இராமாயணம் : Ramayanam : Ramayana : Ramayana for children : Ramayana of Valmiki "ராமாயணம்" பாரதத்தின் தொன்மையான இதிகாசங்களுள் ஒன்று. பெண்ணாசை எப்படிப் பட்ட வல்லவனுக்கும் அழிவைத் தேடித் தரும் என்பதை அழகாக விளக்கும் ஒரு அற்புதக் காவியம். அதை விட பெண் சிரித்ததால் வந்தது மகாபாரதம். பெண் படி தாண்டியதால் வந்தது ராமாயணம். ஆம்! சீதை மட்டும் லக்ஷமணன் போட்ட கோட்டை அன்று தாண்டாமல் இருந்திருந்திருந்தால் ராமாயணமே பிறந்து இருக்காது .ராமனின் பெருமையையும் உலகம் அறிந்திருக்காது. இந்த ஒப்பற்ற காவியம் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வால்மீகி சமஸ்கிருதத்தில் முதன் முதலில் எழுதிய இந்த ராமாயணத்தை இலக்கியத் தமிழில் அழகாக எடுத்து இயம்பியவர் கம்பர்.