அடக்கி ஆளுமை காட்டும் காதலில் வலிகள் மட்டுமே எஞ்சி இருக்கும்.
பெரும் செல்வ குடும்பத்தின் வாரிசாகவும் தனித் திறமைகள் அதிகம் கொண்ட ஹர்ஷா பின்னே பல பெண்கள் வந்தாலும் தனக்கான பெண்ணைக் கண்களும் மனமும் ஒரேசேர கண்டுபிடிக்கும் என்று சொல்லி வரும் பெண்களை எல்லாம் ஒதுக்கி தள்ளி தாயை இழந்த பிறகு மாமனின் உதவியால் கல்லூரிக்கு வரும் கிராமத்து பைங்கிளியான கனிகாவை காதலிக்க முடிவெடுக்கிறான்.
ஹர்ஷாவின் அழகு அவன் காதல் சொல்லும் போது கனிகாவை சம்மதிக்க வைத்துவிடுகிறது. எங்கே தன்னை விட்டு கனிகா போய்விடுவாளோ என்று எப்பொழுதும் ஒரு தவிப்புக்குள்ளே இருப்பவனுக்கு அவளின் மாமன் மகன் அகிலும் காதலிக்கிறான் என்று தெரிந்த பிறகு அவளைத் தன்னவளாக்கி கொள்ளப் போராடி காதலில் தோற்று பிரிவை உண்டாக்கிவிடுகிறான்.
இரண்டு வருடங்கள் காதலர்கள் பிரிந்திருந்து தன் மீது தான் தவறு என்று ஹர்ஷா உணர்ந்து கனிகாவை கட்டாயப்படுத்தி மணந்து கட்டாய உறவை ஏற்படுத்திய பிறகே அவளுக்குள் ஒளிந்திருந்த காதல் வெளி வருகிறது.
கதை முழுவதும் கண்ணில் எப்பொழுதும் கண்ணீரோடவே கதாநாயகி வலம் வந்து கொண்டிருக்கிறாள்.