Jump to ratings and reviews
Rate this book

ஐம்பெரும் காப்பியங்கள்

சீவக சிந்தாமணி (உரைநடை): Civaka Cintamani

Rate this book
“சீவகன் காவியத் தலைவன்; அவனைச் சிந்தா மணியே’ என்று அவன் தாய் அவன் பிறந்தபோது அழைத்தாள்; அதனால் இந்நூலுக்கு ‘சீவக சிந்தாமணி’ என்று பெயர் வழங்குகிறது.
இதன் ஆசிரியர் திருத்தக்க தேவர் ஆவார். அவர் ஒரு சமணத் துறவி என்று அவருக்கு முத்திரை குத்தப்பட்டி ருக்கிறது. இந்தக் காவியத்தைப் பொருத்தவரை அவர் இளங்கோவடிகள் போல ஒரு மாபெருங் கவிஞர் எனவே கொள்ள வேண்டி இருக்கிறது. அவர் துறவு பற்றிக் கூறுவதால் அவரைத் துறவி என்று கூறிவிட்டனர் என்று தோன்றுகிறது.
இந்த நூல் கம்பராமாயணத்துக்கும், பெரிய புராணத்துக்கும் முன்பு தோன்றியது. வைணவ ஆழ்வார்களும் சைவப் பெரியார்களும் கடல் மடை திறந்தது போன்று பாமாலைகள் பாடிவிட்டுச் சென்று இருக்கின்றார்கள்.
அவர்களுக்குப் பின் தோன்றிய மதிக்கத்தக்க நூல்களுள் இது தலையாயது ஆகும்.
கல்வியில் பெரியவர் கம்பர் என்று கூறுவர்; காவியத்தில் திருத்தக்கர் முன்னோடி என்று கூற வேண்டி யுள்ளது. கம்பருக்கும் இவர் முன் மாதிரியாக விளங்கி யுள்ளார். இதன் தனிச் சிறப்பு ஏற்கனவே வழங்கி வந்த கதையை இவர் தன் கவிதையாற்றலால் அழகுபடுத்தி யுள்ளமை, சங்க இலக்கியப் பாடல்கள் அவற்றின் உவமை மரபுகள் வருணனைகள் இதில் மிகுதியும் இடம் பெற்றுள்ளன.
எனவே சீவக சிந்தாமணி பழந்தமிழ் இலக்கிய மரபுகளைக் காத்துத்தரும் ஒரு பெட்டகம் என்று கூறலாம். காலத்தில் முற்பட்டது என்பதால் மொழி நடை சற்றுப் பொருள் உணர அரியதாக இருக்கிறது. நச்சினார்க்கினியர் விளக்கவுரை தந்துள்ளார்.
நச்சினார்க்கினியர் தரும் செய்திகள் மிகவும் அரியன. பத்துப்பாட்டுக்கு உரை எழுதிய இப்பேராசிரியர் இதற்கும் உரை தந்திருப்பது பல அரிய வழக்குகளை அறிய உதவுகிறது.
இதனை உரைப்படுத்தி இதன் கதையை மற்றவர்களும் அறியச் செய்ய வேண்டும் என்று எடுத்துக் கொண்ட முயற்சியே இது.
கதை சுவை மிக்கது; வீரகாவியம், இதில் கூறப்படும் நீதிக் கருத்துக்கள் அருமையானவை; வாழ்க்கைக்குப் பயன் படுபவை: பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், திருக்குறள் தரும் நீதிகளை இந்நூல் ஆங்காங்குத் தருகின்றது. அவற்றில் இல்லாத நீதிக் கருத்துகளும் புதுமையாக இதில் தரப்படுகின்றன.
எனவே இது உரைநடையாக்கம் செய்வதால் தமிழ்ப் புதையலை வெளிக் கொணரும் பணி செய்ததாக ஒரு மன நிறைவு ஏற்படுகிறது.
இதனை நேர் கவி பெயர்ப்பாக எழுதினால் அது பொழிப்புரையாகுமே அன்றி உரை நடையாக்கம் ஆகாது. எனவே இதன் உள்ளடக்கமும் செய்திகளும் சிதையாமல் அதற்கு வடிவம் தரவேண்டிய தேவை ஏற்பட்டது. அதனால் இதை நேர் கவிபெயர்ப்பாக அமைக்காமல் இக்காலப் போக்கிற்கு இயையச் சுவையும் அழகும் நயமும் மிக்க உரை நடை வடிவம் தரப்பட்டுள்ளது.
மூல நூலினின்று இது அடிப்படையில் மாறுபட வில்லை; மாற்றும் உரிமையை எடுத்துக் கொள்ளவில்லை; அதன் உள்ளடக்கம் சிறிதும் வழுவாமல் புதிய வடிவம் தந்திருக்கிறேன்; அவ்வளவுதான்.
கதையின் இயக்கத்திற்குச் சில கூட்டல் கழித்தல்கள் தேவையாயின. முன்பின் இணைத்துக் கூற வேண்டுவதாக ஆயிற்று.
இருபதாம் நூற்றாண்டு இலக்கிய உரைநடைத் தமிழ் வேறு: அக்காலத் தமிழ் வேறு; ஆயிரம் ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு திருத்தக்கதேவர் சொல்நடையை இன்று எடுத்து எழுத இயலாது. உவமைகளும் ஒரு சில புதிது தேவைப்பட்டன. அந்த வகையில் மூல நூலினின்று சற்று வேறுபடுகிறது.
இது சமண நூல் என்று முத்திரை குத்தப்பட்டு விட்டது. எந்தச் சமயமும் மனித தர்மத்தையே கூறுகிறது. அதைக் கூறும் முதல் மனிதன் வழிபடும் கடவுள் ஆகிவிடு கிறார். அவர் பெயரில் இக்கருத்துகளுக்கு ஒரு சமய நெறி என்ற முத்திரை தரப்படுகிறது. அதன் கருத்துக்கள் கொள்கைகள் மானிட சமுதாயம் முழுவதும் ஏற்றுக் கொள்ளத் தக்கவையாக இருப்பதால் அவற்றை வேறு புதிய போக்கில் விளக்க வேண்டியது ஆயிற்று.
காலத்துக்கேற்ற வகையில் அறிவுக்கு ஏற்கக் கூடிய வகையில் அவை இங்குக் கூறப்பட்டுள்ளன. அவற்றை எடுத்துக் கூறப் புதிய உத்திமுறைகள் கையாளப்பட்டு இருக்கின்றன.

173 pages, Kindle Edition

Published December 1, 2017

43 people are currently reading
135 people want to read

About the author

Thiruthakkadhevar (திருத்தக்க தேவர்; Tiruttakkatevar) is of the Chola race who in his youth became a Jain ascetic and moved to Madhurai.

Civaka Cintamani (Tamil: சீவக சிந்தாமணி, romanized: Cīvaka Cintāmaṇi, lit. 'Jivaka, the Fabulous Gem'), also spelled as Jivaka Chintamani, is one of the five great Tamil epics. Authored by a Madurai-based Jain ascetic Tiruttakkatēvar in the early 10th century, the epic is a story of a prince who is the perfect master of all arts, perfect warrior and perfect lover with numerous wives. The Civaka Cintamani is also called the Mana Nool (Tamil: மண நூல், romanized: Maṇa nūl, lit. 'book of marriages'). The epic is organized into 13 cantos and contains 3,145 quatrains in viruttam poetic meter. Its Jain author is credited with 2,700 of these quatrains, the rest by his guru and another anonymous author.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
27 (27%)
4 stars
31 (31%)
3 stars
27 (27%)
2 stars
10 (10%)
1 star
4 (4%)
Displaying 1 - 10 of 10 reviews
Profile Image for Balaji M.
221 reviews14 followers
January 15, 2020
இவ்வாண்டில் முதலில் வாசித்து முடித்த புத்தகம்.
சற்றே சிறிய நூலானாலும், வாசித்து முடிக்க நாட்களாகி விட்டதற்கு காரணமுண்டு.

சீவகசிந்தாமணி காப்பியத்தை உரைநடை கதையாக சொல்லாமல், அதில் உள்ள சில பாடல்களை மேற்கோள் காட்டியும், அதற்கு பொருள் விளக்கங்களை கொண்டும் அமைக்கப்பட்டிருக்கிறது இந்நூல்.

சில பாடல்களுக்கு விளக்கங்களும் இல்லை. அதனால் பலமுறை படித்தபின்தான் பொருள் உணர்ந்து கொள்ள முடிகிறது.


சீவகனின் கதை தெரிந்ததுதான் என்றாலும், பாடல்கள் மூலமாகவும் அறிவதில், நமது பள்ளிகாலத்தில் படித்ததை நினைவு கூறமுடிகிறது.

அறம், நல்லொழுக்கம், வீரம், கொல்லாமை, புலனடக்கம், புலால் மறுத்தல், வீடுபேறு தொடர்பான பாடல்களே அதிகமாக இடம்பெற்றிருக்கிறது.

மேலும், கடைசி பக்கங்களில் குண்டலகேசி மற்றும் வளையாபதி பற்றியும் சில பாடல்களை மேற்கோள் காட்டியும் பொருள் விளக்கப்பட்டிருக்கிறது.


காப்பிய பாடல்களை முழுவதும் படித்து பொருள் உணர்வதற்கு பதிலாக, இப்படி கதைநலனாக காப்பியங்களை படிக்க ஆரம்பிப்பது சற்று இலகுவானதாகவே படுகிறது.

பொறுமையும், தமிழ்மொழியில் சற்றே பொருள் ஞானமும் உள்ளவர்கட்கு வாசிக்க ஏற்ற நூல்.
252 reviews33 followers
December 25, 2022
புத்தகம் : சீவக சிந்தாமணி
மூல வடிவம்: திருத்தக்க தேவர்
நாவல் வடிவில்: ராம் சுரேஷ்
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள் : 253
நூலங்காடி : Amazon

             🔆சிறு வயதில் இருந்தே, தமிழில் வரும் ஒரு கேள்வி, ஐம்பெரும் காப்பியங்கள் எது என்பதே..

              🔆சீவகன், ஏமாங்கத நாட்டின் இளவரசர். ஆனால் அவன் பிறப்பிற்கு முன்னே நடந்த சூழ்ச்சியினால் , வணிகன் கந்துக்கடனின் மகனாக வளர்கிறான்.தன்  குருவின்  மூலமாக  தான்  யார்  என்பதை  அறிகிறான் .  தன்  குருவிற்கு  கொடுத்த  வாக்கின்  படி  ஒரு  வருடம்  அமைதியாக  இருந்து , தன் நண்பர்கள்  மூலம்  திட்டம்  வகுக்கிறான் . கட்டியங்காரனிடம்  தன்  நாட்டை  எப்படி  காப்பாற்றினான்  என்பதே  சீவக  சிந்தாமணி .

            🔆வளையாபதி மற்றும் குண்டலகேசி பற்றிய தகவல்கள் முழுமையாக தெரியவில்லை. நாவல் வடிவில் படிப்பதனால், நாம் எளிமையாக புரிந்து கொள்ள முடியும்.


புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால்  இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி

சுபஸ்ரீனீ  முத்துப்பாண்டி
வாசிப்பை  நேசிப்போம்
Profile Image for Aravind.
32 reviews1 follower
January 22, 2017
A book that takes us to the era of hero worship, the protagonist seemingly infallible and excessively lionized. However this is the book to understand the impact that Jainism had on Tamil Sangam Literature. Those who can comprehend the mindset of such an era will find the book thoroughly enjoyable.
Profile Image for Krishnapreeya Gokulakrishnan.
12 reviews1 follower
November 7, 2019
Good that the author has tried presenting this as a novel which everybody can understand..but some narration are like relating to modern world which spoils the classic feel of the book.also could not find much details about the philosophical part of the story
Profile Image for Nachiappan Elango.
46 reviews
January 29, 2022
Seriously, how many marriages!? lol. Good fiction, a journey. antha kaalathu sci-fi commercial padam nu nenaikuren. Mass hero, liked by most of the young women, amazingly skilled, born as a prince but brought up as an ordinary man who fights back for his throne and kingdom.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Karthic Sivaswamy.
67 reviews3 followers
January 27, 2019
This was no where near a Kalki or Sandilyan. Rating for the way author have written this including English words and things from the present.
188 reviews3 followers
January 21, 2020
Great story

Interesting to read in simple Tamil... Promotes desire to read the original...could have provided a few extraçts from the original....
Profile Image for Srinivasan Balakumar.
35 reviews19 followers
February 26, 2020
Bad transformation of a great literature into simple Tamil. Makes us think about Seevagan as a womaniser than hero.
Profile Image for Vino Kumar Ponnu Krishnan.
87 reviews
January 27, 2022
சீவக சிந்தாமணியின் நாவல் வடிவம். சீவகன் பிறப்பு முதல் சபதம், திருமணம், சிறை, வனவாசம், போர், ஆட்சி, துறவி வரை.
Profile Image for Jonathan.
137 reviews2 followers
February 17, 2024
This story and Bahubali movie has many correlations. Also Ponniyin Selvan might be inspired from this story. Fantastic story, need to see in big screen.
Displaying 1 - 10 of 10 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.