மயக்குது உன் மதி முகமே... கதையை பற்றி சொல்வதற்கு முன்னாடி தெரியாத சில பல சுவையான விஷயங்கள் உங்களோடு....பகிர்வது விஜயஸ்ரீ பத்மனாபன் .. VP என்று bros யால் அழைக்கப்படும் நான்.. என் முதல் நாவல் "பூமரப்பாவை நீயடி" அறிஞர் அண்ணாவின் "ஓர் இரவு" எனும் கதை அதிசயமாக முன்பு பேசப்பட்டது..அதாவது ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களை அதில் காட்சிபடுத்தி இருப்பார்.. அத்தகைய தன்மையது அது...நான் எழுதியது விபத்தே தாங்க..அவர் கிட்ட வச்சி பார்த்துராதீங்க eee முத கதைக்கும் இப்பவே சொல்லிட்டேன் போல விட்ருங்கோ.. இப்ப மயக்கும் முகம் பற்றி இது என் இரண்டாம் நாவல் ... எனக்கு அற்புதமான அனுபவம் தந்தது... VP யாருன்னே தெரியாம இருந்த நேரத்தில் fb ல கலகம் வந்து உருட்டோ உருட்டுன்னு என் பேர
நிலையாக இல்லாத மனதில் எப்பொழுதும் சஞ்சலத்தின் சாயல் உள்ளுக்குள் இருந்து கொண்டே முடிவுகள் மாற்றியமைக்கும்.
தாயின் மருத்துவச் செலவிற்குப் பணம் தேவைப்படும் நேரத்தில் வாடகை தாயாகக் கிடைத்த வாய்ப்பை சௌமியா பயன்படுத்திக் கொள்கிறாள்.
பெற்றவர்களின் அருகாமை கூடக் கிடைக்காமல் வளர்ந்த ஆதிக் ஆடிய ஆட்டத்தால் அவனுக்கு வாரிசு உண்டாகாமல் போகும் சூழலில் மருத்துவம் கைகொடுக்க முதலில் வாடகை தாயாக ஏற்ற சௌமியாவை மனைவியாக ஏற்று அவளிடம் அவதிபட ஆரம்பிக்கிறான்.
இருபது வயது பெண் எதிலும் முதிர்ச்சி இல்லை, மூளையில் உதிர்க்கும் அனைத்திற்கும் செயல் வடிவம் கொடுத்து ஆதியை தன் இஷ்டத்திற்கு வளைத்து அவனை கிறுக்கனாகவே மாற்றி அவளின் பின்னே சுற்ற விடுகிறாள்.
அன்பின் பெருஉருவமான ராகினி கதாபாத்திரம் ஒற்றையாளாகச் சுழன்று தன் உருக்கத்தின் வழியே அக்கா மகள் சௌமியாவின் மீது இருக்கும் பாசத்தைக் காட்டினாலும் அவளைக் கண்டிக்காமல் விட்ட தவறால் இவ்வளவையும் இழுத்துவந்தது என்று சொன்னால் மிகை அல்ல.
கதையில் வரும் பெண் கதாபாத்திரங்கள் அனைத்தும் சுற்றத்தாரை அன்பில் நனைய வைக்கிறார்கள்