நடந்து முடிந்த நிகழ்வுகளை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் கேள்விபட்டதை மட்டும் வைத்துக் கொண்டு அடுத்தவர்களின் மீது குற்றசாட்டை அடுக்கும் போதும் தவறுகளும் ஏற்படும்.
நாட்டிய மங்கை ப்ரணீதா ஜெய்ப்பூரில் சந்திக்கும் பிரகாஷிடம் தன் மனதை தொலைத்தாலும் இருவருக்குள் ஏதோ தகராறு ஆகிறது (புத்தகத்தில் அந்தப் பதினாறு பக்கம் காணோம்). இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஸ்பெயினில் மீண்டும் சந்திக்கின்றனர்.அங்கே இருக்கும் இடத்தைப் பற்றிய வர்ணனைகளே புத்தகம் முழுவதும் பரவி இருக்கிறது.
பிரகாஷின் வீட்டில் திருடு போனதாக நினைத்த குடும்ப நகை ப்ரணீதாவின் கழுத்தில் இருப்பதே இருவருக்குள்ளும் பிரச்சனைகளை எழுப்புகிறது.குடிகார தந்தை சூதாட்டத்தில் அந்த நகையை வைத்து விளையாடி அவரின் நண்பனான ப்ரணீதாவின் தந்தையிடம் அது போய்ச் சேர்ந்தது என்ற உண்மை வெளிவந்த பிறகே பிரகாஷ் அவளின் பக்கம் முழுமனதுடன் சாய்கிறான்.