகுப்பட்டுள்ளது. என்னக்கு பிடித்தவுள்ளது