எதையும் காரண காரியத்தோடு செய்தாலும், அதைப் பகிரங்கமாக வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்வது ஜென் தத்துவத்தின் அடிப்படை. ஒரு ஜென் துறவி பேசும் பேச்சுக்கு அர்த்தம் இருப்பதைப்போல், அவரின் மௌனத்துக்கும் அர்த்தமுண்டு. ஜென் துறவிகளின் மனநிலைக்கேற்பவே செய்கைகளும் அமையும். ஆடுவது, பாடுவது, சத்தம் போடுவது, கோபப்படுவது... என ஜென் கதைகளில், அந்தத் துறவிகள் செய்யும் செயல்களுக்கு அளவே இல்லை. “எண்ணங்களைத் தடை செய்யாதீர்கள்... அதுபாட்டுக்கு வந்து போகட்டும்!” - என்று அறிவுரை தருகிறார்கள் ஜென் குருமார்கள். இதில் சூசகமான ஒரு தத்துவம் உண்டு. வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிடுதல். இயல்பாக இருத்தல் என்கிற தத்துவம். இருந்தாலும், “நமக்கு அவசியம் இல்லாதவற்றை வாழ்க்க&