"ஜெயில்லே...” என்று நான் மெல்ல ஆரம்பிக்கிறேன். ராதா குறுக்கிட்டுச் சொல்கிறார்: “எனக்குத் தெரிஞ்ச வரையிலே ரோசமுள்ளவனும் மானமுள்ளவனும் ஜெயில்லே இருக்கான்!... அங்கே வேலை கெடைக்குது, கூலி கிடைக்குது, இட்லி சாம்பார், சாப்பாடு எல்லாம் கெடைக்குது... ‘இன்னிக்கு உனக்கு விடுதலைடா'ன்னு ஜெயிலர் சொன்னாக்கூட ‘அதுக்குள்ளேயா, இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டுப் போறேனே!'ங்கிறான்... அதைப் பத்தியெல்லாம்தான் உங்க கதிர்லே தொடர்ந்து வரப் போவுதே ?... அப்போ சொல்றேன்!” சொன்னபடி அவர், கதிருக்காக வாரா வாரம் என்னிடம் சொல்லிக் கொண்டு வந்ததைத்தான் நீங்கள் இப்போது புத்தக வடிவில் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். - விந்தன்
எம். ஆர். இராதா அவர்கள் பக்கத்துல உட்கார்ந்து கதை கேட்ட மாதிரி இருக்கு. உண்மையான சுயமரியாதைக்காரனா இருந்திருக்கிறார். அவர் செய்த தவறுகளையும் சேர்த்து பதிவு செய்துதான் இந்த புத்தகத்தின் சிறப்பு. நிறைய நாடகங்கள் பற்றி பேசுகிறார், குறிப்பாக திராவிட இயக்கத்தின் சமூக சீர் திருத்த கருத்துக்களை நாடகங்கள் வாயிலாக வெகுஜனங்களிடம் கொண்டு சென்றதை இவர் விளக்கும் இடங்கள் பெருமையாக இருக்கிறது. மூன்று மணி நேரத்தில் முடித்துவிடலாம். நடிகவேள் எம். ஆர். இராதா 🙏🙏
Interesting read. Completed in one sitting. Curious how journos and celebs were interactive in those days. Recommended by Radha Ravi in one of his interview s. Must read
சிறந்த தத்துவமான வாழ்க்கையை வாழ்ந்தும அதனை எடுத்துக் கூறியும் செனறுள்ளார் ராதா அவர்கள். இதில் மேலுும் சிறப்பான விடயம் என்னவென்றால் ராதா நம்முடன் அமர்ந்து பேசுவது போலே அமைந்திருக்கிறது இந்த நூள்.
பொதுவாக திரைத்துறை பற்றியோ அல்லது நடிக/நடிகைகளின் வாழ்க்கை வரலாறுகளையோ படிப்பதில்லை. ஏகப்பட்ட மிகைப்படுத்தல்கள் இருக்கும், அல்லது மற்றவருக்கு முதுகு சொறிதல் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த புத்தகத்தைப் பற்றி Abdul Muthalib அவர்கள் இந்த புத்தகத்திலிருந்து சில பக்கங்களை டிவிட்டர் தளத்தில் பகிர்ந்திருந்தார். நன்றாக இருந்தது. மேலும் ராதா அவர்கள் தீவிர இறை மறுப்பாளர். தான் நடித்த படங்களில் தான் சரியென நினைக்கும் கருத்துகளை எவர்க்கும் அஞ்சாமல் எடுத்துரைத்தவர். இதனால் இந்த புத்தகத்தை படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது.
பேட்டி பாணியிலான கட்டுரைகள். ஆனாலும் கேள்வி பதிலாக அல்லாமல் ஆசிரியரும் ராதா அவர்களும் சாதாரணமாகவே பேசிக்கொள்வது போல கட்டுரைகள் அமைந்திருந்தன. இதனால் படிப்பதற்கு சுவாரசியமாக இருந்தது. சிறு வயதில் வீட்டை விட்டு ஓடி வந்து பல்வேறு நாடக குழுக்களில் சேர்ந்தது, திரைப்படங்களில் நடித்தது, பெரியார் கொள்கைகளை நாடகமாக எடுத்து சென்றது என எல்லா நினைவுகளையும் பகிர்கிறார்.
பாய்சு நாடகக்குழுவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் இருந்ததாக குறிப்பிடுகிறார். சமீபத்தில் மொழி படத்தின் நகைச்சுவை காட்சிகளை பார்க்கும் போது கூட இதைப் பற்றி போகிற போக்கில் பிருத்வி சொல்வதாக ஒரு வசனம் வந்தது. மேலும் தமிழ் நாடகத்தின் தந்தையாக சங்கரதாச சுவாமிகள் அவர்களை சொல முடியாது என அதற்கான காரணத்தையும் கூறுகிறார். மேலும் எம்.சி.ஆர் அவர்களின் சில்லறைத்தனங்கள் என பல்வேறு தகவல்களைக் கூறுகிறார்.
ஒரு நல்ல வாழ்க்கை வரலாறை படிக்க விரும்பினால் நிச்சயமாக இந்தப் புத்தகத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.