நீதிமொழிகள், இனிமை மிகு பாடல், சபை உரையாளர் சாலமோன் மன்னனின் ஞானம் கடலளவு பரந்தது, வானளவு விரிந்தது. அவருடைய நீதிமொழிகள், இனிமை மிகு பாடல் மற்றும் சபை உரையாளர் மூன்று நூல்களுமே அற்புதமானவை. அவற்றைக் கவிதை நடையில் இந்த நூல் பதிவு செய்கிறது. ஒரு மெல்லிய நதியின் லாவகத்தில் இளைய தமிழில் சாலமோன் மன்னனின் பதிவுகளை வாசிப்பது சிலிர்ப்பூட்டுகிறது. சாலமோன் மன்னனைப் பற்றிய சிறு அறிமுகம். இரண்டு பெண்களுக்கிடையே சண்டை. இருவருக்கும் ஒவ்வொரு பச்சிளம் குழந்தை இருந்தது. இருவரும் ஓரே வீட்டில் தங்கியிருந்தார்கள். குழந்தைகளுக்கிடையே வெறும் மூன்று நாட்கள் இடைவெளி மட்டுமே. ஒருத்தி இரவில் தூங்கும்போது தனது குழந்தையின் மேல் புரண்டு படுக்க அது இறந்த