சட்டத்துக்கு எதிராகச் செயல்படுபவர்களை எப்படி எல்லாம் ஏமாற்றி உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது போலீஸ்க்கு.
போலீஸ் கண்ட்ரோல் ரூம்க்கு கால் வருகிறது இருட்டில் நான்கு மனிநேரமாக ஒரு டாக்சி இருப்பதாக, சென்று பார்த்தில் அதில் 5 பாட்டில் இரத்தம் மட்டும் இருக்கிறது. போன் செய்தவரை தேடி போகும் போது அவர் மூன்று மாதத்திற்கு முன்பே இறந்ததாக அவர் மகன் தினேஷ் சொல்கிறான். வீட்டில் தேடும் போது பிரிட்ஜிக்குள் மற்றும் ஒரு பாட்டில் இரத்தம் இருப்பதால் தினேஷ் மற்றும் அவன் மனைவியைக் கைது செய்கின்றனர்.
வேலை தேடி பெங்களூர் வரும் விஷாலுக்கு அங்கே ஸ்டேஷனில் மிருணாவின் அறிமுகம் கிடைக்கிறது. தேடி வந்த நண்பன் வீட்டிற்குப் போகமுடியாமல் அந்த ஏரியா பகுதி கலவரத்தால் பாதிக்கப்படுவதால் மிருணாவின் வீட்டிற்குச் செல்கிறான். மிருணா தனக்குத் தெரிந்தவர் கம்பெனியில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்கிறாள் அங்கே செல்லும் போது தான் அந்தக் கம்பெனியின் முதலாளி மிருணா என்று தெரிகிறது.
விஷாலை தனக்குப் பிடித்திருப்பதாகச் சொல்லி திருமணத்திற்குச் சம்மதம் கேட்கிறாள். அவன் ஏற்கனவே மரியா என்ற பெண்ணைக் காதலிப்பதாகச் சொல்லி மறுத்துவிட்டாலும் கோயம்புத்தூர் கிளையில் வேலையில் அமர்த்துகிறாள் மிருணா. விஷாலுக்குத் தெரியாத உண்மை மிருணாவும் மரியாவும் பள்ளித் தோழிகள். விஷாலின் காதலை டெஸ்ட் பண்ணவே மிருணா அவனைக் கல்யாணம் பண்ணிக்கக் கேட்டது.
பாக்குத்தோப்பில் ஒரு பெண்ணை எரித்ததாகக் கேஸ் பதிவாகிறது.அவள் பெயர் கயல்விழி. பல கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு தினேஷ் வீட்டில் எடுக்கப்பட்ட இரத்தம் அவளுடையது என்று முடிவாகிறது. அதே நேரத்தில் தன் காதலியை ஒருவாரமாகக் காணவில்லை என்று விஷால் போலீஸில் கம்ப்ளைண்ட் கொடுக்கிறான்.
ஜாமீனில் வெளிவந்த தினேஷை தேடி அஸிஸ்டண்ட் கமிஷனர் அடியாளுடன் வருகிறார் கொலை செய்ய..ஏன் என்றால் இறந்த கயல்விழிக்கு தொடர்புடைய நபர் என்பதால்.... ஆனால் அங்கே இவர்களுக்காகக் கமிஷனர் ரகசிய போலீஸ்களுடன் காத்திருந்து கைது செய்கிறார். பிரஸ் மீட்டில் அனைத்து உண்மைகளும் வெளிவருகிறது. இரத்தம் மற்றும் இறந்த பெண்ணின் உடல் அனைத்தும் போலீஸ் கமிஷனர் ஏற்பாடு என்று...சில நாட்களுக்கு முன் விபத்தில் அடிப்பட்டுக் கோமாவில் இருந்த பெண்ணைப் பற்றித் தெரிந்து கொள்ள அவள் சூட்கேஸ்சில் குண்டு வைப்பதற்காக வந்த தீவரவாதி என்று தெரிகிறது.கோமாவிலே இறந்துவிடுவதால் இதற்குப் பிண்ணனியில் இருப்பவர்களைக் கைது செய்யத் தான் இவ்வளவு நாடகமும்.அந்த பெண் தீவிரவாதி தான் விஷால் காதலித்த மரியா.மரியாவின் மற்றும் ஒரு பெயர் தான் கயல்விழி.