பொறுமையான காத்திருப்பின் பலன் கைகளில் சேரும் என்ற வார்த்தை முழுமைக்கான கதைகளம் இது.
இராணுவத்தில் பெண்கள் பிரிவில் சேர வேண்டும் என்ற விருப்பம் கொண்ட சுபத்ரா தன் முயற்சியால் அதை நிறைவேற்றுகிறாள்.
சுபத்ராவிற்குப் பயிற்சி கொடுக்கும் அர்ஜுன் அவளை அங்கே பார்ப்பது பேரின்பமாகிறது ஏனென்றால் பள்ளிபடிக்கும் காலத்தில் இருந்தே அவளைக் காதலிப்பவன்.
நான்கு ஜோடிகள் அவர்களுக்குள் எப்படிக் காதல் வந்தது அதை வெளிப்படுத்திய முறை அதன் பிறகு அக்காதலை எப்படித் திருமணம் வரை கொண்டு சென்றார்கள் என்பதைச் சொல்லும் கதை.
கதையின் பின்புலமாக இராணுவத்தை வைத்து சுவாரசியமற்ற வகையில் எழுதியிருக்கிறார்கள்