ஊழல்வாதிகள் பெருகி கொண்டே போனாலும் அதை எதிர்த்து போராடும் விதைகள் முளைத்துக் கொண்டே தான் இருக்கிறது.
தங்க மச்சம் என்று சொல்லப்படும் தீவின் அதிபர் நேர்மையான அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கும் பழக்கத்தில் இருப்பவர் இந்த முறை தேர்ந்தெடுத்தது இந்தியாவை,முப்பத்திரெண்டு அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுக்கிறார் இதை கவர் பண்ண மீடியா பர்சன் பத்துப் பேர்களைக் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க அதில் ப்ரவீணும் தேர்வாகிறான்.
தமிழ்நாட்டில் தேர்ந்தெடுத்த அரசியல்வாதி இறந்து போக அது கொலையாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் ப்ரவீண் ஈடுபடும் போது பல உண்மைகள் தெரியவருகிறது. மருமகளைத் தவறாக அணுக போக அதில் தப்பிக்க முயன்றவளை கொலை செய்து டிரைவருடன் ஓடிபோய்விட்டாள் என்ற கட்டுக்கதை புனைந்ததும்,மிகமோசமான அரசியல்வாதியாக வாழ்ந்ததும் தெரியவந்ததுடன் ப்ரவீண் இரகசியமாக அந்த முப்பத்திரெண்டு பேர் பற்றிய தகவல்களைச் சேகரிக்கிறான், அதில் பாதிப் பேர் மோசமான பின்னணி கொண்டவர்கள் என்று தெரிந்த பிறகு அதைத் தங்க மச்ச தீவின் அதிபரிடம் சொல்ல நேரத்தை ஒதுக்க வேண்டுகோளும் வைத்து சந்திக்கும் போது சந்தோஷத்தில் மிதந்தே போகிறான்.
ஒவ்வொரு நாட்டிலும் மோசமானவர்களைத் தேர்ந்தெடுத்து கொலை செய்தால் பிரச்சனையாகும் என்று தெரிந்த அதிபர் நல்லவர்களுடன் சேர்ந்து அவர்களைத் தன் தீவிற்கு வரவழித்து ஸ்லோவ் பாய்சனை உட்கொள்ள வைத்து எதிர்காலச் சந்ததிகளுக்கு நல்வழி ஏற்படுத்தும் செயலை செய்கிறார் என்று தெரிய வந்த பிறகே ப்ரவீணின் பதட்டம் தணிகிறது.