பணம் வைத்து இருப்பவனே அதன் மீது மேலும் மேலும் காதல் கொண்டு அதைத் தன்னிடம் சேர்க்க துடிப்பான்.
பார்மா நிறுவனம் வைத்திருக்கும் குருதேவிற்கு வசந்தியின் ரத்தத்தால் உயிருக்கு போராடி கொண்டிருப்பவர்களைக் காப்பாற்றும் சக்தி இருக்கு என்று தெரிந்த பிறகு அதைப் பணமாக்க அவளுக்கு நிச்சயத்தை மாப்பிள்ளையின் மீது கொலை பழி விழுவது போல் செய்து திருமணத்தைத் தடுத்துவிட்டு தன் நண்பன் மகனுக்கு அவளைப் பெண் கேட்க செல்கிறார்.
எவ்வளவோ ஜாக்கிரதையாகத் திட்டம் போட்டாலும் ஒரு கடிகாரத்தின் மூலம் குருதேவ் அகப்பட்டுப் போகிறார்.