தமிழ் சிறுகதை தொடங்கி 85 ஆண்டுகாலம் ஆகிறது. இந்த நீண்ட கால வெளியில் சிறுகதையில் இயங்கிய/இயங்கும் பெண் சிறுகதை எழுத்தாளர்களின் கதைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல்.
மிகப்பிரபலமான, புகழ்பெற்ற , அங்கீகாரம்பெற்ற, கவனிப்புப்பெறாத என்ற அடையாளங்களை கடந்து இத்தொகுப்புள் 54 பெண் எழுத்தாளர்களின் கதைகள் உள்ளன. பெண் எழுத்தாளர்களை பற்றி முழுமையான அறிமுகத்தை தந்து தேடலை தூண்ட செய்யும் தமிழின் முதல் ஆவணமாக வழிகாட்டுகிறது இந்த மீதமிருக்கும் சொற்கள்.
அ. வெண்ணிலா (A. Vennila, பிறப்பு: 10 ஆகத்து 1971) தமிழக எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். கவிஞர், சிறுகதை ஆசிரியர், கட்டுரையாளர், நாவலாசிரியர், ஆசிரியர், சிறு பத்திரிகை ஆசிரியர் என பன்முக ஈடுபாடுகளுடன் தமிழ் உலகில் இயங்கிவருகிறார். பெண்ணியம் சார்ந்த கருத்துகளை முன்னெடுத்து இலக்கியம் படைத்து வருவது வெண்ணிலாவின் தனித்துவமாகும். அன்றாட வாழ்வின் இன்னல்களை புனைவுகள் ஏதுமின்றி படைப்பாக்குவது இவரது ஆற்றலாகும். இவர் எழுதிய படைப்புகள் ஆங்கிலம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நூல்கள் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி அளவிலான பாடத்திட்டங்களில் பாடமாகவும் இடம்பெற்றுள்ளன. 2009-2010 ஆம் ஆண்டு காலத்தில் தமிழகத்தின் சமச்சீர் கல்வி பாடத்திட்டக் குழுவில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி புதிய பாடப்புத்தக உருவாக்கத்தில் பங்களிப்பு வழங்கியுள்ளார்.
54 பெண் எழுத்தாளர் எழுதிய அழகிய சிறுகதத்தொகுப்பு இந்த புத்தகம். I pick this book in a government library to read on women's day week, i recieved a lot of surprises through this book. It contains famous, infamous women authors from 1930-2014. We can get to know life at thier respective periods through their words. Maybe i expect a lot of feminist thoughts in thier words,but that's not true there are some beautiful stories which made a huge impact on me. Some of the writers who impressed me are 1.kutty Revathi 2.bama 3.sivashankari 4.kaveri And many more, so definitely give it a try. From this book one thing i get to know is it's just writers. There no gender in art and we should not necessarily read "women" only at a season of women's day.