Prapanchan (Tamil: பிரபஞ்சன்), is the pseudonym of S. Vaidyalingam (Tamil: சாரங்கபாணி வைத்தியலிங்கம்) a Tamil, writer and critic from Puducherry, India.
He started his career as a Tamil teacher in Thanjavur. He also worked as a journalist in Kumudam, Ananda Vikatan and Kungumam. In 1961, he published his first short story Enna ulagamada in the magazine Bharani. He was influenced by the Self-Respect Movement. He had published 46 books. In 1995, he was awarded the Sahitya Akademi Award for Tamil for his historical novel Vaanam Vasappadum (lit. The Sky will be ours) set in the times of Ananda Ranga Pillai. His works have been translated into Hindi, Telugu, Kannada, German, French, English and Swedish. His play Muttai is part of the curriculum in Delhi University and his short story collection Netrru Manidhargal is a textbook in many colleges.
எழுத்தாளர் பிரபஞ்சனின் முதல் சிறுகதைத் தொகுப்பு. எளிமையான நடையில் எழுதப்பட்டுள்ள இச்சிறுகதைகளில் அடங்கியிருக்கும் கருத்துக்கள் வாசகனுக்கு பிரபஞ்சன் என்கிற ஆளுமையின் மிகச்சிறந்த அறிமுகமாக அமைகின்றன. 'பிரும்மம்’ சிறுகதையை வாசித்து முடிக்கையில் " பூமி நமக்கு கற்பிக்கக் கூடும் எல்லாம் மரித்து விட்டதாய் தோன்றுகையில் துளிர்த்தலும், உயிர்த்தலுமான வாழ்வை" என்கிற பாப்லோ நெருடாவின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது. இந்த உலகில் இலக்கியங்களின் பணியும் இதுவே என்று எண்ணத் தோன்றுகிறது.
பிரபஞ்சன் என்ற படைப்பாளியின் வானம் வசப்படும் என்ற புத்தகத்தை ஒரு வருடம் முன்பு சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கியதோடு அப்படியே வாசிக்காமல் எனது ஏடகத்தில் கிடக்கிறது, இப்படி இருக்க நடப்பில் உள்ள 2020ஆம் ஆண்டு தை மாதம் சென்னை புத்தக கண்காட்சியில் ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் என்ற இந்த சிறு கதைத் தொகுப்பை வாங்க தூண்டியது பவா செல்லத்துரை அவர்களின் கதை யாடலில் நான் கேட்ட ருசி என்ற சிறுகதை தான்.
நாஞ்சில் நாடனின் சூடிய பூ சூடர்க என்ற சிறுகதை தொகுப்பை அடுத்து நான் முழுமையாக வாசித்த இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. இதில் வரும் பெரும்பாலான கதைகள் என்னை ஈர்த்தன.
எழுத்தாளர்கள் தொடாத ஒரு சில இடத்தை மிக துணிச்சலோடு தொட்டும் இருக்கிறார் பிரபஞ்சன். அம்மா மற்றும் முறிவு என்ற சிறுகதைகள் இதற்கு சாட்சி. நான் என் கல்லூரி பருவத்தில் என்னோடு ஒரே இருக்கையில் அமரும் சக மாணவனோடு நட்பாய் பேசும்போது எனக்கு தோன்றும் சில பாலியல் ரீதியான சந்தேகங்களை முன்வைப்பதுண்டு. அதில் ஒன்று உதட்டோடு உதடு முத்தத்தை நம் பெற்றோர்கள் பரிமாறிக் கொண்டிருப்பார்களா என்பது தான்? இந்த கேள்வியை எதிர் பார்க்காத என் நண்பன் அதெல்லாம் பரிமாறிக் கொண்டிருப்பார்க்கள் என்று கூச்சங்கலந்த சிரிப்புடன் பதிலளித்தான் . இது நடந்தது 2003 - 2004 ஆண்டு . இது போல் ஒரு அந்தரங்கத்தை விரசமில்லாமல் உளவியல் ரீதியாக தொய்வில்லாமல் கதையாகச் சொல்லி ஒரு உச்சத்தை 1974 - 1976 ஆண்டிலேயே தொட்டிருக்கிறார் பிரபஞ்சன் .
அவரது சொந்த வாழ்க்கையில் சந்திந்த மனிதர்களையும் அனுபவங்களையும் மையமாக வைத்தோ அல்லது அது போல் ஒரு உணர்வைத் தருவதற்காகவோ இவர் சில கதைகளை/புனை கதைகளை எழுதியிருக்கிறார் இவை மிக சுவாரஸ்யம் . மற்ற கதைகளை விட இவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதில் பிரும்மம் , சலிப்பு , தலைசாய்க்க , விழுது, சூரியனைப் பார்க்காமல் மற்றும் மாமன் உறவு இவை எல்லாமே முத்தான கதைகள் . காலங்கடந்த வாசிப்பிலும் என்னை ஈர்த்தது . பிரபஞ்சன் எனக்கு நெருக்கமான பல நினைவுகளையும் தனது கதைகளின் ஊடாக மீட்டெடுத்து கொடுத்திருக்கிறார்.
மீன் என்னும் சிறுகதையின் இறுதிக் காட்சி பாப்பின்ஸ் என்ற மலையாள திரைப்படத்தில் வரும் பால் பாயசம் என்ற நகைச்சுவை நிறைந்த கதையை நினைவுபடுத்தியது.
சலிப்பு என்ற சிறு கதையில் வரும் ஊடல் 2016 இல் வெளியான சேதுபதி திரைப்படத்தில் வரும் ஊடல் காட்சியை நினைவுபடுத்தியது.
மனிதநேயத்தையும் மனித உறவுகளையும் முன் நிறுத்தும் வகையாக தனது இறுதிக் கதையாக மாமன் உறவை தேர்ந்தெடுத்தது அருமை!
வளருகிற பிள்ளைகள் , அளவு கொஞ்சம் கூடவே வைங்க என்று பிரபஞ்சனின் அப்பா தையல்க்காரரிடம் சொல்வது இயக்குனர் விக்ரமன் இயக்கி 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த வானத்தைப் போல என்ற திரைப்படத்தில் வரும் காட்சியை நினைவுபடுத்தியது.
அவரின் ருசி என்ற சிறு கதை இடம்பெற்றிருக்கும் சிறு கதைத் தொ குப்பை தேடிக்கொண்டிருக்கிறேன்.
இது நான் பிரபஞ்சனின் எழுத்துக்களை வாசிக்கும் முதல் புத்தகம், சிறுகதைகளின் தொகுப்பு.
இதில் உள்ள பெரும்பான்மையாக கதைகள் நம் வாழ்வின் எதார்த்தங்களையே பிரதிபலிக்கிறது நாம் வாழ்வில் படும் அன்றாட சிக்கல்கள் தனிமை வெறுமை சந்தோஷம் துன்பம் துக்கம் என பல்வேறு உணர்வுகளை உள்ளடக்கிய சிறுகதைகள் தொகுப்பு. ஒவ்வொரு கதையும் முத்து முத்தாக சிற்பத்தை செதுக்கியது போல் செதுக்கியிருக்கிறார் நடை மிகவும் எளிதாகவும் அற்புதமாகவும் இலக்கிய நயம் உள்ளடக்கியவை. இக்கதைகளில் எனக்குப் பிடித்தமான கதைகள் பிரம்மம், அம்மா, மீன், பலி, முறிவு, தலை சாய்க்க, பிம்பம், சூரியனை பார்க்காமல், பகை இவ்வளவு கதை என் நெஞ்சில் இருப்பது ஒரு ஆச்சரியமே அந்த அளவுக்கு எழுதி இருக்கிறார். இவரின் நாவலை வாசிக்க தூண்டுகிறது இச்சிறுகதை தொகுப்பு.